எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

காத்திருப்பு :-



காத்திருப்பு :-

*காகங்கள் கரைதல் போல்
இருப்புக் கொள்ளாமல்
நகரும் வாழ்க்கை.

8888888888888888888888888888888

தியாகம்.

*கிணற்றுச் சகடை தேய
உயிர்த்து வாழும்
தோப்பு மரங்கள்.

8888888888888888888888888888888888

மனிதன்.

*எழுந்து உழைத்து
உண்டு களைத்து
ஊர்வம்பு பேசி
கட்டிடக் கூடு திரும்பும்
காகமாய் மனிதன்.

88888888888888888888888

நீ ஒரு கடல்.
மூழ்கும்போதுதான் தெரிந்தது
நீ என்னை அலையாக
அடித்துச் சென்றது.

88888888888888888888888888

எண்ணங்கள் சேறுதான்
அதனால்தான் உன் நினைவுகள்
தாமரையாய்ப் பூக்கின்றன. 

888888888888888888888888888

அன்புப் ப்ரவாகத்தில்
எழுத்துக்களாய்
என் நிஜம் கரைபடும்.

எங்கெங்கும்
பார்வைச் சிறகுகள்
உதிர்க்கும் பறவைகள்.



4 கருத்துகள்:

  1. எண்ணங்கள் சேறுதான்
    அதனால்தான் உன் நினைவுகள்
    தாமரையாய்ப் பூக்கின்றன.

    வாவ்...........

    பதிலளிநீக்கு
  2. தாமரையாய்ப் பூக்கும் எண்ணங்கள்... நல்ல கற்பனை.

    அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி செந்தில் சகோ

    நன்றி நாகேந்திர பாரதி

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...