நகரத்தார் திருமணங்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன.. முன்பெல்லாம் 7 நாள் நடந்த திருமணங்கள் 5 நாட்களாகி பின் 3 நாட்களாகி தற்போது இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன. அலமூஸ் குரூப்ஸ் என்று சின்னத்திரை நிகழ்சிகளுக்கு வீடியோ எக்விப்மெண்ட்ஸ் சப்ளை செய்யும் திரு வெங்கடாசலம் செட்டியாரின் இரண்டாவது மகனின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இவர் சின்னத்திரையில் தேன்மொழி., தாலி., ஜீவநதி., காயத்ரி மந்திரம் ஆகிய சீரியல்கள் எடுத்தவர். நிறைய இறைத்திருப்பணிகள் செய்திருக்கிறார். கைலாஸ் மானசரோவர் யாத்திரை தம்பதி சமேதராக சென்று வந்திருக்கிறார்கள் . கோயில் ஆன்மீக நிகழ்ச்சிகள் எல்லாம் கவரேஜ் செய்கிறார்கள். 2003 - 2004 இல் சட்டசபை நிகழ்ச்சிகளையும் கவரேஜ் செய்திருக்கிறார்கள்.
சின்னத்திரை விஐபிக்கள் சிலரும்., மற்றும் நகரத்தாரில் பிரபல பிரமுகர்களும் கலந்து கொண்ட சிறப்புத்திருமணம் அது. மணமகன் பெயர் அடைக்கப்பன் என்ற கண்ணன்., பெண்ணின் பெயர் வள்ளியம்மை என்ற திவ்யா.. திருமணம் பொதுவாக வீட்டில் நடத்தப்பட்டாலும் இந்தத் திருமணம் காரைக்குடி அருகேயுள்ள திருக்கோயிலூரில் ( இங்கு நகரத்தார் பெருமக்கள் உபதேசம் கேட்பார்கள்) உள்ள கோயிலூர் மண்டபத்தில் இத்திருமணம் நடைபெற்றது. இது திருநெல்லையம்மன் கோயிலைச் சார்ந்தது. இதில் காசி நகரத்தார் சத்திரம் மீட்டிங் எல்லாம் நடக்கும்.
சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இத்திருமணத்தில் சின்னத்திரை நடிகர் அழகு., டைரக்டர் பரத்., டைரக்டர் அன்வர்., ., லேனா தமிழ்வாணன்., ஜட்ஜ் சொக்கலிங்கம்., காளைராஜா ( ஜமீந்தார் வீடு), லோட்டஸ் வெங்கடாசலம்., மோகன்., காரைக்குடி நகர மன்றத்தலைவர் முத்துராஜா., பி ஆர். சொக்கலிங்கம்., ரோட்டரி பெரியண்ணன்., சக்தி திருநாவுக்கரசு., தேனப்பன்., புலவர் நாகப்பன்., கந்தனருள் ராமநாதன்., பிஎஸ் ஆர் எம் ராமு. சோமநாராயணன் செட்டியார்.,உலகம்பட்டி காசிநாத்ன்., வலையப்பட்டி., பாண்டியன் பேப்பர்ஸ் பாண்டியன்., ஜட்ஜ் ஏஆர் லெட்சுமணனின் பெரியப்பா பையன் செம்பொன் அருணாசலம்., ஆகிய வி ஐ பிக்களைக் காண முடிந்தது.
இத்திருமண நிகழ்சிகள் மூன்று நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் மகேஸ்வர பூஜை., மாலை விளையாட்டுப் பொட்டி வேவு. , இரவு கூடி ஆக்கி உண்ணுதல்.மற்றும் படைப்பு. மறுநாள் மாப்பிள்ளை அழைப்பு., திருப்பூட்டுதல்., மணவறைசடங்கு., மாலை பெண்ணழைப்பு., மறுநாள் திருவாகசம் முற்றோதல்.
