எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 23 ஏப்ரல், 2015

திரு உமாகாந்த் தமிழ்க்குமரன் அவர்கள் பார்வையில் அன்னபட்சி.


நூல் : அன்னபட்சி
ஆசிரியர் : தேனம்மை லக்ஷ்மணன்
அகநாழிகை பதிப்பகம்
ஜனவரி 2014

தேனம்மை அவர்கள் சிறந்த கவிஞர், எழுத்தாளர், திறமையான படைப்பாளி. பத்திரிகைகளில் கட்டுரை, சிறுகதை என எழுதியுள்ளார். இந்த நூலுக்கு எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான எம் ஏ சுசீலாம்மாதான் அணிந்துரை வழங்கி உள்ளார்கள்.


இந்த கவிதை தொகுப்பின் தலைப்பு 'அன்னபட்சி' மிக அருமையானது. தலைப்பிற்குரிய கவிதையில் தேனம்மை அவர்கள், அன்னபட்சியின் தன்மையை அழகாய் இயம்புகிறார். அன்னபட்சி எப்படி நீர் தவிர்த்து பால் மட்டும் கொள்ளுமோ அதையே சற்று மாற்றி,

‘உன் அல்லதை எல்லாம் நல்லதாக்கி அருந்தும் அன்னபட்சி நான்’ ன்னு

எழுதியிருக்காங்க கவிதையில்.
இது மிகவும் வித்தியாசமான சிந்தனை. மற்றவர்களின் நல்லவை அல்லாதவற்றைக் கூட நல்லதாக்கிப் பார்க்கும் அவரின் இந்த குணம் நம்மை வியக்க வைக்கிறது.
thanks http://www.ahilas.com/

-- நன்றி உமாகாந்த தமிழ்க்குமரன் சார். !

( இவர் People Today பத்ரிக்கையின் சப் எடிட்டர் )


5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...