381. கற்பக விநாயகர் நகர். இது ஒரு ஏரியா பேர். அங்கே இருக்க வீடுகள்ல எல்லா
இடத்திலும் கற்பக விநாயகர். வாசல்ல, கேட்ல, நிலையில ஏன் க்ரில்லுல கூட.. :)
கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி சரணம்.
382. கவர்ன்மெண்டை எதிர்பார்க்காம சொந்த செலவுல கான்க்ரீட் ரோடு போட்டுருக்காங்க.
டேமேஜே ஆகாது.. இத வசதி இருக்க எல்லாரும் ஃபாலோ பண்ணலாம். பெட்டிஷன் மேல பெட்டிஷன் போட்டு கெஞ்சிக்கிட்டு இருக்காம.. :)
#முட்டுசந்து_சொகுசு_குடியிருப்புவாசிகள்
383.ஏதோ லாரி புகுந்து போற மாதிரி ஒரு சத்தம்..
பதறி ஓரங்கட்டினா..
சுவேகா சாம்ராட்டுனு ஒரு வண்டிதான் போச்சு பக்கத்துல.:)
இதுக்கெல்லாம் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்குதா என்ன..
384. பால்கனிங்கிறத நம்ம மக்கள் பழைய சாமான் போடுற இடம்னு வைச்சிருக்காங்க. அதுவும் வீட்டோட அங்கம் இல்லையா.
அழகான ஃப்ளாட்டுகளோட எண்ட்ரன்ஸ்ல இருக்க எல்லா முதல் வீட்டு பால்கனியும் கழிவை குப்பையை அடைச்சுவச்சு இருக்கு . திருஷ்டி பரிகாரமே தேவையில்லை. .
385. வெள்ளைக் கார்டு வைச்சிருக்கவங்களுக்கு ஏன் 5 கிலோ ஜீனி.
#சுகர்_அதிகமாகட்டும்னா :P
386 சட் சட்னு எதுக்கெடுத்தாலும் கோப வயப்படுறவங்க காதல் வயப்படுறவங்களுக்கு கவிதை எழுதுறது தீ மாதிரி.. பொறி பறக்கும்.
387. மலையாளப் படம் மாதிரி ஒரு ஆள் சைக்கிள்ல வந்து டீ குடிச்சுட்டு மேடான ரோட்டுல அரைமணி நேரம் திரும்பிப் போற மாதிரி ஒரு கேரக்டர் பத்தி பார்த்தது கேட்டது அறிஞ்சது தெரிஞ்சது எல்லாத்தையும் விரிவா விவரிக்கத் தெரிஞ்சவங்களுக்கு கதை எழுதுறது இன்ஸ்டண்ட் அல்வா மாதிரி.பாத்திரத்தோட ஒட்டணும். பிரிச்சு எடுத்துக்க வேண்டியது படிக்கிறவங்க கடமை.
388. பேப்பர்ல படிச்சது டிவில பார்த்தது லைப்ரரில வாசிச்சது நேரடியா தகவல் திரட்டினது வெப்சைட்ல சுட்டதுன்னு எல்லாத்தையும் கலந்து கட்டி கிச்சடி பண்றவங்களுக்கு கட்டுரை எழுதுறது லட்டு மாதிரி. சேர்த்துப் பிடிச்சு முந்திரி கிஸ்மிஸ் பதிச்சு அட்ராக்டிவா ஆக்கிடுவாங்க.
389. வீட்ல தலகாணி சைஸுக்கு புத்தகங்கள் இருக்குற லைப்ரரி முக்கியம். அப்புறம் வாயில நுழையாத பேரோடு அயல்நாட்டு எழுத்தாளர்கள் லிஸ்ட் கரெக்டா சொல்லத் தெரியணும். அவங்க படைப்புகளை அக்கு வேறு ஆணி வேறா மத்தவங்க பயப்படுறமாதிரி பிரிச்சு விளாசத் தெரியணும். அவங்கதான் க்ரேட் நாவலிஸ்ட். சூப்பரா தரவுகளோட நாவல்களைப் படைப்பாங்க. அப்புறம் முக்கியமான விஷயம் உள்ளுர் வம்பு உலக வம்பு எல்லாத்தையும் சமாளிக்கத் தெரியணும்.