16 பானை வைத்து பொங்கல் வைத்து முருகனைப் பூஜிப்பது மகேஸ்வர பூஜை.. இது பெண் வீட்டின் ( கீழப்பூங்குடிக்காரர்கள்) முறை. மிக அருமையான பெண்ணான முதல் மருமகளை ரொம்பப் பிடித்துப் போய் விட அதே குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டும் என்று அவரின் தங்கையையே அடுத்த பையனுக்கும் நிச்சயம் செய்திருக்கிறார்கள்.
மாலையில் மூத்த பையன் செந்தில்நாதனின் ஒரு வயது மகனுக்கு விளையாட்டுப் பொட்டி வேவு நடந்தது. இரவு உறவினர்கள் அனைவரும் கூடி ஆக்கி உண்ணுதலும் படைப்பும் சிறப்பாக நடைபெற்றது.
மறுநாள் பெண்ணின் தாயும் தமையனும் வரவேற்க மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. பின் பகவணம்( சிவப்புக் கயிற்றால் காப்புக் கட்டுதல்) செய்து பூமணம் இடப்பட்டது. நகரத்தாரில் மாப்பிள்ளைக்கும் மிஞ்சி உண்டு. ஒற்றை மிஞ்சி. இது திருமணத்தன்று முதல்நாள் மாப்பிள்ளையின் மாமாவால் அணிவிக்கப்படும். அப்போதில் இருந்து திருமணம் முடியும் வரை மாப்பிள்ளை வெளியே எங்குமே செல்லக்கூடாது. திருமணம் முடிந்துதான் செல்ல வேண்டும்.
திருப்பூட்ட பெண்ணை அழைத்து வந்து மணவறையில் நிற்க வைத்தார்கள். மணவறையில் இருக்கும் மணப்பலகையில் பெண்ணை நிற்க வைத்து மாப்பிள்ளை கீழே நின்று திருப்பூட்டுவார். இது 32 உதிரியான பாகங்களைக் கோர்த்த ரெட்டை வடமான மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டிருக்கும். இதுதான் தாலி., இதில் மூன்று முடிச்சு போட்டு மணப்பெண்ணை தன் மனைவியாக அறிவிக்கும் நிகழ்ச்சி இது.
அப்போது மாப்பிள்ளை யாரும் பார்க்கவில்லை என நினைத்து மணப்பெண்ணை மணவறையில் நிற்க வைத்தபின் பேசி சிரிக்க. வீடியோக்காரர்களின் தயவில் ஊரேபார்த்து ரசித்தது. மிக அழகான பெண். மாப்பிள்ளைக்கு பெண் கொடுத்து வைத்தவரா., பெண்ணுக்கு மாப்பிள்ளை கொடுத்து வைத்தவரா என போட்டியே நடத்தலாம். ஜட்ஜ் சொக்கலிங்கம் அவர்கள் தாலி எடுத்துகொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் திருப்பூட்டினார்.
பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைக்கும் நிகழ்ச்சி பெண்ணழைப்பு. இதுவும் சிறப்பாக நடைபெற்றது.. ஆமாம் நகரத்தார் என்றால் மிகச் சிறப்பான செட்டிநாட்டுப் பலகாரங்கள் இல்லாமலா.. வெள்ளைப் பணியாரம்., பால் பணியாரம்., இனிப்புச் சீயம்., மால்பூ., ஸ்ப்ரிங்ரோல்., கவுனரிசி., அல்வா., தோசை., இட்லி., வடை., பொங்கல்., கந்தரப்பம்., பாதாம் அல்வா., இடியாப்பம்., தூள் பஜ்ஜி., ஊத்தப்பம்., பூரி., கிழங்கு., சாம்பார்., அவியல்., கதம்பச் சட்னி.,வத்தக் குழம்பு., எல்லாம் இருந்தது.
