நல்ல சிந்தனையாளன், முன்னேறுகிற பையன் என்ற அறிமுகத்தோடு என் முகநூல் தோழி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விமல் தியாகராஜன். உடனே அவர் வெப்சைட் சென்று பார்த்தேன் , பிரமித்தேன். கட் அவுட் கலாச்சாரத்திலும் சினிமா ரிலீஸிலும் தங்கள் இளமைப் பருவத்தை தற்கால இளைய சமுதாயம் வீணாக்கிக் கொண்டிருக்கும்போது தனது அபார உழைப்பு, பொதுநல சிந்தனையால் வியக்கவைக்கிறார் விமல் தியாகராஜன். கிட்டத்தட்ட நாலு லட்சம் பார்வைகள் கடந்த வலைப்பூவுக்குச் சொந்தக்காரர். பிரதமர் மோதியைச் சந்தித்து அளவளாவியர். !!! நம் வலைத்தளத்தில் வெளியிட மிகப் பொருத்தமான நபர் என்று உடன் நட்பில் இணைத்து நம்ம வலைத்தளத்துக்கான கேள்வியை முன்வைத்தேன். இன்று பதில் வந்துவிட்டது.
விமல்
தியாகராஜன் சென்னை L&T நிறுவனத்தில் (Asst. General Manager) துணைப் பொது மேலாளராக பணிப்புரிகிறார். தமிழ் பற்றும்,
சமுதாய நலனில் அக்கறை கொண்டுள்ளதாலும் “Be Positive Tamil” www.bepositivetamil.com என்ற இணைய இதழை 2014 ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார். இந்த இதழின் மூலம் மீடியாவின்
சமுதாய பங்கு 100% பாசிடிவாக இருக்க முடியும் என நிருபித்து வருகிறது
இவரது B+ குழு. மக்களிடம் நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிப்பதன் மூலம், சிறிய மாற்றமாவது சமூகத்தில்
நிகழும் என்பது இவரின் நோக்கமாக உள்ளது.
இந்தப் பத்திரிகை வாயிலாக தேசப்பற்று, சுயநலமின்மை, சுற்றுப்புறச்சூழல் நட்பு ஆகியவற்றை
கற்றுத்தரும் ஊக்குவிக்கும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார். சமூகத்தில் நம்மை
சுற்றியுள்ள ஆனால் அதிகம் வெளியில் தெரியாத சாதனையாளர்களை நேர்காணல்கள் எடுத்து இவரது
இதழில் வெளியிடுவது மற்றுமொரு சிறப்பம்சமாக உள்ளது.
தமிழில்
பாசிடிவான பகிர்வுகளை மட்டுமே தரும் ஒரே ஊடகம் B+ என்பதால், தொடக்கத்திலிருந்து
இதுவரை இவரது இணையத்தை 75000 க்கும் அதிகமான பார்வையாளர்கள், 4 லட்சத்திற்கும் மேல் பார்வையிட்டு, தங்கள் ஆதரவைத் தந்துள்ளனர்.
/// சுற்றுசூழலில் அடுத்தகட்ட அபாயம் என்னவா இருக்கும் என்பது பற்றி எழுதிக் கொடுங்க விமல் . ///
////
2042
அன்று காலை வெகு சீக்கிரமே
எழுந்து புறப்பட வேண்டியிருந்தது. என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அதில் நேரம்
காலை 8:40 எனவும், நாள் 14/06/2042
எனவும்
காட்டிக்கொண்டிருந்தது. 10மணிக்கு, மருத்துவரிடம் எனக்கு
அப்பாயின்மெண்ட். அந்த க்ளீனிக்கிற்குப் பயணம் செய்ய 32வது மாடியிலிருந்த என்
வீட்டிலிருந்து லிஃப்டில் கீழே இறங்கி, சாலையை அடைந்தேன். “இந்த 2042 ஆம் ஆண்டு ஆரம்பித்த நாளிலிருந்தே, நமக்கு ஒரே அலைச்சல் தான், வெயில் வேறு கொல்லுகிறது” என்று புலம்பிக்கொண்டே பேருந்து
நிறுத்ததிற்கு வந்தேன்.
நகரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், பேருந்து நிறுத்தங்கள், மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள
பெட்டிக் கடைகள், தொழிற்சாலைகள்
இருக்கும் பகுதிகள் என எங்கு நோக்கினும், சுத்தமானக் காற்றை பணத்திற்கு
விற்றுக் கொண்டிருந்தனர். ஆம், சுத்தமான ஆக்ஸிஜன் விதவிதமான சைஸ் டப்பாக்களில் (CONTAINERS),
அடைக்கப்பட்டு
கடைகளில் விற்கப்படுகிறது.