390. இப்பிடி கவிதை கதை கட்டுரை நாவல் எல்லாம் போரடிச்சுதுன்னா அடுத்தது குறும்படம்தான். நேரா கேமிராவை எடுத்துட்டுப் போயி நினைச்சதெல்லாம் சுட்டு 2 நிமிட குறும்படமாக்கிடணும். ஏதோ அங்கே அங்கே தொடர்பில்லாத இயற்கை காட்சி எல்லாம் வந்துச்சுன்னா அது டைரக்டரோட விருப்பம்னு புரிஞ்சுக்கணும். அல்லது அவர் மக்களுக்கு ஏதோ சிம்பாலிக்கா சொல்ல வர்றார்னு அர்த்தம். :)
---- இன்னிக்கு செமயா கல்லா கட்டப் போறேன்னு நினைக்கிறேன். வெல்கம் மக்காஸ். :) :) :)
391. விதம் விதமான உணவுகளில் இருக்கும் மோகம் குறையும்போதுதான் வெயிட் குறையும்னு தோணுது :)
#மோகத்தைக்_கொன்றுவிடு. :P
392. பூம்பொழில்
வெண்முகம்
செஞ்சிவப்புக் கால்
பகல் தந்தை.
இரவுத் தாதி.
பற்றியிருக்கும்
தோளசைத்துக் கீழிறங்கிப்
பச்சைப்புல்லில் தவழும்.
ஒற்றை ஒற்றையாப்
பொறுக்கிப் பார்க்க
உள்ளங்கைக்குள்
நட்சத்திரச் சக்கரம்.
பிரசவித்த தாய் மரமும்
பச்சைக்குழந்தைப் பவளமல்லியும்
அவர்கள் வாசத்தை ஏந்தியபடி நானும்..
393. உழைப்பை நடிப்பென்று கூறும் உலகம் நடிப்பை உழைப்பென்று நம்புவதுதான் கொடுமை.
394.சொல்பேச்சு கேட்காமல்
இழுக்க இழுக்க வராமல்
பால்கனியில் ஒளிந்து
க்ரில் கம்பி பற்றி
துளிர்த் தலை நீட்டி
மழையாடிக் கொண்டிருக்கிறது
தொட்டியிலமர்ந்த
வெற்றிலைக்கொடி ஒன்று :)
395. யாரும் தொடுவதில்லை
தொட்டாலும் முறிக்கிறார்களென
பால் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது
எருக்கஞ்செடி.
நம்பிக்கை கொடுத்து
மாலையாக்கி மார்பில்
அணிந்து கொண்டது களிறு.
வடக்கின் வேரில்
செதுக்கி வழிபட்டால்
பீடை ஒழியுமென்று
பிள்ளையாரைப் பிடிக்கிறார்கள்.
விக்கினங்கள் தீருமென்று
பூசிப்போரைப் பார்த்து
விநாயகரைப் போலுருவில்
முறுவலித்து கிடக்கிறது
அர்க்க புஷ்பம்.
396. குளிரும் புகையும் கதகதப்பாக மரங்களில் துயில சொட்டுச்சொட்டாக வீழும் துளிகளூடே செங்காலோடு குதிக்கும் பவளமல்லியும் மஞ்சள் முக சரக்கொன்றையும், ஆகாச நீலத்தின் மடித்த இதழாய் சங்குப்பூவும், திருவிழாவின் காற்றாடியாய் நந்தியாவட்டையும், எங்கோ இருந்து மணம் வீசும் மகிழம்பூவும் பாதையின் முடிவில் ஒரு அம்மன் கோவிலும் அதற்குச் செல்லும் வழியெங்கும் செம்முகம் நாணி நிற்கும் செவ்வரளிகளும் மழைச் சிவப்புக் காவியினூடே காவியமாய்க் கோலங்களும் .. வாழ்தல் இனிது. தோட்டம் இருக்கும் வீடுகளைப் பார்த்தால் பொறாமையா இருக்கே.
#கொடுத்துவைச்ச_மனுஷங்க. :)
397. ///பெண்கள் துன்பப்படுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதைப்போலவே ஆண்களும் துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்லப்போனால், அன்றாட நடப்பில், பெண்கள் துன்பப்படுகிறார்களே என்று கரிசனப்படுகிற ஆண்கள், அந்தக் கரிசனம் காரணமாகவே அடைகிற துன்பங்கள் ரொம்ப நுட்பமானவை.///
-- வண்ணதாசன் தீராநதி பேட்டியில்..
