எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 ஜூலை, 2021

மண்ணின் மணமும் உலகின் அன்பும்.

 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்களுக்கு அவ்வளவு தகவல் இருக்கிறது இதில் 

இத் தருணத்தில் உங்களிடம் சொல்ல சில செய்திகள்இந்த மண்ணை மக்களை - குறிப்பாக நகரத்தார் வாழ்வியலை நீங்கள் எழுத வேண்டும். பெருமிதங்களை மட்டுமல்ல, சிறப்புகள் என்கிற போது குறைகளும் இருக்கும் தானே.. இவைகள் அடங்கிய எழுத்தாக இருக்க வேண்டும். சுஜாதா சொன்னது தான். எவருடைய மனமும் நோகாமல் என்றல்ல.வடிவம் நாவலாக இருக்கலாம். அவசரமாக செய்ய வேண்டும் என்பதில்லை.சொல்ல வந்த செய்தி, அதன் நம்பகத்தன்மைக்கான தேடல், நேர்சந்திப்பில் தகவலை திரட்டுவது என நிதானத் தோடு செய்யலாம் . ரத்தமும் சதையும் மான உண்மை மனிதர்களின் நடமாட்டம், பேச்சு இவைகளை உங்களால் சிறப்பாக கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எத்தனையோ வாழ்வியலை இலக்கிய உலகம் பதிவு செய்திருக்கிறது. இந்த வாழ்வை நீங்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். வேறு வகையில் பதிவுகள் நிரம்ப இருக்கிறது.

ஆனால் நாவலாக, நான்குறிப்பிட்ட தன்மையோடு இல்லை.

என் வாசிப்பு கவனத்திற்கு வந்தவரை .

இது என்னுடைய அன்பான விருப்பம் - வேண்டுகோள்.

முடிவு உங்களுடையது.

நன்றி மேடம்.

 ஜீவ சிந்தன்.

புதன், 28 ஜூலை, 2021

ஒட்டக அச்சுகளும் உப்புருசி சாக்லேட்டுகளும்.

சார்லி அண்ட் தெ சாக்லேட் ஃபேக்டரி என்றொரு படம் பார்த்திருக்கலாம்.

சாக்லேட் ஆங்காங்கே நதியாக ஓட மிக எக்ஸைடிங்காக இருக்கும். 

இங்கே கொலோனில் சாக்லேட் கப்பலில் உள்ள சாக்லேட் மியூசியத்தில் சாக்லேட் செய்யும் அச்சுக்களைக் காட்சிப்படுத்தியுள்ள இடம் இது. 

இங்கே முயலும் முட்டைகளும் அச்சுகளைப் பார்த்தேன். அத்தோடு ஒட்டக அச்சுகளையும் விதம் விதமாகப் பார்த்தேன். 

ஒட்டகத்தைக் கட்டிக்கோ என்ற பாட்டு ஞாபகம் வந்தது. அடேயப்பா எத்தனை ஒட்டகங்கள். மிகச் சிறிய சைஸிலிருந்து மிகப் பெரிய சைஸ் வரை ஒரு அரேபியப் பிரயாணி ஒட்டகச் சவாரி செய்யும் அச்சுகள்.  இதற்கு ஒரு கதை உண்டு. அது கடைசியில்.

திங்கள், 26 ஜூலை, 2021

ராமனுக்கு உதவப் புறப்பட்ட குலசேகரர்.

ராமனுக்கு உதவப் புறப்பட்ட குலசேகரர்.

தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகள் அதில் ஆழ்ந்து அதைப் போலவே வீரசாகசங்களைத் தாங்களும் செய்து பார்ப்பதுண்டு. இப்பழக்கம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஒரு அரசருக்கே அந்த நாளில் இருந்தது. யார் அந்த அரசர் அப்படி அவர் என்ன காரியம் செய்தார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
எட்டாம் நூற்றாண்டில் சேரநாட்டின் திருவஞ்சைக்களம் என்னும் இடத்தில் திடவிரதன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருக்குக் குலசேகரன் என்ற மகன் பிறந்தார்.
தன் தந்தைபோலவே சிறப்பாக ஆட்சி புரிந்த இவர் ஒரு சமயம் நாடு பிடிக்கும் ஆசையில் சோழ பாண்டிய நாடுகளின் மீதும் படையெடுத்து வென்றார். பாண்டிய மன்னன் இவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்குச் சேரகுலவல்லி என்ற மகள் பிறந்தாள்.
மகன் பிறந்ததும் தான் ஈடுபட்ட கொடுமையான போர்க்களங்களை நினைத்து வருந்திய குலசேகரர் ஒரு கட்டத்தில் கடவுளைச் சரணடைந்தார். நாளும் கிழமையும் கடவுளின் புகழ் கூறும் உபன்யாசகர் யாரையாவது அழைத்து வந்து காவியங்களின் விளக்கத்தைக் கேட்டு இன்புற்று வந்தார்.

வியாழன், 22 ஜூலை, 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 4

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 4. 

சிரஞ்சீவிகளாவன, ராசி மாசங்களாவன, பஞ்ச பூதங்களாவன, பூதலிங்கஸ்தலங்களாவன, வாரசூலமாவன, மேலோகங்களாவன, பாதாளலோகங்களாவன, அஷ்டலெக்ஷிமிகளாவன, நவகிரகங்கள் சஞ்சரிக்கும் நாள், திக்குபாலர்களாவன. 


சிரஞ்சீவிகளாவன.

அனுமார்

விபீஷணர், 

வேத வியாசர்

பரசுராமர்

மகாபலி

மார்க்கண்டேயர்

அஸ்வத்தாமா

ஆக சிரஞ்சீவிகள் எ.


ராசி மாசங்களாவன.

சித்திரை - மேஷம்

வைகாசி - ரிஷபம்

ஆனி - மிதுனம்

ஆடி - கடகம்

ஆவணி - சிம்மம்

புரட்டாசி - கன்னி

அய்ப்பிசி - துலாம்

கார்த்திகை - விருச்சிகம்

மார்களி - தனுசு

தை - மகரம்

மாசி - கும்பம்

பங்குனி - மீனம். 

ஆக மாசம்  12 க்கு ராசி மாசம் 12.


பஞ்சபூதங்களாவன.

பிரிதிவு

அப்பு

தேயு

வாயு

ஆகாசம்

ஆக பஞ்சபூதங்கள் ரு. 


பூதலிங்கஸ்தலங்களாவன.

பிரதிவு காஞ்சீபுரம்

அப்பு  திருவானைக்காவல்

தேயு  திருவண்ணாமலை

வாயு  திருக்காளாஸ்திரி

ஆகாசம் சிதம்பரம்

ஆக பூதலிங்கஸ்தலங்கள் ரு. 


செவ்வாய், 20 ஜூலை, 2021

இண்டஸ்ட்ரியல்/மருத்துவ ஆக்ஸிஜன் பற்றி வள்ளிபழனியப்பன் அவர்களுடன் ஒரு பேட்டி

 திருச்செந்தூரான் கேஸஸ் சேல்ஸ் & சர்வீசஸ் ப்ரைவேட் லிமிடெட் திருமதி வள்ளிபழனியப்பன் அவர்களுடன் ஒரு பேட்டி


கொரோனா காலத்தில் ஆக்ஸிஜனின் தேவை அதிகம். இந்த சமயத்தில் அம்பத்தூர் நகரத்தார் சங்கத்தின் மகளிர் அணித் தலைவி திருமதி வள்ளி பழனியப்பன் அவர்கள் தன் கணவரோடு இணைந்து திருச்செந்தூரான் கேஸஸ் சேல்ஸ் & சர்வீஸ் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜனை தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனம். இவரின் கணவர் திரு பழனியப்பன் சிவில் காண்ட்ராக்டராக இருக்கிறார்.  பள்ளத்தூர் இலுப்பைக்குடிக் கோயிலைச் சேர்ந்த இவர்கள் சென்னை, அம்பத்தூரில் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜனை மருத்துவத் தேவைக்குப் பயன்படுத்த முடியுமா.. வேறு என்னென்ன உபயோகங்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது.