எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 செப்டம்பர், 2010

பங்குச்சந்தை......முரட்டுக் காளையும் மிரளும் கரடியும்.

1986 பிப்ரவரி மாதம் முதல் காப்பிடல் மார்க்கெட் இதழ் வந்தது ...
பெட்ரோ பாட்டரி டிப்போ எனும் பெயரில் கடையும் ஷேர் ட்ரேடிங்கும் செய்துவந்த ஐயா சொல்வது புரிந்தும் புரியாமலுமிருக்கும்... லாங் .,ஷாட்., புல்லிஷ் .,பியரிஷ் என்று..

திருமணம் முடிந்தபின் தெரிந்தது என் கணவருக்கும் பங்குச் சந்தையில் ஆர்வம் அதிகம் என்று .. இந்திய வழக்கப்படி ராமர் செல்லும் வழியில் சீதையும் செல்ல ஆரம்பித்தேன்..( இது ரொம்ப ஓவர் என்று குரல் கேக்குது..:))
கவிதை தெரிந்த அளவு வணிகம் புரிபடவும்., பிடிபடவும் இல்லை..

பிஸினஸ் லைன்., காப்பிடல் மார்க்கெட்., எகனாமிக் டைம்ஸ்., ஹிண்டுவில் ஷேர் ப்ரைஸ் மூவ்மெண்ட்ஸ் என்று அவ்வப்போது விரும்பியும் விரும்பாமலும் பங்குச் சந்தை என்னை தொடர்ந்து கொண்டே இருந்தது.


இதில் ஏறுதலும் இறங்குதலுமான பரமபத விளையாட்டில் கடியும் அதிகம்., ஏற்றமும் அதிகம். மார்க்கெட் அதி வேகமாக உயர்வதை புல்லிஷ் ( காளை) என்றும் ., சரசரவென்று இறங்குவதை பியரிஷ் (கரடி) என்றும் சொல்கிறார்கள்..

இதில் காளை முட்டுதோ இல்லையோ கரடி மிரண்டு நம்மையும் மிரட்டி விடும்.. ஆட்சி மாற்றம்., அன்னிய செலாவணி., கம்யூனிஸம்., ரிக்கிங்க் என்று ஏகப்பட்ட விஷயங்கள் கரடி மிரளக் காரணிகள்.

ஒரு 30 மிகச் சிறந்த கம்பெனிகளைக் கொண்டு ஷேர் மார்க்கெட்டின் இண்டக்ஸ்., நிஃப்டி போன்றவை நிர்ணயிக்கப் படுகின்றன. A +++ கம்பெனிகளில் முதலீடு செய்தவர்கள் எக்ஸ்பர்ட் முதலீட்டாளர் என சொல்லலாம். முதலீடு செய்து விட்டு தியானம் கூட செய்யலாம் அமைதியாய். ஆனால் க்ளூ ட்ரேடர் ., ஜாபர்.,(JOBBER) ., தூங்கும் போது கூட விழித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

96 வயது வரை என் ஐயாவை செலுத்தியது இந்த பங்குச் சந்தைதான் என்பது வியப்பாயிருக்கும். இதன் ஏற்றமும் இறக்கமும் தினம் தினம் ஏன் நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கிறது.. என் அம்மாவும் .,மாமனாரும் CNBC., NDTV போன்றவற்றைப் பார்த்து ஷேர் கம்பெனிகளுக்கு ஃபோன் செய்து பங்குகளை வாங்கி விற்கிறார்கள்..மிக இறங்கி விட்டால் அப்படியே வைத்து விடுவது.. பின் எப்போது ஏறுகிறதோ அப்போது விற்பது என்று.

நானும் சிலகாலம் வீட்டிலேயே ஆக்ஸஸ் செய்து டைரட்டாக ட்ரேடிங்க் செய்து இருக்கிறேன்.. காலையில் ஏறும் இண்டக்ஸ் மாலையில் இறங்கும் போது யானைக்கும் பானைக்கும் சரி என்ற நிலைதான்.. பதட்டத்தில் எனக்கு பிபி வந்து விடுமோவென்று இருக்கும்..

கார்வி., ஷேர்கான்., ஓரியண்டல் போன்ற நிறுவனங்களில் ட்ரேடிங் செய்வதால் சில டிப்ஸ்களின் மூலமும் ஸ்டாப் லாஸ் மூலமும் பெரும் இழப்பைத் தடுக்கலாம்.

ஹர்ஷத் மேத்தா ப்ரீயட்களிலும்., சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்னும் ( சென்செக்ஸ் 25,000 பாயிண்ட்டுகள்.. இன்னும் 30,000 பாயிண்டுகள் வரை செல்லும் என ஆரூடம் சொன்னார்கள்.) கரடி மிரண்டு ரொம்பவும் பிராண்டி விட்டது.. வெற்றியும் தோல்வியும் வீரருக்கு அழகல்லவா..

ஃப்யூச்சர் ., ஆப்ஷன்., கமாட்டீஸ்., கோல்ட்., சில்வர் முதலியவற்றில் யோசித்து முதலீடு செய்யலாம்.. தற்போது கோல்டும் சில்வரும் தாறுமாறான விலை..( 2004 இல் கிராம் ரூ.450 /- இருந்த தங்கம் இப்போது ரூ. 1780/- ., ரூ 7,000/- ஆக இருந்த வெள்ளி இப்போது ரூ. 33,000./- ) ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய அதிகம் தேவை. பங்குச் சந்தையில் குறைவான அளவும் முதலீடு செய்யலாம்.

எந்த பிஸினஸ் செய்தாலும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நம் கையில் இருக்க வேண்டும். , கைப் பணத்தில் மட்டுமே வாங்குவது., ஸ்பாட்டில் வாங்குவது., ஸ்டாப் லாஸ் போட்டு வைப்பது என்று.

4 நாட்களுக்கு முன் 400 பாயிண்டுகள் கிர்ரென்று ஏறிய சந்தை இன்று 100 பாயிண்டுகள் இறக்கம். ஃப்யூச்சரில் லாஸ் மினிமைஸ் பண்ண சான்ஸ் கம்மி., ஆப்ஷனில் லாஸ் மினிமைஸ் பண்ணலாம். லாபமும் அதிகம். எனவே ஆப்ஷனில்தான் அதிகம் ட்ரேடிங்க் ஆகிறது.

தங்கம்., வெள்ளி., இடம்., மனை., வீடு., ஃபிக்ஸட் டெப்பாசிட்., இன்ஸூரன்ஸ்., அஞ்சலக முதலீடு., வங்கி பாண்டுகள் ., சிட் ஃபண்டுகள்., ம்யூச்சுவல் ஃபண்டுகள்., ஏனைய வியாபாரங்கள் இவற்றில் முதலீடு செய்வது போல் முரட்டுக் காளையையும் மிரளும் கரடியையும் கண்டு ஒதுங்காமல் உங்க பணத்தை கொஞ்சம் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்ங்க மக்காஸ்.

செப்டம்பர் 9 ம் தேதி தனது 16 வது பிறந்த நாள் கண்ட ஓரியண்டல் ஸ்டாக்ஸுக்கு வாழ்த்துக்கள்.. !!!ஸ்வீட் சிக்ஸ்டீன்.. இன்னும் நூற்றாண்டுகள் சேவை செய்ய வாழ்த்துக்கள்.!!!