அட இப்படி ஒரு தரம் கூட சிந்திச்சதில்லையே. கோபித்துக் கொண்ட ஒவ்வொரு தருணத்தையும் விசனப்பட்ட பொழுதுகளையும் விரக்தி அடைந்து பேசிய பேச்சுகளையும் நம் சரிபாதியானவரும் அடைந்து வருந்தியிருப்பாரோ என்று யோசிக்கவும் உணரவும் வைத்த எழுத்து..
398. நடுயாமம் நீள் இரவு
நெடும்பகல் குளிர்மாலை
இருவராடும் ஊஞ்சலாட்டம்
முன்பின் நகரும்
காற்றாய் கனலாய்
கனிந்து பெருகும்.
எதற்கும் அசையா
நெஞ்சம் நெகிழும்
உருகவைக்கும்
உளறவைக்கும்
பிடித்ததெல்லாம்
பித்தம் பித்தும்
கசப்பும் ருசிக்க
எதையுமருந்தாதிருந்தும்
வார்த்தைகள் சுழலும்
பேச்சுமோர் போதை.
399.தொண்டு கிழமெல்லாத்தையும் ஆதார் அட்டை வாங்க அழைச்சிட்டு வந்து படுத்துறாங்க அவங்க புள்ளங்க . பாங்க் லோன் அப்ளை பண்ணா ஆதாரம் கேக்குறாங்களாமே. கஷ்டகாலம். 8 மணி நேரம் நின்னுகிட்டே இருந்த ரெண்டு பேருக்கு மயக்கம் வந்துடுச்சு.
பொறந்தவுடனே கையில சிட்டிசன்ஷிப் பச்சை குத்திட வேண்டியதுதானே. பிறப்பிலிருந்து இருப்பு, இறப்பு வரை. ப்ரச்சனை இல்லாம போகும்.
400. வறண்டிருந்த மணல் மீது
பெய்து தீர்க்கிறது மழை
சுமந்ததை சுமத்தி
சுழற்றிச்சுழற்றி
ஜலபானம், ஜலக்ரீடை.
வண்டல்கள் கலங்க
தன் கரைகளைத் தேடி
குப்பைப் பூக்களோடு
காட்டுவேகத்தில்
அலமலங்கச் செல்லுமது
முன்னொரு காலத்தில்
நதி இருந்த இடமாம்.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. ஞானம் பிறந்த கதை.
2. ஸ்வரமும் அபஸ்வரமும்.
3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.
32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.
33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.
34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)
35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.
36. போதையும் போதிமரமும்.
37. மாயக் குடுவையும் மனமீனும்.

ரசிக்க வைக்கும் விமர்சனங்கள் சகோதரி...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு-- //வீட்ல தலகாணி சைஸுக்கு புத்தகங்கள் இருக்குற லைப்ரரி முக்கியம். அப்புறம் வாயில நுழையாத பேரோடு அயல்நாட்டு எழுத்தாளர்கள் லிஸ்ட் கரெக்டா சொல்லத் தெரியணும். அவங்க படைப்புகளை அக்கு வேறு ஆணி வேறா மத்தவங்க பயப்படுறமாதிரி பிரிச்சு விளாசத் தெரியணும். அவங்கதான் க்ரேட் நாவலிஸ்ட். சூப்பரா தரவுகளோட நாவல்களைப் படைப்பாங்க. அப்புறம் முக்கியமான விஷயம் உள்ளுர் வம்பு உலக வம்பு எல்லாத்தையும் சமாளிக்கத் தெரியணும்.//
சகோ ஜெயமோகனைச் சொல்றீங்க போலிருக்கு.
Jayakumar
சுவாரஸ்யமான சிறு குறிப்புக்கள்! நன்றி!
பதிலளிநீக்குவிமர்சனங்கள் அருமை
பதிலளிநீக்குசுவாரஸ்யங்கள் எண்ணற்றவை...399 ஆமாம் சகோ ரொம்பவே படுத்துறாங்க...396 ரசனை ரசனை..கவித்துவம்..ஆஹா...390 ஹஹாஹ்ஹஹ செம கல்லா கட்டிட்டீங்க சகோ...
பதிலளிநீக்குஅருமையான சிந்தனைகள்.....
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி டிடி சகோ
பதிலளிநீக்குஎழுதத் தெரியிற எல்லாரையும்தான் சொல்றேன் ஜெயகுமார் !
நன்றி சுரேஷ் சகோ
நன்றி நாகேந்திர பாரதி
நன்றி துளசி சகோ & கீத்ஸ். குறும்படம்.. உங்களைச் சொல்லல. :) ஹிஹிஹி.
நன்றி வெங்கட் சகோ.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!