எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 ஏப்ரல், 2017

ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் புத்தக நாள் சிறப்பு நிகழ்வுகள்.

காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி வியத்தகு முறையில் வளர்ந்து வந்து சீராகச் செயல்படும் நகராட்சிப் பள்ளிகளில் ஒன்று. அந்தப் பள்ளி சிறந்தோங்கக் காரணமானவர் அதன் தலைமை ஆசிரியர் திரு பீட்டர் ராஜா என்றால் மிகையில்லை.

கிட்டத்தட்ட 200 மாணவர்கள் மட்டுமே படித்த பள்ளியின் இன்றைய ஸ்ட்ரென்த் 600. அதே போல் பொலிவான தோற்றத்தில் புதுக்கட்டிடம் சிறக்கிறது. மிடுக்கான, சிறப்பான ஆசிரியர்களும் அப்பள்ளியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். நேர்த்தியான சீருடையில் அணிவகுக்கும் மாணாக்கர்கள் அமைதி காக்கிறார்கள்.

நலந்தா புத்தக நிலையத்தில் இப்பள்ளியின் ஆசிரியர் திருமதி கோமதி ஜெயம் அவர்கள் தனது வகுப்பு ( ஆறாம் வகுப்புப் ) பிள்ளைகளுக்கு கல்வி ஆண்டின் இறுதி நாளான இன்று அவர்களின் அவுட்ஸ்டாண்டிங் திறமையைப் பாராட்டிப் புத்தகப் பரிசு வழங்க விழைந்து வந்திருக்கிறார்கள். நலந்தாவில் பல்வேறு புத்தகங்கள் வாங்கியபின் நலந்தா உரிமையாளர் திரு செம்புலிங்கம் அவர்கள் இப்புத்தகங்களை ஒரு எழுத்தாளர் மூலம் வழங்கலாம் என ஆலோசனை கொடுத்து என் பெயரையும் முன்மொழிந்து இருக்கின்றார். உடனே என்னைத் தொடர்பு கொண்டார் திருமதி  கோமதி ஜெயம் அவர்கள் . புத்தகம் வழங்கி உரையாற்ற சிறப்பு விருந்தினராக அழைத்தார். அவர்களின் இம்முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது என்றுணர்ந்த நான் உடனே ஒப்புக் கொண்டேன். உடனே நானும் என்னிடம் இருந்த சிறுவர் நூல்களைச் சேகரித்து சிறுவர்களுக்கு வழங்க எடுத்துக் கொண்டேன். ( 27 நூல்கள் )

சில மாதங்களுக்கு முன்புதான் என் சின்னத்தம்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க என் மாமாவும் அப்பாவும் அங்கே புத்தகங்கள் வழங்கிச் சென்றிருந்தார்கள்.  

மிக சந்தோஷம் தரும் நாளாக அமைந்தது இன்று. அத்தனை குழந்தைகளும் ஆர்வத்தோடு அமர்ந்திருந்தார்கள். பரிட்சையின் கடைசி நாளான அன்று சத்தம் ஏதுமே இல்லை. பள்ளி தூய்மையாகவும் இருந்தது. மிகக் கட்டுக்கோப்பான நிர்வாகம் & ஆசிரியர்கள் & பிள்ளைகள். எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் அவர்கட்கு. !

///Ramanathan chettiar school il book day kkaga sirappu virunthinaraga pangerpu. Tx to Nalantha Jambulingam sir, HM Peter Raja sir, and Gomathi Jeyam mam who invited me to give the book prize to students. ///

Book day special

தமிழாசிரியை சித்ரா அவர்களின் வரவேற்பு உரை. கோமதி ஜெயம் அவர்களை முன்னுதாரணமாக எடுத்துத் தானும் செயல்படப் போவதாகவும் அடுத்த ஆண்டு மாணாக்கர்கள் தாங்கள் பரிசு பெற்ற புத்தகத்தைப் படித்து அதன் கருத்துக்களை வகுப்பு ஆசிரியையான தன்னிடம்  சொல்லவேண்டும் எனவும், அது பற்றி விவாதிக்கலாம் எனவும் சொன்னார்.
Related Posts Plugin for WordPress, Blogger...