காத்திருப்பு
:-
*காகங்கள்
கரைதல் போல்
இருப்புக்
கொள்ளாமல்
நகரும்
வாழ்க்கை.
தியாகம்.
*கிணற்றுச்
சகடை தேய
உயிர்த்து
வாழும்
தோப்பு
மரங்கள்.
8888888888888888888888888888888888
மனிதன்.
*எழுந்து
உழைத்து
உண்டு
களைத்து
ஊர்வம்பு
பேசி
கட்டிடக்
கூடு திரும்பும்
காகமாய்
மனிதன்.
88888888888888888888888
நீ ஒரு
கடல்.
மூழ்கும்போதுதான்
தெரிந்தது
நீ என்னை
அலையாக
அடித்துச்
சென்றது.
88888888888888888888888888
எண்ணங்கள்
சேறுதான்
அதனால்தான்
உன் நினைவுகள்
தாமரையாய்ப்
பூக்கின்றன.
888888888888888888888888888
அன்புப்
ப்ரவாகத்தில்
எழுத்துக்களாய்
என்
நிஜம் கரைபடும்.
எங்கெங்கும்
பார்வைச்
சிறகுகள்
உதிர்க்கும்
பறவைகள்.
எண்ணங்கள் சேறுதான்
பதிலளிநீக்குஅதனால்தான் உன் நினைவுகள்
தாமரையாய்ப் பூக்கின்றன.
வாவ்...........
நறுக் கவிதைகள் நன்று
பதிலளிநீக்குதாமரையாய்ப் பூக்கும் எண்ணங்கள்... நல்ல கற்பனை.
பதிலளிநீக்குஅனைத்தையும் ரசித்தேன்.
நன்றி செந்தில் சகோ
பதிலளிநீக்குநன்றி நாகேந்திர பாரதி
நன்றி வெங்கட் சகோ