தனி நபர்களாய் வருபவர்கள், சிறிய டப்பாக்களை வாங்குகின்றனர்.
நான்கைந்து நண்பர்களாகவும், குடும்பமாக
வருபவர்களும், பெரிய
டப்பாக்களை வாங்கி பின் சிறிய டப்பாக்களில் பிரித்துக்கொள்கின்றனர்.
பணம் கொடுத்து வாங்க கூடிய
சூழ்நிலை உள்ளவர்கள் மட்டும் காற்றை வாங்கிக்கொள்ள, அவ்வாறு வாங்க இயலாதவர்கள், இருமிக் கொண்டும், முகத்தை மூடிக்கொண்டும் நடந்து
செல்கின்றனர். காற்றை வாங்கியவர்கள், இந்த டப்பாக்களை தங்களுடன்
இடுப்பிலோ, முதுகிலோ
பொருத்திக்கொள்கின்றனர். அந்த டப்பாக்களில் இருந்து அவர்களது மூக்கிற்கு மேல்
பொருத்தப்பட்டுள்ள ஃபில்டருக்குள் காற்று செல்ல ஏதுவாக டியுபுகள் உள்ளன.
அந்த நகரமே பரபரப்பாக இயங்கி
கொண்டிருக்கிறது. எங்கும் தூசு, புகை. காற்று மிக மோசமாக மாசடைந்து இருக்கிறது. எங்கு
நோக்கினும் 40, 50 மாடி கட்டிடங்கள், மணிக்கு 120 கிலோமீட்டருக்கு மேல் சீறிப் பாயும் வாகனங்கள், அதற்கு ஏற்றார் போல், பளபள என்று மின்னும் சாலைகள்.
சுருக்கமாக சொன்னால், அது ஒரு
ஸ்மார்ட் சிட்டி (SMART CITY).
மனிதர்களைத் தவிர மற்ற நகர
உயிரினங்களான காக்கை, குருவி, பூனை, நாய், போன்றவைகளின் சுவடுகளே இல்லை.
இயற்கை மிக மோசமாக மாசுபட்டு இருந்ததினால், அந்த இனங்களே அழிந்து போயிருந்தன.
தெருவோரம் இருக்கும் கடைக்குச்
சென்று ஒரு சிறிய டப்பா காற்று தாருங்கள் எனக் கேட்டு, 2000 ரூபாயினை தந்தேன். அதற்கு
கடைக்காரர், “என்னங்க, நேற்று இரவிலிருந்து விலை 200 ரூபாய் ஏறிவிட்டது, உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்கவும், நான் “ஓ, அப்படியா? எனக்குத் தெரியாதே, என்று என் பர்ஸை பார்க்க, பர்ஸில் பல கிரெடிட் கார்டுகளும், ஸ்மார்ட் கார்டுகளும் மட்டுமே இருக்கிறது. வேறு பணம்
இல்லை. ஏடிம் மெஷினோ (ATM MACHINE) ஒரு ஐந்து நிமிட தொலைவில் இருக்கிறது. என் கடிகாரத்தைப்
பார்த்தேன். அதில் நேரம் காலை 8:45 எனவும், நாள் 14/06/2042
எனவும்
காட்டிக்கொண்டிருந்தது. பேருந்து இன்னும் 3 நிமிடங்களில் வரும் என்று
டிஜிட்டல் போர்ட் (DIGITAL BOARD), அருகே சிரித்துக் கொண்டிருந்தது.
அப்போது இந்த நிகழ்வுகளை எல்லாம்
என் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த, 25 வயதுள்ள ஒரு வாலிபர், “என்னங்க, சில்லரை இல்லையா? நான் தருகிறேன்” என்று உங்களிடம் அந்த 200 ரூபாயினைக் கொடுக்க, நானும் கடையில் காற்றை
வாங்கிவிட்டு, வாலிபரிடம்
அந்த மூன்று நிமிடங்கள் உரையாடினேன்.