பலகாரம் இப்படி என்றால் சாப்பாடு., பருப்பு ., நெய்., தேங்காய் சாதம்., உருளை சிப்ஸ்., தக்காளிக் குழம்பு., காரட் ., முருங்கை., கத்திரி சாம்பார்., பீன்ஸ் இளங்குழம்பு., மோர்க்குழம்பு., ரசம்., பேபிகார்ன் சூப்.,தயிர்., கட்லெட்., சௌசௌ கூட்டு., பட்டாணி பனீர் பொரியல்., கொத்து்க்கடலை மண்டி.,இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்., ஊறுகாய்., ரசமலாய் என சூப்பராக இருந்தது. தஞ்சாவூர் தாட்டிலையில் எல்லாம் பரிமாறப்பட்டிருந்தது. குல்ஃபி ஐஸ்க்ரீம் வேறு.. இன்னும் பழவகைகள்., சுபாரி வகைகள் பலவிதம்.,
காரைக்குடிப்பகுதியில் சமையலுக்குப் புகழ் பெற்ற ஆத்தங்குடிபெருமாள் என்பவரின் சமையல் குழாம் தங்கள் நளபாகத்தால் அசத்தி இருந்தார்கள். எதை சாப்பிட எதை விட எனத் தெரியாமல் வயிறு முட்ட சாப்பிட்டோம்.
திருமணமானதும் மணமகனும் மணமகளும் மணமகன் சார்ந்த கோயிலில் ஒரு புள்ளியாகி விடுவார்கள். மணமகன் வைரவன் கோயில் என்பதால் இவர்கள் வைரவன் கோயில் புள்ளியாக குறிக்கப்படுவார்கள். திருமணம் முடிவானதுமே இரு வீட்டார் சார்ந்த கோயில்களிலும் பாக்கு வைத்து திருமணம் சொல்லப்படுவதால் அந்தக் கோயில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து திருமணத்தன்று கோயில் மாலை கொணர்ந்து இருவருக்கும் அணிவித்து விபூதி பிரசாதம் வழங்குவார்கள்.
இது போல வைரவன் கோயில்., இலுப்பைக்குடிக்கோயில் ( பெண் வீட்டார்) ., மற்றும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயி்ல்., குன்றக்குடி சண்முகநாதர் கோயில்., கீழக்கோட்டை ஆதினமிளகி ஐயனார் கோயில்., சிதம்பரம் நடராஜர் கோயில்., திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில்., ஆத்தங்குடி உலகநாயகி அம்மன் கோயில்., திருக்கோயிலூர்., திருநெல்லையம்மன் கோயில்., மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயில்., ஆகிய அனைத்துக் கோயில்களிலும் இருந்து பிரசாதங்கள் ., மாலைகள்., ஸ்வாமி படங்கள் வந்தன. சிவாசாரியர்கள் வாழ்த்தி அணிவித்தனர்.
நகரத்தார் திருமணங்களில் மிகச் சிறப்பானது என்னவென்றால் ரெஜிஸ்டரேஷன் வராத ஆதி காலத்திலேயே ஓலைகளில் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்வதுதான். இதற்கு இசைவு பிடிமானம் என்று பெயர். முன்பு ஓலைகளில் எழுதப்பட்டது இப்போது பேப்பர்களில் எழுத்தப்படுகிறது. மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் அல்லது இருவரின் தாத்தாக்கள் இருந்தால் அவர்களும் இன்னாரின் மகன் இன்னாருக்கு இன்னாரின் மகள் இன்னாரைத் திருமணம் செய்விக்கிறோம் என எழுதி இருவரும் ஒப்பம் இட்டு இருவர் வசமும் ஒரு பிரதி வைத்துக் கொள்ளப்படுகிறது.
இரண்டு பக்கமும் இசை நிகழ்ச்சிகளும் நாதஸ்வரமும் ஒலிக்க அமர்ந்திருந்த மணமக்களை பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி விடைபெற்றோம்.
டிஸ்கி:- இந்தக் கட்டுரை செப்., 2011 இவள் புதியவளில் வெளிவந்தது.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5.
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.
டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.
1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம்
2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....
3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை
4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.
5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.
6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்
7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்
8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.
9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..
11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.
12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )
13. வைரமே வைரம்...
14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.
