குடுவை உடைந்து
மீன்கள் துள்ளின..
ஆன்ம விடுதலைக்காய்..
பிணத்தின் முன் ஆட்டம்..
சாவும் கொண்டாடப்பட வேண்டுமென்றா..
நிறைபட வாழ்ந்ததற்கா..
மல்லிகை மொக்குகளில்
வெம்மிளகாய் வாசனை ..
உன் ஊடல்..
கேட்ட வரம் கொடுக்கும்
கோயில் வாசல்கள் எல்லாம்
காசுக்காய் பிச்சைக்காரர்கள்..
மலைக்கு மாலை..,
தீட்டு கூடாது..
மழைத்தண்ணீர் அடித்து அலசியது
ஊர்த்தீட்டு அனைத்தும் காலில்..
ஒரே பரிசலில் ..
இருவேறு பக்கங்கங்களில்..
எதிர்த்துடுப்போடு.,
நீர்வீழ்ச்சி அடிக்க.,
நதிச்சுழி இழுக்க.,
அணைச்சுறா எதிர்க்க..
செல்லும் வழியெல்லாம்
அன்பைத் தூவித் தூவி
தலை நரைத்த மேகம்..
வார்த்தைச் சட்டிகளில்
கவனமில்லாமல் வறுபட்டு
கருகிய மனசு..
மீன்கள் துள்ளின..
ஆன்ம விடுதலைக்காய்..
பிணத்தின் முன் ஆட்டம்..
சாவும் கொண்டாடப்பட வேண்டுமென்றா..
நிறைபட வாழ்ந்ததற்கா..
மல்லிகை மொக்குகளில்
வெம்மிளகாய் வாசனை ..
உன் ஊடல்..
கேட்ட வரம் கொடுக்கும்
கோயில் வாசல்கள் எல்லாம்
காசுக்காய் பிச்சைக்காரர்கள்..
மலைக்கு மாலை..,
தீட்டு கூடாது..
மழைத்தண்ணீர் அடித்து அலசியது
ஊர்த்தீட்டு அனைத்தும் காலில்..
ஒரே பரிசலில் ..
இருவேறு பக்கங்கங்களில்..
எதிர்த்துடுப்போடு.,
நீர்வீழ்ச்சி அடிக்க.,
நதிச்சுழி இழுக்க.,
அணைச்சுறா எதிர்க்க..
செல்லும் வழியெல்லாம்
அன்பைத் தூவித் தூவி
தலை நரைத்த மேகம்..
வார்த்தைச் சட்டிகளில்
கவனமில்லாமல் வறுபட்டு
கருகிய மனசு..
arumai
பதிலளிநீக்குசெல்லும் வழியெல்லாம்
பதிலளிநீக்குஅன்பைத் தூவித் தூவி
தலை நரைத்த மேகம்..
ஆஹா.. அருமையான கற்பனை.
கேட்ட வரம் கொடுக்கும்
பதிலளிநீக்குகோயில் வாசல்கள் எல்லாம்
காசுக்காய் பிச்சைக்காரர்கள்..
.......நிறைய யோசிக்க வைத்தது.....
சகல திசைகளிலும் செல்லும் கவிதையின் கண் காணக் காண அழகு!
பதிலளிநீக்கு///மல்லிகை மொக்குகளில்
பதிலளிநீக்குவெம்மிளகாய் வாசனை ..
உன் ஊடல்..///
///மலைக்கு மாலை..,
தீட்டு கூடாது..
மழைத்தண்ணீர் அடித்து அலசியது
ஊர்த்தீட்டு அனைத்தும் காலில்..///
///வார்த்தைச் சட்டிகளில்
கவனமில்லாமல் வறுபட்டு
கருகிய மனசு..////
என்ன சொல்வது தேனம்மை!!!
எங்கு பிடிக்கிறீர்கள் இந்தப் படிமமும் வார்த்தைகளும்.
