எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 நவம்பர், 2015

சுயத்துக்காகவும்.



5..3. 2004.

*ஒப்பனைகள் ததும்பும் முகம்
பொய்யும் புனைசுருட்டும்
கள்ளத்தனமும் காமமும்
துகிலுரிகையில்
மருண்ட மானாய் மனசு.

*விநோதமான மனோபாவங்கள்
பூகம்பமாய் வெடிக்கையில்
சிதறிச் சரியும்
ஜீவிதமாய் மனசாட்சி.

*விதையறியா எண்ணங்கள்
வேர்பாய்ச்சிக் கிளம்பி
எனக்குள் இருக்கும்
இன்னொரு நான்.

*பாடலும் பாடுதலும்
அற்றுப் போன பூமியில்
அதிர்வலை வரிசையில்.

*விருதுகளும் வியப்புகளுமில்லா
விட்டில் பூச்சியாய்
வெளிச்சத்தில் மோதி
இருளின் விளிம்பில்

*சிலந்திகளுக்கான வலையில்
சிங்கங்கள் கூட.

*சோற்றுக்காக
மனிதர்கள் அலைகையில்
நான் என்னும் சுயத்துக்காகவும்.


6 கருத்துகள்:

  1. சோற்றுக்காக
    மனிதர்கள் அலைகையில்
    நான் என்னும் சுயத்துக்காகவும்.

    ஆஹா அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  2. நான் என்னும் சுயத்துக்காகவும்....

    அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி குமார் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...