நெல் அண்டாவில் அகப்பையால்
கிளறிக்கொண்டிருக்கிறது பாக்கியத்தக்கா
வாரி வாரி இழுபடும் நெல்மணிகளில்
வரையப்படுகின்றன அதன் கைரேகைகளுடன்
அவரவர்க்கான சோறும்.
இடிந்துவிடாமல் அரைத்ததைக்
குருணையாகவும் பெருமணிகளாகவும்
சிலாத்திக் கொண்டிருக்கிறது
பாம்பைப் போல் படமெடுத்தாடும் அரிசியை
உஸ் உஸ்ஸென்ற ஒலியுடன்.
சுளகைத் தட்டி உமியைத் தூவும்
அதன் விரல்களில் தவிட்டு வண்ணத்தில்
உறைந்துகிடக்கிறது உழைப்பின் கல்வி.
மாறு உலக்கையில் தூளாகும்
இடியாப்பத் தூசிகள் மாசற்ற பேரழகியாக்குகின்றன
கருத்து நரை திரை விழுந்த முகத்தை.
கல் நெல் இல்லாக் கடை அரிசியும்
பாக்கெட் இடியாப்ப மாவும் புட்டுமாவும்
பாக்கியத்தக்கா இல்லாமலே வந்து சேர்கின்றன
இடிந்த அதன் கனவுகள் போல
புட்டுத் தூசியும் இடியாப்ப ஒட்டடையும் படிந்து
இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கிறது
அது கண் புகையப் புகைய
புகை உண்ட மண் அடுப்பும்.
கிளறிக்கொண்டிருக்கிறது பாக்கியத்தக்கா
வாரி வாரி இழுபடும் நெல்மணிகளில்
வரையப்படுகின்றன அதன் கைரேகைகளுடன்
அவரவர்க்கான சோறும்.
இடிந்துவிடாமல் அரைத்ததைக்
குருணையாகவும் பெருமணிகளாகவும்
சிலாத்திக் கொண்டிருக்கிறது
பாம்பைப் போல் படமெடுத்தாடும் அரிசியை
உஸ் உஸ்ஸென்ற ஒலியுடன்.
சுளகைத் தட்டி உமியைத் தூவும்
அதன் விரல்களில் தவிட்டு வண்ணத்தில்
உறைந்துகிடக்கிறது உழைப்பின் கல்வி.
மாறு உலக்கையில் தூளாகும்
இடியாப்பத் தூசிகள் மாசற்ற பேரழகியாக்குகின்றன
கருத்து நரை திரை விழுந்த முகத்தை.
கல் நெல் இல்லாக் கடை அரிசியும்
பாக்கெட் இடியாப்ப மாவும் புட்டுமாவும்
பாக்கியத்தக்கா இல்லாமலே வந்து சேர்கின்றன
இடிந்த அதன் கனவுகள் போல
புட்டுத் தூசியும் இடியாப்ப ஒட்டடையும் படிந்து
இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கிறது
அது கண் புகையப் புகைய
புகை உண்ட மண் அடுப்பும்.
//இடிந்த அதன் கனவுகள் போல புட்டுத் தூசியும் இடியாப்ப ஒட்டடையும் படிந்து இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கிறது அது கண் புகையப் புகைய புகை உண்ட மண் அடுப்பும்.//
பதிலளிநீக்குபுகை ..... என் காதிலும் புகை ..... தங்களின் அருமையான ஆக்கத்தைக்கண்டு :)
பாராட்டுகள் .... பாக்கியத்தக்காவுக்கும் அவளை உருவாக்கிய ஹனி மேடத்துக்கும்.
அருமை. இப்போது காண முடியாத காட்சிகள்.
பதிலளிநீக்குஅருமை.....
பதிலளிநீக்குபாராட்டுகள் சகோ.
அருமை அக்கா....
பதிலளிநீக்குமாறு உலக்கையில் தூளாகும்
பதிலளிநீக்குஇடியாப்பத் தூசிகள் மாசற்ற பேரழகியாக்குகின்றன
கருத்து நரை திரை விழுந்த முகத்தை.//
ஆஹா என்ன அழகியல்!! அருமை..
நன்றி விஜிகே சார்
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நன்றி வெங்கட் சகோ
நன்றி குமார் சகோ
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!