நான்: “ரொம்ப நன்றி தம்பி, நான் கொஞ்சம் அவசரமாக
க்ளீனிக்கிற்குப் போக வேண்டும், நீங்கள் இல்லையென்றால் இன்றைக்கு என்னால் காற்றை வாங்கிருக்க
முடியாது, என்
பேருந்தை தவறவிட்டிருப்பேன். அந்த மருத்துவரிடம் ரொம்பக் கஷ்டப்பட்டு
அப்பாயின்மெண்ட் வாங்கி வச்சிருந்தேன். இந்த காற்றை வாங்காமல் அத்தனை தூரம் பயணம்
செய்துவிட்டு வந்தால், அவ்வளவு
தான், அடுத்த
பத்து நாள் மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும்”
வாலிபர்: “பரவாயில்லைங்க, அதனாலென்ன, இன்றைய காலத்தில் 200ரூபாய் எல்லாம் பெரிய விஷயமா?”
நான்: “அது சரி தம்பி, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”
வாலிபர்: “நான் தனியார் நிறுவனம் ஒன்றில்
பணி புரிகிறேன். இன்று சனிக்கிழமை என்பதால், எங்கள் அலுவலகத்திற்கு விடுமுறை.
எனது நண்பர்கள் பத்து பேர் குழுவாக இருக்கிறோம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்
நாங்கள் அனைவரும், சுற்றுப்புறம்
இன்னும் மாசடையாமல் இருக்க, பொது
மக்கள் அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நல்ல முகாம்களை நடத்துகிறோம். சுற்றுப்புற சூழலை
பாதுகாக்க, மரங்கள்
வளர்ப்பது, தண்ணீரை
சேமிப்பது, இயற்கையைப்
பாதுக்காப்பது போன்ற பல செயல்களை மக்களுடன் சேர்ந்து செய்கிறோம். எங்களுக்கு
அடுத்து வரும் தலைமுறைக்கு இது தான் நாங்கள் செய்யும் முக்கிய கடமையாக
எண்ணுகிறோம்.”
நான்: “மிக அருமையான முயற்சி தம்பி, எங்கள் தலைமுறையில் உள்ள அனைவரும்
உங்கள் வயது இருக்கும்போது, இந்த
மாதிரி சமூக உணர்வோடு, சுற்றுப்புற
சூழல் குறித்து சிந்திருந்தால், இன்று நிலைமை இத்தனை மோசமாக இருந்திருக்காது. எனக்கு உங்கள்
வயது இருக்கும்போது, நாங்கள்
தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கினோம், இப்போதோ, காற்றையும் விலைக் கொடுத்து
வாங்குகிறோம். 50, 60 வருடங்களுக்கு முன் தண்ணீரையே விலைக் கொடுத்து வாங்கவேண்டிய சூழ்நிலை
ஒருநாள் வரும் என்று என் முன்னோர்கள் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
என் வயது ஆட்கள் நிறைய பேர் தவறு
செய்துவிட்டோம், எங்களை
மன்னித்துவிடுங்கள். இப்போது எனக்கு 55 வயதிற்கு மேலாகிவிட்டது, என் வயது ஆட்களை பார்த்தால் நான்
இந்தத் தவறை கூறிதான் வருத்தப்படுகிறேன்.”
வாலிபர்: “அதெல்லாம் நடந்து
முடிந்துவிட்டது. இனி நடக்க போவதையாவது, நல்ல முறையில் வைத்துக்கொள்வோம்.
இன்னும் 20வருடத்தில்
பெரும்நகரங்களில், வசிக்கவே
முடியாது என்ற சூழ்நிலை வரும் என்று காலையில் தான் செய்தித்தாளில் படித்தேன். நல்ல
வேளை, இந்த
நகரமயமாக்கல், இன்னும்
சென்றடையாத, ஆபத்தான
தொழிற்சாலைகள் இல்லாத சில கிராமங்களில் காற்று ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது. அங்கே
காற்றை இன்னும் பணம் கொடுத்து வாங்கும் நிலை வரவில்லை. ஆனால் அதுவும் கொஞ்சம்
வருடங்கள் தான், அதற்கு
முன், எந்தளவு
எங்களால் முடியுமோ அந்தளவு செய்யப்போகிறோம். வேலை நிறைய உள்ளது, நான் வருகிறேன்” என்றுக் கூறி வேகமாக
கிளம்பிவிட்டார்.
நான் இருப்பது ஸ்மார்ட் சிட்டி
என்பதால், பேருந்து
நிறுத்தத்தில் நான்கு அல்லது ஐந்து வரிசை (QUEUE) இருக்கும். யார் முதலில் பேருந்து
நிறுத்தத்திற்கு வருகின்றனறோ, அவரே வரிசையில் முதலில் சென்று நிற்பார். அவருக்கு அடுத்து
வருபவர்கள் எல்லோரும் அவருக்கு பின்னே வரிசையில் நிற்பார்கள். குறிப்பிட்ட
நபர்களுக்கு மேல் பேருந்தில் ஏற நடத்துனர் அனுமதிக்கமாட்டார். கூட்டத்திற்கு ஏற்ப
பேருந்துகள் துல்லியமாக வரும்.