டிஸ்கி 1 :- இது எனது 250 ஆவது இடுகை.
டிஸ்கி 2 :-ஈரோடு கதிர்., சூர்யா சுரேஷ்..., ( வண்ணத்துப் பூச்சியார்) பங்குச் சந்தையில் பலவருட அனுபவம் இருந்தும் இவர் அது பற்றி எழுதாமல் சிறந்த உலக சினிமாக்கள் பற்றி பகிர்ந்து வருகிறார் ., கோகுல் சல்வாடி... ( இவரின் இடுகைகள் சர்காஸ்டிகாக சோவினது எழுத்து போலிருக்கும்..!!) மூவரும் வணிக நாடியில் இருந்தும் கலை உணர்வோடு இடுகைகள் வெளியிடுவது ஆச்சர்யம். அதிலும் கதிரின் கவிதைகள் சில அற்புதம்..

26 கருத்துகள்:

  1. மிக நல்ல பதிவு தேனம்மை. 250-க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

    பதிலளிநீக்கு
  2. //முரட்டுக் காளையையும் மிரளும் கரடியையும் கண்டு ஒதுங்காமல் உங்க பணத்தை கொஞ்சம் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்ங்க//

    இதையேதான் நானும் எனது நண்பர்களுக்கு சொல்லி வருகிறேன்....

    இன்னும் நம் மக்களிடம் பங்குச் சந்தை விழிப்புணர்வு வரவில்லை வந்தவர்கள் லாபம் காணாமல் சென்றதில்லை.

    எனக்கு பங்கு சந்தையில் மிகுந்த ஆர்வம்...விழிப்புணர்வு கட்டுரை அருமை வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. 250 பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ..

    பங்கு சந்தையா...

    பதிலளிநீக்கு
  4. மிக இறங்கி விட்டால் அப்படியே வைத்து விடுவது.. பின் எப்போது ஏறுகிறதோ அப்போது விற்பது என்று.////

    ஆமாம் நானும் அப்படி தான் செய்வேன்

    பதிலளிநீக்கு
  5. , நிஃப்டி போன்றவை நிர்ணயிக்கப் படுகின்றன.////

    நிஃப்டி 50 பங்குகளை கொண்டு கணக்கு செய்ய படுகிறது,

    250 kku வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. கவிஞர் & கணக்காளர் மனைவி என்று மட்டும் தான் தெரியும்.பங்குச் சந்தையிலும் ஞானமா? என்னைப் போன்ற பங்குச் சந்தை பற்றிய அறிவு கிஞ்சித்தும் இல்லாதவர்களுக்கு அருமையான அறிமுகம்.கவிதை எழுத மனசு தான் முக்கியம்..தாங்கள் சுட்டிக் காட்டிய கதிர்,சூர்யா எழுத்துகள் எனக்கு அறிமுகம். கோகுல் சல்வாடியின் எழுத்துக்களை இனிமேல் தான் படிக்கணும் அறிமுகத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. 250 வது இடுகைக்கு வாழ்த்துகள்
    அன்புடன் வெற்றி

    பதிலளிநீக்கு
  8. அட, கவிதாயினி மேடம் இப்போ கம்பெனி நடத்துறீங்களா? (சும்மா.. எதுகை மோனைக்காக.. சீக்கிரம் நிஜமாகட்டும்!!)

    அதான் இப்ப உங்களை அடிக்கடி காணோமா? நடக்கட்டும், நடக்கட்டும், வாழ்த்துகள்!!

    இன்னொரு மகிழ்ச்சி, பெண்கள் அபூர்வமாகவே இவ்வாறு வணிக/நிதி நிர்வாகக் கட்டுரைகள் எழுதுகிறார்கள். அந்த வகையில் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும்!!

    பதிலளிநீக்கு
  9. (உங்கள் பாணியில் இருந்து மாறுபட்ட) வித்தியாசமான இடுகை!!
    250 க்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. 250-க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

    பதிலளிநீக்கு
  11. அருமை அக்கா எனக்கும் சிறிய விளக்கங்கங்கள் தேவைபடுகிறது, நேரம் கிடைக்கும் போது தொடர்பு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. பதிவுக்கு வாழ்த்துக்கள்

    நானும் சில வருடங்களுக்கு முன்பு EPS, P/E Ration என்று கணக்கு போட்டு அலைந்தவன் தான். ஆனால் Long Terum Investment செய்தால் தான் பலன் என்று தெரிந்து திரும்பிவிட்டேன்.

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  13. எதில் முதலீடு செய்தாலும், நமக்கு அதில் குறைந்த பட்ச ஞானமேனும் வேண்டும். ஆனால் உங்களுக்கு சில விஷயங்கள், (சேமிப்பு, சிக்கனம்) ரத்தத்தோடு ஊறியதால், நீங்கள் எந்த ஆலோசனை சொன்னாலும், யோசிக்காமல் கேட்கலாம்.

    பதிலளிநீக்கு
  14. 96 வயது வரை என் ஐயாவை செலுத்தியது இந்த பங்குச் சந்தைதான் என்பது வியப்பாயிருக்கும்.

    சகோ,
    உங்கள் ஜயா காலத்தில் longterm invt ஆக பங்குகளை வைத்திருப்பார்கள்.
    தற்பொழுது விலைகள் நொடிகளில் கணினியில் தெரிவதால் பதட்டம் எல்லாம்.

    நல்ல பதிவு, பங்குசந்தை அருமையான வாய்ப்பு உள்ள தொழில், பொறுமையும், நிதானமும் இருந்தால் வளம் கொழிக்கும்.

    இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் வெறும் 2 சதவீத மக்களே பங்கு சந்தையில் முதலீடு செய்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  15. இன்னும் நம் மக்களிடம் பங்குச் சந்தை விழிப்புணர்வு வரவில்லை. விழிப்புணர்வு பதிவு.
    நல்லாயிருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
  16. 250வது பதிவிற்கு முதற்கண் வாழ்த்துக்கள்...

    ஸோ, ஷேர் மார்க்கெட்ல கலக்கிட்டு இருக்கீங்க...

    என்னவோ காளை, கரடின்னு எல்லாம் சொல்லி ”கரடி” விடறீங்க....

    இந்த பதிவுனூடே ஏதாவது ஷேர் டிப்ஸ் தந்திருக்கலாமே தேனம்மை...?!!

    எங்களுக்கும் கொஞ்சம் உபயோகமாய் இருந்திருக்குமே...

    பதிலளிநீக்கு
  17. நல்ல தகவல்களுடன் உபயோககரமான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  18. என்ன ஆச்சி இது ...
    ஒண்ணுமெ புரியலையெ...
    ...என்ன கருத்து போட்றதுன்னு தெரியலை...
    ... போடாமல் இருக்கவும் முடியலை...
    ..சரி.. இந்தாங்க...
    "பிரியாணி தேடி வந்த இடத்தில் புளியோதரை.."
    (நல்லவெளை எனக்கு புரியாமல் போனது
    ...ஒடுரா அரவிந்து..ஓடு)

    பதிலளிநீக்கு
  19. நன்றி ராமலெக்ஷ்மி.,கிளியனூர் இஸ்மத்., வினோ.,சௌந்தர் .. ( தகவலுக்கு நன்றி ) ., வெற்றி ., ஹுசைனம்மா., சைகொ ப., வெறும் பய., சசிகுமார்., விஜய்., ரமேஷ்., மேனகா., டி வி ஆர்.,சித்து., முத்துலெட்சுமி., கணேஷ்., குமார்.,வேலு., கோபி., கௌதமன்., அரவிந்த்..(!)

    பதிலளிநீக்கு
  20. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

    பதிலளிநீக்கு
  21. அருமை தேனம்மை.. பல நாட்களாக ஊரில் இல்லை. இன்றுதான் பார்த்தேன். நாங்க எழுதா விட்டால் என்ன? நீங்க சிறப்பா எழுதி இருக்கீங்க..

    கலக்குங்க..

    ஆல் தி பெஸ்ட்..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...