எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 அக்டோபர், 2015

மூட்டைகள்.



3. 5. 86.

23. கூலிக்காரனை
அழுத்தும் பாரங்களாய்
இமைமேல் தூக்கம் சரியும்.


பாடங்களும்
பாதைகளும் காத்திருக்க
சில வண்ணத்துப் பூச்சிகள்
திசையற்றுப் பறந்து திரியும்.

மனனத் திறமையை
வைத்தே
புத்திசாலித்தனத்தை
அளவிடும் தேர்வுகள்.

நோட்டுப் புத்தகங்கள்
முதுகு பிளக்கவரும்
புதியதொரு கூலிக்காரனை
உருவாக்கும் பாலர் பள்ளி.

மூட்டைகள் ஏற்றப்படும்
இறக்கப்படும்
பழைய பாரங்களின்மேல்

கூலிக்காரனின் நரம்பு புடைத்தலாய்
இமைகள் தெறிக்கும்
அவனின் களைப்பாய் மெல்ல மூடும்.



6 கருத்துகள்:

  1. //மனனத் திறமையை
    வைத்தே
    புத்திசாலித்தனத்தை
    அளவிடும் தேர்வுகள்.//

    இன்னமும் தொடர்கிறதே.... :(

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. ஆம் வெங்கட் சகோ உண்மைதான். மாறவே இல்லை..

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரி.

    \\ நோட்டுப் புத்தகங்கள்
    முதுகு பிளக்கவரும்
    புதியதொரு கூலிக்காரனை
    உருவாக்கும் பாலர் பள்ளி .//

    அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.! சிறப்பானக் கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. சில கருத்துக்கள் எக்காலத்தும் பொருந்துமோ.....

    பதிலளிநீக்கு
  6. நன்றி கமலா ஹரிஹரன் மேம்.

    நன்றி எழில்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...