அற்புதமான கவிதை எப்போதும் போல்
வாழ்த்துகள்
எப்படி தான் இப்படி யோசிக்க முடிகிறது. ஒவ்வொரு கவிதையும் அர்த்தம் பொதிந்த அழகு.
பதிலளிநீக்குகவிதை அருமை.. நிறைய யோசிக்க வைக்கிறது..
பதிலளிநீக்குஇங்கு வருவது இது முதல் முறை சகோ...
சிவாஜி சிறகுக்குள், சிவாஜி சொன்னார்.. உங்களுக்கும் அவருக்கும் நன்றிகள் பல...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு’மனம்’ என்றே முடித்திருக்கலாமோ...
பதிலளிநீக்குநல்ல வீச்சு... ரொம்ப நல்லா வந்திருக்குங்க :)
contradictiona அடுக்கி பின்னியிருக்கீங்க...
மாலையும், பிச்சைகாரர்களும் ரொம்ப பிடிச்சுயிருந்தது..
தேனு ரொம்ப நல்லா வந்துருக்கு கவிதை ..ரசித்து படித்தேன் ..
பதிலளிநீக்குபேதம் பார்க்கும் மனிதர்கள் மாறப்போவதில்லை தேனக்கா !
பதிலளிநீக்குச்சும்மா அருமையா இருக்குங்க!
பதிலளிநீக்குநன்று தேனம்மை
பதிலளிநீக்குதொடர்க
Anbai thoovi thoovi thalai naraith mehan-nice kavithai Thenammai.
பதிலளிநீக்குசூப்பர் அக்கா!
பதிலளிநீக்கு//மல்லிகை மொக்குகளில்
வெம்மிளகாய் வாசனை ..
உன் ஊடல்..//
//வார்த்தைச் சட்டிகளில்
கவனமில்லாமல் வறுபட்டு
கருகிய மனசு..//
செம...
வழக்கம்போல் அருமை!!
பதிலளிநீக்கு//ஒரே பரிசலில் ..
பதிலளிநீக்குஇருவேறு பக்கங்கங்களில்..
எதிர்த்துடுப்போடு.,//
இது மட்டுமின்றி, எல்லாமே சிந்திக்க வைக்கின்றன. அருமையான கவிதைக்கு நன்றி தேனம்மை.
//கேட்ட வரம் கொடுக்கும்
பதிலளிநீக்குகோயில் வாசல்கள் எல்லாம்
காசுக்காய் பிச்சைக்காரர்கள்..//
என்னை கவர்ந்த வரிகள் அக்கா நன்றி
அருமையா இருக்கு.
பதிலளிநீக்குஒரு தென்றலை போல மனதை வருடி எல்லாத் திசைகளிலும் பயனிக்கும் கவிதை
பதிலளிநீக்குஅருமை
கவிதைக்கு மறுமொழிகள் மேலும் அழகு சேர்க்கிறது.
பதிலளிநீக்குஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையுடன். அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குகடைசி ஆறு வரிகளும் ரொம்பவே அருமை.
பதிலளிநீக்குசன் டி.வி பாணியில்
பதிலளிநீக்குவெம்மிளகாய் = உறைப்பு
வாழ்த்துக்கள் அக்கா
விஜய்
நன்றி கார்த்திக்., ரிஷபன்., சித்து., நியோ., வெற்றி., ரமேஷ்., வினோ., அஷோக்., பத்மா., ஹேமா., வேல்ஜி., நேசன்.,முனியப்பன் சார்., பாலாஜி., சை கொ ப., ராமலெக்ஷ்மி., சசி., குமார்., வேலு., ஜெரி., ஜெயந்தி.,ஸ்ரீராம்., விஜய்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
தங்கள் ரசனைகள் மிக அருமை!
பதிலளிநீக்குஅருமை, வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதலைப்புகளை இத்தனை லாவகமாக உங்கள் மூளை எங்கிருந்து கொண்டுவருகின்றது தேனம்மை?
பதிலளிநீக்குநன்றி அண்ணாமலை., தமிழ்த்தோட்டம்., ஸாதிகா..
பதிலளிநீக்கு