குல்பர்காவின் எல்லா சாலைகளும் மாபெரும் புத்தவிஹாரை நோக்கியே செல்கின்றனவாம். இந்த புத்தவிஹார் 75 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்திருக்கிறது. குல்பர்கா செடாம் செல்லும் ஹைவேஸ் சாலையில் சென்றால் இதை அடையலாம்.
ஒரு பொன்னிறமாலையில் கல்புராகியின் ( குல்பர்கா ) கந்தூர் மாலின் மதுரா இன்ன் ஹோட்டலில் இருந்து இந்த விஹாரைப் பார்க்கப் புறப்பட்டோம்.
மிகப் பிரம்மாண்டமான புத்தவிஹாரத்தின் முன்னால் அம்பேத்காரின் தம்மகிரந்தி யாத்ராவைச் சித்தரிக்கும் சிலைகள் கொள்ளை அழகு.
புத்த விஹாரை நோக்கி அண்ணல் அம்பேத்கார் செல்வது போலும் அவரைப் பின்பற்றி அவருக்கு நெருக்கமான அநேக தலைவர்கள் புத்தமதத்தைத் தழுவச்செல்வது போலும் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கார் சிலை செம்பிலும் மற்றையோர் சிலை சிமிண்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 14, 1956 இல் நாக்பூரில் நடைபெற்ற தம்ம கிராந்தி யாத்ராவை நினைவூட்ட அமைக்கப்பட்டுள்ளது.
புத்தவிஹாரின் முன் மாபெரும் தோட்டம் ஒன்று உள்ளது.
இருபுறமும் மணிகள் கட்டித் தொங்க விடப்பட்டு உள்ளன.
இறக்கையோடு கொம்பு முளைத்துச் சீறும் சிங்கங்கள். இவற்றைச் சிலோன் தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறேன் :)
மூன்று பெரிய ஆர்ச்சு வளைவுகள் கொண்டதா இருக்கு இதனோட எண்ட்ரன்ஸ் ஒவ்வொரு ஆர்ச்சிலும் இந்த தர்மச் சக்கரம் நட்ட நடுவில் பதிக்கப்பட்டிருக்கு. இந்த விஹாரத்தின் மெயின் கட்டிட நுழைவாயிலிலும் இந்தச் சக்கரம் அரைவடிவில் பதிக்கப்பட்டிருக்கு. கீழே உள்ல காரிடார் நடைபாதையில் புத்தரின் சிமெண்ட் சிலைகள் அங்கங்கே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
சங்கல்ப ஸ்தூபியான்னு தெரியல.
இது விஹாரத்தைச் சுற்றியுள்ள சிமிண்ட் தளம்.
நாற்புறமும் பாதைகள் அதன் ஒவ்வொரு முடிவிலும் 48 அடி உள்ள நாற்புறமும் சிங்கங்கள் பொறித்த அசோகர் தூண்கள் நான்கு உள்ளன. இவை துன்பம் , ஆசை/ பற்று, துன்பம் நீக்கல், துன்பத்தைப் போக்கும் எட்டு வழிமுறைகளை உணர்த்துகின்றன.
மிகப் பெரும் மணி, அசோகச் சின்னம், அம்பேத்காரின் தம்மகிராந்தி யாத்ரா சிலைகள் ஆகியன ஸ்பெஷல்.
புத்தவிஹாருக்கு நுழையுமுன்னே உள்ள வரவேற்பு ஸ்தூபி இது. நடுவில் தர்மச்சக்கரம் இருக்க இருபுறமும் முனிவர்கள் இருவர் நிற்கிறார்கள். ஒவ்வொரு படிநிலையிலும் நான்கு குதிரை மற்றும் நான்கு யானையில் வீரர்கள் பயணிக்கும் காட்சியும் அதன் ஓரத்தில் சீறும் காவல் சிங்கங்களுமாய் சமைக்கப்பட்டுள்ளது இந்த அலங்கார வளைவு.
குல்பர்காவில் இது போன்ற டூம் - மூடுமந்திரம் கொண்ட கோட்டைகள் ஏராளம்.
குல்பர்கா திரும்பும் வழியில் இன்னொன்று.
மறுநாள் பிதார் குருத்துவாராவுக்குச் சென்றோம். நான் பார்த்ததிலேயே மிகப் பிரம்மாண்டமான குருத்துவாரா இது.
பிதாரில் 1948 இல் கட்டப்பட்ட இந்த குருத்வாரா சீக்கியர்களின் சிறந்த வழிபாட்டுத்தலம். இது முதல் குரு குருநானக்கிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
தடாகம். இங்கே சிலர் புனித நீராடி எழுந்தார்கள். மேலேயே தங்கும் விடுதிகள் உள்ளன போலும்.
இதுதான் அந்த அம்ரித் குண்ட்.
1510 இல் இருந்து 1514 வரை தென்னிந்திய பகுதிக்கு விஜயம் செய்த குருநானக் அவர்களைக் காண வந்த மக்களுக்கு ஏற்பட்ட நீர்ப் பற்றாக்குறையைப் போக்கவே தனது பாதுகையால் சில கற்களை அகற்றி இச்சுனையை உருவாக்கினாராரம். எனவே அந்த அமிர்தகுண்டில் குருநானக்கின் பாத வடிவம் தங்கத்தால் செதுக்கி வைத்து வழிபடப்படுகிறது.
இங்கே நாங்களும் தலையில் முக்காடிட்டு ( கர்ச்சிப்பால் மூடி ) சென்று வணங்கினோம். அன்று நான் குர்த்தா & பைஜாமா அணிந்ததால் துப்பட்டா அணியவில்லை எனவே அங்கே இருந்த செக்யூரிட்டி ஒரு கர்சீப் வழங்க அதனால் தலையை மூடிச் சென்று வணங்கினோம்.

சீக்கிய குருத்துவார்களில் லங்கர் எனப்படு உணவு கூடங்கள் இருக்கும் எல்லோருக்கும் இலாச உணவு தரப்படும் அம்ரிட்சர் பொற்கோவில் சென்றிருக்கிறேன்
பதிலளிநீக்குஅழகான இடமாகத் தெரிகிறது குல்பர்கா புத்தவிஹார்.
பதிலளிநீக்குபுத்த விகாரை அருமையாக உள்ளது. படங்கள் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி பாலா சார்
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
நன்றி ஜம்பு சார்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!