15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை
16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்
17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

நகரத்தார் கல்யாணம் ஒனறில் கலந்து கொண்டதுண்டு கல்லூரி நாட்களில். இப்போது உங்கள் மூலம் மீண்டும்! திருமணங்களில் எனக்குப் பிடித்த விஷயம் நகரத்தார் உபயோகிக்கும் ‘திருப்பூட்டுதல்’ என்ற அழகான வார்த்தை! மிக ரசித்தேன்.
பதிலளிநீக்குபெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைக்கும் நிகழ்ச்சி பெண்ணழைப்பு. இதுவும் சிறப்பாக நடைபெற்றது.. ஆமாம் நகரத்தார் என்றால் மிகச் சிறப்பான செட்டிநாட்டுப் பலகாரங்கள் இல்லாமலா.. வெள்ளைப் பணியாரம்., பால் பணியாரம்., இனிப்புச் சீயம்., மால்பூ., ஸ்ப்ரிங்ரோல்., கவுனரிசி., அல்வா., தோசை., இட்லி., வடை., பொங்கல்., கந்தரப்பம்., பாதாம் அல்வா., இடியாப்பம்., தூள் பஜ்ஜி., ஊத்தப்பம்., பூரி., கிழங்கு., சாம்பார்., அவியல்., கதம்பச் சட்னி.,வத்தக் குழம்பு., எல்லாம் இருந்தது.
பதிலளிநீக்குபலகாரம் இப்படி என்றால் சாப்பாடு., பருப்பு ., நெய்., தேங்காய் சாதம்., உருளை சிப்ஸ்., தக்காளிக் குழம்பு., காரட் ., முருங்கை., கத்திரி சாம்பார்., பீன்ஸ் இளங்குழம்பு., மோர்க்குழம்பு., ரசம்., பேபிகார்ன் சூப்.,தயிர்., கட்லெட்., சௌசௌ கூட்டு., பட்டாணி பனீர் பொரியல்., கொத்து்க்கடலை மண்டி.,இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்., ஊறுகாய்., ரசமலாய் என சூப்பராக இருந்தது. தஞ்சாவூர் தாட்டிலையில் எல்லாம் பரிமாறப்பட்டிருந்தது. குல்ஃபி ஐஸ்க்ரீம் வேறு.. இன்னும் பழவகைகள்., சுபாரி வகைகள் பலவிதம்.,
..///ம்ம்..தேனு,உங்கள் வீட்டிலும் விரைவில் டும் டும் கூடவே இப்படி விருந்து..இல்லையா?ரெடியாகிட்டோம்.சாப்பிடத்தான்.:)
நகரத்தார் கல்யாணங்களில் கலந்துகொண்டு விருந்தும் உண்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஅவர்கள் சொல்வது போல் எல்லாம் தெளிவு.
வாழ்த்துக்கள்.
நகரத்தார் வழக்கங்களை அறிய முடிந்தது. நன்றி.
பதிலளிநீக்கு/ மாப்பிள்ளை யாரும் பார்க்கவில்லை என நினைத்து மணப்பெண்ணை மணவறையில் நிற்க வைத்தபின் பேசி சிரிக்க. வீடியோக்காரர்களின் தயவில் ஊரேபார்த்து ரசித்தது. /
:))!
//நகரத்தார் திருமணங்களில் மிகச் சிறப்பானது என்னவென்றால் ரெஜிஸ்டரேஷன் வராத ஆதி காலத்திலேயே ஓலைகளில் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்வதுதான். இதற்கு இசைவு பிடிமானம் என்று பெயர். முன்பு ஓலைகளில் எழுதப்பட்டது இப்போது பேப்பர்களில் எழுத்தப்படுகிறது.//
பதிலளிநீக்குஇது ரொம்ப நல்ல விஷயம் தேனக்கா..
கல்யாணமும் விருந்தும் பிரம்மாண்டமா அழகா இருக்கு.
நகரத்தார் வழக்கங்களை அறிய முடிந்தது. நன்றி.
பதிலளிநீக்குwww.rishvan.com
நன்றி கணேஷ்
பதிலளிநீக்குநன்றி ஸாதிகா
நன்றி கோமதி
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி சாந்தி
நன்றி ரிஷ்வன்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!