எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

விவேகானந்தரும், கல்யாணும், அட்சயாவும் அரிமாவும். - விருதுகள் பகுதி - 2.

முகநூல் நண்பர் சதீஷ் பல்லாவரம் லயன்ஸ் க்ளப்பில் செயலாளராக இருக்கிறார். முகநூலில் என்னுடைய இலக்கியப் பங்களிப்பைப் பார்த்துவிட்டு ஆசிரியர் தினத்தன்று  உரையாற்ற அழைத்திருந்தார். குரோம்பேட்டை ஸ்ரீமதி ராம்குவார் தேவி ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயாவில் ஆசிரியர் தினத்தில்  (செப்டம்பர் 5 )கிட்டத்தட்ட 110 ஆசிரியைகளுக்கு TEACHERS ROLE IN TODAYS ATMOSPHERE  - இன்றைய சூழலில் ஆசிரியர்களின் பங்கு -- என்ற தலைப்பில் உரையாற்றினேன்.



4. இன்றைய மாணவர்களுக்கான இணையப் பங்களிப்பு, இணையப் பயன்பாடு, நீதி நெறிகள், விளையாட்டு , கைத்தொழில் வகுப்புகள், யோகா, தியானம், சுற்றுச் சூழல் கல்வி , மாணவர்களுடனான ஆரோக்கியமான உறவு முறை, மாணவர்களைப் பண்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் பணி சம்பந்தமாக ஆசிரியர்களோடு நிறையப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பல்லாவரம் லயன்ஸ் க்ளப்புக்கு நன்றி.  அப்போது வழங்கப்பட்ட விவேகானந்தர் இவர்.( ஒடிசியின் பெருமாளையும் கொடுத்தார்கள். )  எனக்குப் பிடித்த விவேகானந்தரை ஆசிரியர் தினத்தில் பெற்றது மிகப் பெரும் விருதுக்குச் சமம். :) நன்றி சதீஷ். :)

5. ரியாத் தமிழ்சங்கம் நடத்திய கல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில்  (2013 ஃபிப்ரவரியில்) மூன்றாம் பரிசு கிடைத்தது.அதற்கான விழா 23, டிசம்பர் 2013 இல் சிறப்புற நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்வில் சகோதரர் ஷேக் முகம்மது எனக்கான நினைவுப் பரிசை சபையில் பெற்றுக் கொண்டிருக்கிறார்.சீரிய முயற்சி எடுத்துத் தங்களின் இக்கட்டான சூழ்நிலையிலும், பணிச்சுமையிலும் கூட இந்த விழாவைச் சிறப்புற நடத்திப் பரிசுகள் வழங்கி இருப்பதற்கு இவர்கள் இருவருக்கும் மற்றும் ரியாத் தமிழ்ச் சங்கத்துக்கும் -- (ஹைதர் அலி, ராஜா, ஜோஸ் அலக்ஸாண்டர், ஷேக் முகம்மது ஷாஜகான் )  வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

என்னுடைய வங்கிக் கணக்கில் ரூபாய் 2, 000 பரிசுத் தொகை டெப்பாசிட் செய்து எனக்கான விருதையும் கூரியரில் அனுப்பி வைத்துள்ளார் கவிஞர் பக்ருத்தீன் இப்னு ஹம்துன் . அவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள். மேலும் எனக்கான விருதையும் கூரியரில் அனுப்பித் தந்திருக்கிறார். அதற்கும் நன்றிகள்.

6. அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினமான ஏப்ரல் 14 ( 2011)அன்று( அதற்கு முன்பாகவே ஏப்ரல் 8 அன்று ) அட்சயா பவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியைகளை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணாக்கருக்கு அம்பேத்கார் பற்றிக் கூறவும்., ஆசிரியைகளுக்கு விருது அளிக்கவும் அட்சயா பவுண்டேஷன் நிறுவனர் மணிமேகலை அழைத்திருந்தார். அப்போது அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக எனக்கு இந்த விருதை தலைமை ஆசிரியை லூர்து ராணி வழங்கினார்.


7. அன்னபட்சிக்கு அரிமா சக்தி விருதை திருப்பூரிலிருந்து  கனவு சுப்ரபாரதிமண்யன் அவர்கள் ஹைதராபாத் வந்திருந்து நிறை தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.இதை ஒருங்கிணைத்த சாந்தா தத் மேடம் கலந்து கொள்ளச் சொல்லி கைபேசியில் அழைத்து இருந்தார்கள். இடம் பற்றி விலாவாரியாக கேட்டுத் தெரிந்து கொண்ட நான் அன்று செல்ல இயலாமல் கால் ஸ்லிப்பாகி விட்டது. எனவே என் அன்பிற்குரிய பெரிய மகன் திருவேங்கடநாதன் சென்று என் சார்பாக வாங்கி வந்து கொடுத்தான். அந்த விருது இதோ.

நன்றி சாந்தாதத் மேடம் & கனவு சுப்ரபாரதிமணியன் சார். & நன்றி வெங்கட் :)

டிஸ்கி :- இதையும் பாருங்க. முதல் மூன்று விருதுகள் இங்கே இருக்கு.

விருதுகள் 

1. ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்தில் வழங்கப்பட்ட சீர்மிகு விருது.

2. விமன் எம்பவர்மெண்ட் அவார்ட் - மகளிர் தினம். சாஸ்த்ரிபவன்.

3. மதர் தெரஸா அவார்ட். மகளிர் தினம் சாஸ்த்ரி பவன்.

டிஸ்கி :- நன்றி முகநூல் மற்றும் வலைத்தள நட்பூக்களுக்கு :)

5 கருத்துகள்:

  1. விருதுகள் தொடருட்டும்,வெற்றிகள் குவியட்டும்---சரஸ்வதி ராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    வெற்றிமேல் வெற்றி கிட்டி விருதுகள் மேலும் மேலும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் சகோதரி! விருதுகள் தொடரட்டும்! தங்களது திறமைகளை பார் போற்றட்டும்! இறைவன் துணை புரிய எங்கள் பிரார்த்தனைகள்!

    பதிலளிநீக்கு
  4. நன்றி சரஸ் மேம்

    நன்றி கோபால் சார்

    நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...