அன்று சனிக்கிழமை விடுமுறை
என்பதால், ஒவ்வொரு
வரிசையிலும் ஆட்கள் நான்கு ஐந்து எனக் குறைவாகவே இருந்தனர். அந்த வாலிபர் என்னிடம்
பேசிமுடித்துக் கிளம்பியவுடன், என் பேருந்து வரும் வரிசையில் சென்று நின்றேன். ஸ்மார்ட்
சிட்டியின் சமீபத்து விதியின்படி முடிந்தளவு ஹாரன் ஒலியை ஓட்டுனர்கள்
குறைத்துக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை என்றால் தான், ஹாரன் ஒலி எழுப்ப வேண்டும் என
ஓட்டுனர்களுக்கு அரசு கட்டளையிட்டுள்ளது.
“இந்த முப்பது வருடங்களில் தான்
எத்தனை மாறிவிட்டது? இன்றைய
இளைஞர்களுக்கு தான் சமூகத்தின் மீது எத்தனை அக்கறை?” அந்த வாலிபருடன் நடந்த
உரையாடலையும், இப்போதுள்ள
விதிகளை பற்றியும் நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் பேருந்து
வந்துவிட்டது. நாங்கள் ஒவ்வொருவராக பேருந்திற்குள் ஏறி அமரவும், பேருந்து கிளம்புகிறது.
ஜன்னலோரும் கிடைத்த சீட்டில் அமர்ந்தபடி, ஜன்னலில் சற்று சாய்த்தபடி கண்களை
மூடி யோசித்தேன்.
லேசாக தூக்க நிலைக்கு நான் செல்ல, ஒரு திருப்பத்தில் பேருந்து பலமாக
பிரேக் போட, வேகமாக
ஹாரன் ஒலி எழுப்பப்பட்டது. “ஸ்மார்ட் சிட்டியில் தான் ஹாரன் ஒலி அடிக்கமாட்டார்களே, எதாவது விபரீதம் நடந்திருக்குமோ” என்று பதட்டத்துடன் தூக்கம்
கலைந்து, கண்
விழித்துப் பார்த்தேன்.
என் படுக்கையில் படுத்துக்
கொண்டிருக்கின்றேன். எனக்கு எதிரே தொங்கிக் கொண்டிருந்த காலண்டர், இன்றைய நாள் 14/06/2014
எனக்
காட்டவும், அந்த ஏசிக்
காற்றிலும் எனக்கு குப்பென்று வியர்க்க ஆரம்பிக்கிறது.
விமல் தியாகராஜன்.///
டிஸ்கி :- மிக அழகான கதையாவே எழுதிக் கொடுத்திட்டீங்க. தண்ணீர், காற்று மட்டுமல்ல . சவுண்ட் பொல்யூஷன் பத்தியும் அச்சுறுத்தலாத்தான் இருக்கு. ரொம்பவே பயமாத்தான் இருக்கு விமல் எதிர்காலத்தை நினைச்சா. இப்பவே வெளிநாடுகளில் ஆக்ஸிஜன் விக்கிறதா கேள்விப்படுறேன். இனி நிச்சயமா 2042 இல் இது இங்கேயும் நிகழ்ந்தாலும் நிகழும். மிக அருமையான கதை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி. உங்க வலைத்தளத்தில் சாதனையாளர்களைப் பத்தி எழுதி வர்றீங்க. நீங்களே மிகப் பெரும் சாதனையாளர்தான். உங்க இளமைச் சக்தியை ஆக்கபூர்வமான விஷயங்களில் செலுத்துவது பாராட்டுக்குரியது.
நிறையப் பேரை இந்த சிந்தனை சென்று அடைந்து சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்கவும் நீர் காற்று ஆதாரங்களைப் பாதுகாக்கவும் நம்மாலான முயற்சிகளை எடுத்துக்கிட்டே இருப்போம். சாட்டர்டே போஸ்டுக்காக மிக அருமையான விழிப்புணார்வுப் பதிவை அளித்தமைக்கு உங்களுக்கு நன்றி.எடுக்கும் முயற்சி யாவிலும் வெற்றி கிட்டட்டும். சக்தி துணையிருப்பாள். வாழ்க வளமுடன்.
