கொஞ்சம் ஹெல்த் டிப்ஸ். எனவே மருத்துவ உணவுகள் பற்றி.
1. மிளகாய் , காந்தாரி :- அதிகம் உண்டால் வயிற்றுப் புண், குடற்புண் வரும்.
1. மிளகாய் , காந்தாரி :- அதிகம் உண்டால் வயிற்றுப் புண், குடற்புண் வரும்.
காலராவுக்கு
:- 4 மிளகாய் மண்சட்டியில் போட்டு நெய்விட்டு வறுக்கவும். புளியங்கொட்டை அளவு கற்பூரம்
போட்டு 500 மிலி நீர் விட்டு 50 கிராம் நெற்பொரி போட்டு நன்கு காய்ச்சவும். இந்த குடிநீரை
5 – 10 மிலி அளவு மூன்று வேளையும் குடிக்க வாந்தி பேதி குணமாகும்.
தலைவலி :- இரும்புக்
கரண்டியில் 30 மிலி நல்லெண்ணெய் விட்டு 2 வரமிளகாய் 5 கிராம் பச்சரிசி போட்டுக் காய்ச்சி
வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவர தலைவலி தீரும். வெப்பம், கண் எரிச்சல், உடல்வலி தீரும்.
நகச்சுற்று,
குதிகால்வலி :- மிளகாய்த்தூள், 5 கிராம், மஞ்சள், உப்பு சம அளவில் 5 கிராம் சேர்த்து நல்லெண்ணெயில்
காய்ச்சிக் கட்ட நகச்சுற்று பழுத்து உடையும். குதிகால்வலி சுகமடையும்.
2. தென்னை :- கல்பகுணம்.
:- தென்னம்பால். பதநீர் நாளும் தவறாது 48 நாள் 300 மிலி காலை அருந்திவர உடல் ஊட்டம்
பெறும். சிறுநீரகம் நன்கு செயல்படும். வயிற்றுப் புண் ஆறும்.
சிறுநீர்த்தாரை
எரிச்சல் :- இளநீரில் பனங்கற்கண்டு போட்டு ஊறவைத்து நாளும் காலை வெறும் வயிற்றில்
10 நாள் சாப்பிட வேண்டும். சிறுநீர்த்தாரை எரிச்சல், சூடு பிடித்தல் குணமாகும். மஞ்சள்
காமாலை, அம்மைக்கு இளநீர் சாப்பிடலாம்.
வயிற்றுப் புண்
:- தென்னம் பாளையை நாளும் சாப்பிட குணமாகும். தேங்காயை ஆட்டிப் பிழிந்து அதன் பாலை
அருந்தினாலும் வயிற்றுப்புண் ஆறும். தேங்காய்ப்பால், தேள்கடி விடம், நட்டுவாக்கிளி
விடம் ஆகியவற்றைக் குணமாக்கும்.
3. பிரண்டை. :- பிரண்டை - இதில் துவையல் பச்சடி செய்து சாப்பிட்டால் பசியைத் தூண்டும் .
வயிற்றுப்புண், மூலம், தாதுநட்டம் குணமாக்கும்.
4. மல்லிகை மாலதி.
மல்லிகை – மாலதி
– வாய்ப்புண் இதன் இலையை வாயில் போட்டு வெற்றிலைபோல் மென்று துப்ப வாய்ப்புண், நாக்குப் புண்,
உதட்டுப்புண், ஆறும். 3 நாள் இரு வேளை மெல்ல வேண்டும்.
தலைவலி :- இதன்
இலையுடன் சுக்கு சேர்த்து அரைத்து நெற்றியில் பூசுவதால் தலைவலி தீரும். ஆண்மைக்கு & தாய்ப்பால்
சுரக்காமலிருக்க இதன் பூ உதவும்.
தேள்கடி :-
இதன் வேரை மென்று சாற்றை விழுங்க தேள்கடி விடம் இறங்கும்.
5. செம்பரத்தம்பூ :- தங்கச்சத்து உடையது. ( 1 பூவில் ஒரு அரிசி எடை தங்கம் உண்டு )
இதயநோய் :-
இதன் பூவினை ( சிவப்பு ) தினம் காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் இதயம்
ஆற்றல் பெறும்.
கூந்தல் வளர்ச்சி
:- 250 மிலி தேங்காய் எண்ணெயில் 10 பூவிதழ்களைப் போட்டு 10 நாள் சூரிய வெப்பத்தில்
புடம் வைத்து இதழ் நீக்கி வடித்து வைக்கவும். இதனை நாளும் தேய்த்து வந்தால் முடி வளரும்.
