எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

திருக்குறள் சிறுகதைப் போட்டி. ( பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் )

மதிப்பிற்குரிய முகநூல் சகோதரர் திரு. கந்தையா முருகதாசன் அவர்கள் பக்கத்தில் பகிர்ந்திருந்த இந்தப் போட்டியை என் வலைத்தளத்தில் பகிர்வதில் பெருமையுறுகிறேன். பங்கு பெறுங்க. பாங்கா எழுதுங்க. பரிசை வெல்லுங்க. வாழ்த்துகள் மக்காஸ் :)


////அன்புடன் படைப்பாளிகளே முகநூல் நண்பர்களே
அனைவருக்கும் பணிவன்பான வணக்கம்.
நேற்றைய தினம் பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் வெகுவிரைவைில் திருவள்ளுவர் விழாவினையும் அதனையொட்டி இடம்பெறவிருக்கின்ற திருக்குறளை முன்னிறுத்தி நடத்தவிருக்கும் சிறுகதைப் போட்டி பற்றிய விபரத்தையும் புகைப்படப் பிரதியாக கீழே பதிவு செய்திருந்தோம். அந்த விபரம் சிறு எழுத்திலிருப்பதால் அவற்றை வாசித்து அறிந்து கொள்வதில் உள்ள சிரமத்தை உணர்ந்து பெரிய எழுத்திலும் ஒரே முறையில் வாசித்தறிவதற்காகவும் மீண்டும; பதிவு செய்து உள்ளோம்.

திருக்குறள் சிறுகதைப் போட்டி
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நாம் ஒழுங்கு செய்துள்ள திருவள்ளுவர் விழாவினை முன்னிட்டு சிறுகதைப் போட்டி ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.


தமிழ்நெறியாம் திருக்குறளை பரப்பும் நோக்கில் திருவள்ளுவர் விழாவையும், சிறுகதைப் போட்டியையும் நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.
தரப்பட்டிருக்கும் பத்து திருக்குறள்களில் ஒன்றினை தேர்வு செய்து, அதன் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, சிறுகதைகளை எழுதி அனுப்பும்படி உலகெங்கும் வாழும் படைப்பாளர்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

1. தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் (குறள் 67)
2. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள் 148)
3. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல் (குறள் 184)
4. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்நயம் செய்து விடல் (குறள் 314)
5. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் (குறள் 319)
6. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள் 391)
7. எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள் 423)
8. அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என் உடையரேனும் இலர் (குறள் 430)
9. உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டு ஒழுகுவார் (குறள் 921)
10. பிரிவுஉரைக்கும் வன்கண்ணராயின் அரிதுஅவர்
நல்குவர் என்னும் நசை (குறள் 1156)

திருக்குறள் சிறுகதைப் போட்டிக்கான விதிகள் :
-
தமிழ் மொழியைப் பேசும் எவரும், எந்த நாட்டில் இருந்தும் இப்போட்டியில் பங்கு பெறலாம்.
-
பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தினை சேர்ந்த உறுப்பினர்கள் இந்தப் போட்டியில் பங்குபெற்ற முடியாது.
-
கொடுக்கப்பட்டிருக்கும் குறள்களில், ஏதாவது ஒரு குறளின் கருப்பொருளை பேசுவதாக சிறுகதை இருத்தல் வேண்டும்.
-
ஒருவர் ஒரு சிறுகதை மாத்திரமே அனுப்பலாம்.
- அனுப்பப்படும் சிறுகதை, போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும்.
-
சிறுகதை ஏற்கனவே பிரசுரமானதாகவோ, வேறு போட்டிக்கு அனுப்பப்பட்டதாகவோ, வெளியிடப்பட்டதாகவோ இருக்கக் கூடாது.
-
சிறுகதை மின்னஞ்சல் ஊடாக அல்லது கடிதம் ஊடாக அனுப்பப்படல் வேண்டும்.
-
மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்படும் பொழுது, ஒருங்குறி வடிவில் (யூனிகோட்) அல்லது பாமினி எழுத்துருவில், மின்னஞ்சல் இணைப்பாக Subject (Dokument,Document) வடிவத்தில், ளரடிதநமவஇல் „திருக்குறள் சிறுகதைப் போட்டி' என்று குறிப்பிட்டு அனுப்பப்படுதல் வேண்டும்.
-
750 சொற்களுக்கு குறையாமலும் 2500 சொற்களுக்கு மேற்படாமலும் சிறுகதை அமைதல் வேண்டும்.
-
சிறுகதையின் கருப்பொருளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குறள் கதையின் எப்பகுதியிலும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கக் கூடாது.
-
கருப்பொருளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குறள் மின்னஞ்சலில் தனி இணைப்பாக அனுப்பப்படல் வேண்டும். கடிதம் மூலம் கதையை அனுப்புகின்ற பொழுது, தனியான ஒரு தாளில் குறளை எழுதி அனுப்புதல் வேண்டும்.
-
போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை அச்சு, இணைய ஊடகங்களில் வெளியிடுவற்கு „பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்திற்கு' உரிமை உண்டு.
-
சிறுகதை 30.04.2016 இற்கு முதல் கிடைக்கக் கூடியதாக அனுப்பப்படல்
வேண்டும்
முதல் பரிசு:10,000 இலங்கை ரூபாய்கள்
இரண்டாம் பரிசு: 5,000 இலங்கை ரூபாய்கள்
மூன்றாம் பரிசு: 2,500 இலங்கை ரூபாய்கள்
ஐந்து ஆறுதல் பரிசுகள்: 1000 ரூபாய்கள்
சிறுகதையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: iuetwkural@gmail.com

9 கருத்துகள்:

  1. :) தகவலுக்கு நன்றிகள். போட்டியில் கலந்துகொள்வோர் அனைவருக்கும் வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  2. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. போட்டியில் கலந்துகொள்வோர் அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. நல்ல போட்டி சகோ தகவலுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

  5. நன்றி விஜிகே சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    பதிலளிநீக்கு


  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. please show your postal address also it is really help to me beginners for send story for first prize those are difficult to write in tamil in system

    பதிலளிநீக்கு
  8. அஞ்சல் முகவரி எங்கே அம்மா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...