பாசிட்டிவான பகிர்வுகளைத்தரும் ஒரே ஊடகம் B+ என்பதை மென்ஷன் செய்திருப்பது பாராட்டுக்குரியது ,,வெற்று அலட்டல்களில் பொழுபோக்கும் இளைஞர்களிடையேதமிழில்
பதிலளிநீக்குசமுதாய நலனுக்காக உழைக்கும் விமல் தியாகராஜன் பாராட்டுக்குரியவர் அவரை அடையாளம் கண்டு பதி விட்ட தேனம்மைக்கு நன்றி
விமல் தியாகராஜனுக்கு பாராட்டுகள். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. (முதல், கடைசிக்கு முந்தைய, கடைசி பத்திகளில் சில எழுத்துருக்கள் தெளிவாக இல்லை)
பதிலளிநீக்குMikkan Nandri Thenammai madam & Saraswati ma.. Dr.Jambulingam Sir, thavarukku mannikavum. Enna thavaru enbathai ennidam theriviungal @9840936201 or bepositive1000@gmail.com
பதிலளிநீக்குThanks for the article.
பதிலளிநீக்குஅருமை. விமல் தியாகராஜன் அவர்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிகவும் சிறப்பான பகிர்வு. இவரைப் பேட்டி கண்டு எழுமாறு சரஸ்வதி ராஜேந்திரன் அறிவுறுத்தியதாகத் தனித் தகவலில் என்னிடம் சொல்லியிருந்தீர்கள். அவருக்கும் நன்றி. இத்துடன் நின்றுவிடாமல் தொடர்ந்து விமல் அவர்களிடம் இன்பாக்ஸ், மெசஞ்சர், தொலைபேசி, குறுஞ்செய்தி போன்றவற்றிண் வழியே தொடர்பில் இருந்து அரிய அனுபவபூர்வமான செய்திகளைப் பகிரவும்.மீண்டும் நன்றி.
பதிலளிநீக்குபாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி (குறிப்பாக திரு.லதானந்த் மற்றும் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு). உங்கள் நட்புகளுக்கும் நமது வெப்சைட் www.bepositivetamil.com பற்றித் தெரிவியுங்கள். நல்ல விஷயங்கள் சமூகத்திற்கு எடுத்துக்கொண்டு போய் சேர்ப்பது, நம் அனைவரின் கடமை. நமது B+ குழு, படிக்கும் பழக்கம் குறித்து ஒரு இரண்டு நிமிட சர்வே எடுத்து வருகிறது. முடிந்தால் அதையும் fill up செய்யவும். லிங்க் இதோ.. https://docs.google.com/forms/d/1v7Ipw703nWigwX1Z645Kpyvx0T2Qq-jHgcmFvzU2q8s/edit
பதிலளிநீக்குதிருமதி.தேனம்மைக்கும், திருமதி.சரஸ்வதிக்கும் எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் போதுமானதாக எனக்குத் தெரியவில்லை..
என்றும் அன்புடன்,
விமல் தியாகராஜன்.
பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி (குறிப்பாக திரு.லதானந்த் மற்றும் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு). உங்கள் நட்புகளுக்கும் நமது வெப்சைட் www.bepositivetamil.com பற்றித் தெரிவியுங்கள். நல்ல விஷயங்கள் சமூகத்திற்கு எடுத்துக்கொண்டு போய் சேர்ப்பது, நம் அனைவரின் கடமை. நமது B+ குழு, படிக்கும் பழக்கம் குறித்து ஒரு இரண்டு நிமிட சர்வே எடுத்து வருகிறது. முடிந்தால் அதையும் fill up செய்யவும். லிங்க் இதோ.. https://docs.google.com/forms/d/1v7Ipw703nWigwX1Z645Kpyvx0T2Qq-jHgcmFvzU2q8s/edit
பதிலளிநீக்குதிருமதி.தேனம்மைக்கும், திருமதி.சரஸ்வதிக்கும் எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் போதுமானதாக எனக்குத் தெரியவில்லை..
என்றும் அன்புடன்,
விமல் தியாகராஜன்.
நன்றி சரஸ் மேம் !
பதிலளிநீக்குதிருத்தி இருக்கிறேன் ஜம்பு சார்
நன்றி கணேசன்
நன்றி வெங்கட் சகோ
நன்றி லதானந்த் சார்
நன்றி விமல் தியாகராஜன்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!