இளநரை அகலும். கண்ணுக்கும் மூளைக்கும் குளிர்ச்சி. பச்சை இதழ்களை எண்ணெயில் போட்டுக்
காய்ச்சியும் பயன்படுத்தலாம்.
சிறுநீரகக்
கோளாறு:- இலை அல்லது வேர்ப்பட்டையை ஒரு பிடி எடுத்து 500 மிலி நீரில் போட்டு காய்ச்சி
காலை மாலை குடித்து வந்தால் சிறுநீர்த்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். சிறுநீர்த்தாரையில்
ஏற்பட்ட புண்ணும் குணமாகும். இந்தக் கசாயத்தில் கல்கண்டும், பனங்கருப்பட்டியும் போட்டுக்
காய்ச்சி அருந்தலாம்.
6. எலுமிச்சை :- இறையருள் கூட்ட ஏற்றது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம், பைத்தியம் போக்கும். அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக் கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும். விந்து நீர்த்துப் போகும். பேதி வயிற்றோட்டம் வாந்திக்கு சர்க்கரை எலுமிச்சைச் சாறு, 1 கிராம் அளவு உப்பு சேர்த்து இரண்டு வேளை கொடுக்கவும்.
கண் காது வலி
:- இச்சாறு 2 துளி விட குணமாகும்.
பித்தம் :-
இதன் சாற்றை வாயிலிட்டுச் சுவைக்கவும்.
வெப்பம் தணிய
:- இலையைப் புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டு
வர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு குறையும். தழும்பு குணமாகும்.
பைத்தியம்
:- இப்பழச் சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி சென்று குளிக்க வேண்டும். சீரகத்தை
இச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாட்களில்
பைத்தியம் குணமாகும்.
டைபாய்டு சுரம்
:- குடற்புண் காய்ச்சல், இதற்கு எலுமிச்சம்பழச் சாற்றில் பாலைக் கலந்தால் அது நீர்த்துத்
திரிந்து விடும். இதனை வடிகட்டிக் கொடுக்கலாம். பிற மருந்து ஊசி போட்டாலும் இதை துணை
மருந்தாகக் கொள்ளலாம்.
7. பப்பாளி :- நாக்குப் பூச்சி, கீரிப்பூச்சி, வெளியேற்றுவது. சிறுநீரைப் பெருக்கி கொழுப்பைக் கரைத்து உடலை இளைக்க வைப்பது.
வாய்ப்புண்
:- இதன் காயின் பாலை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவ வாய்ப்புண், உதட்டுப் புண் குணமாகும்.
உடல் எடை குறைய
பப்பாளிக்காயை வாரம் 3 முறை சமைத்துச் சாப்பிடவும். பழம் தினம் ஒரு துண்டு சாப்பிடலாம்.
மாதவிலக்கு
, 1, 2, மாத கரு கலைய :- பப்பாளிப்பழம் சாப்பிடவும்.
புலால் வேக
:- 2, 3 பப்பாளிக்காயைப் போட்டு வேக வைத்தால் பதமாக சுவையாக வேகும்.
பல்லரணை :-பல்லரணையால்
வீக்கம் ஏற்பட்டு இருந்தால் பாலைத்தடவ கரைந்து குணமாகும்.
8. துளசி. தீர்த்தம் நல்லது.
வெப்பம் தரும்.
சளியை வெளியேற்றும். பசி தூண்டும்.கருத்தடைச் சாதனம்.
சளிக்கு :-
துளசி இலையை காலை மாலை சிறிதளவு சாப்பிட்டு வந்தாலே சளி குணமாகும். குழந்தைகளுக்கு
வெற்றிலையை வாட்டி அதனுள் பத்து இலை துளசியை வைத்துப் பிழிந்து 3 நாள் கொடுக்க சளி
குணமாகும்.
குடும்பக் கட்டுப்பாடு
:- நாளும் காலை வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு
வந்தால் 6 மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.
தலைவலி :- நாய்த்துளசி
( திருத்துழாய் ) சாறு தடவ தலைவலி குறையும்.
8. வாழை :- வாழைத்தண்டு ஊளைச்சதை, தொப்பை, இதயநோயை இல்லாமல் செய்யும். சிறுநீர்க்கற்கள் அகற்றும். வயிற்றுப் புண் ஆற்றும்.
பாம்புக் கடி
:- அரைமணி நேரத்தில் 300 மிலி தண்டுச்சாறு குடித்தால் விஷம் முறிந்துவிடும். விஷம்
பெற்றவன் மயக்க நிலையில் இருந்தால் வாழை மட்டையில் படுக்க வைக்கவும். பின் சாறு கொடுக்கவும்.
சிறுநீரகக்
கல் :- காலை வெறும் வயிற்றில் 250 மிலி தண்டுச்சாறு குடிக்கவும். கடுமையான நிலையில்
3 நாள் தவறாது சாப்பிடவும். 1 கிராம் படிகாரம் இச்சாற்றில் போட்டு சாப்பிட்டால் சிறந்த
பலன் உண்டு.
தோல் நோய்,
எடை குறைய நீரிழிவு வயிற்றுப் புண் ஆகியன இச்சாற்றால் குணமடைகின்றது. பூவையும் கூட்டு
செய்து சாப்பிட வயிற்றுப் புண் ஆறும்.
வாழைப்பிஞ்சு
நல்லது கூட்டாக சாப்பிடலாம். முற்றிய காய் வாய்வு.
வாழை இலையில்
தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் அழகு, முகப்பொலிவு பெறும்.
பழம் :- இரஸ்தாளிப்பழம்
வயிற்றுக் கடுப்புக்கு ஏற்றது. பூ வாழை மலச்சிக்கலுக்கு நல்லது.
மலைவாழைப்பழம் குடற்புண் ஆற்றும். செவ்வாழைப்பழமும் குடற்புண் ஆற்றும். சாம்பல் வாழை உடலைத் தேற்றும்.
வாழைக்காய்ப்பழம் சூட்டைத் தணிக்கும்.
மலைவாழைப்பழம் குடற்புண் ஆற்றும். செவ்வாழைப்பழமும் குடற்புண் ஆற்றும். சாம்பல் வாழை உடலைத் தேற்றும்.
வாழைக்காய்ப்பழம் சூட்டைத் தணிக்கும்.
9. மருதோன்றி.
காரைக்குடியில் ஏதோ ஒரு வீட்டில் அடர்ந்திருந்த மருதோன்றிச் செடி.
மருதோன்றி
:- மருதாணி. நகச்சுற்று வராது.
புண்கள் :-
ஆறாத வாய்ப்புண், அம்மைப்புண் ஆகியவற்றுக்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வாய்
கொப்பளிக்கலாம். 3 – 5 நாளில் குணமாகும். அம்மைப் புண், கட்டிகளுக்கு நல்லது பூசலாம்.
முடி வளர
:- இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மிலி, + இதன் இலை 100 கிராம் போட்டுப் பொரித்து
எடுக்கவும். சிவப்பாக ஆகும் , நறுமணத்துக்கு 10 கிராம் சந்தனத்தூள் போடலாம். இத்தைலத்தை
நாளும் தேய்க்க நன்கு முடி வளரும்.
கால் ஆணி
:- இதன் வேர்ப்பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.
10. மாமரம்.
மாமரம் :- விட்டமின்
ஏ, சி.
கனிகள் மலச்சிக்கலைப்
போக்கும்.
கொட்டைப் பருப்பை
உலர்த்தி சூரணம் செய்து 10 கிராம் அளவில் மோரில் கலந்து 2 வேளை 3 நாள் சாப்பிட இரத்தபேதி,
வயிற்றுக் கடுப்பு, புண், மலக்குடல், ஆசனவாய் எரிச்சல் குணமாகும்.
மூலநோய் :-
மாங்கொட்டைப் பருப்பை நெய்விட்டு வறுத்து சூரணம் செய்து வைக்கவும். இச்சூரணம் 5 – 10
கிராம் அளவு காலை மாலை தேனில் சாப்பிட மூலநோய், வயிற்றுக் கடுப்பு, வயிற்றோட்டம், ஆசனவாய்
எரிச்சல் தீரும். பாலில் சாப்பிடலாம்.
மாம்பழம் அதிக
அளவில் சாப்பிட்டால் சூடாகி வயிற்றுக் கடுப்பு, புண், வாய்ப்புண் வரும். அதற்கு இதனுடைய
கொட்டையை அரைத்துச் சாப்பிட்டால் நலமாகி விடும்.
டிஸ்கி :-
இதையும் பாருங்க.
வல்லாரை சரஸ்வதியும் வெற்றிலை வேந்தனும்.
டிஸ்கி :-
இதையும் பாருங்க.
வல்லாரை சரஸ்வதியும் வெற்றிலை வேந்தனும்.
அழகிய படங்களுடன் அருமையான பயன்தரும் தகவல்கள்... நன்றி சகோதரி...
பதிலளிநீக்குபயன்மிகு பதிவு
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
பதிலளிநீக்குநன்றி கஸ்தூரி ரங்கன் சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!