மூகாசுரனை அழித்தது யார்?
மூகாசுரன் என்னும் அசுரன் மலை போன்ற அளவில் காட்டுப் பன்றியாக உருவெடுத்து உலா வந்து கொண்டிருந்தான். எட்டுவகைக் குன்றுகளும் யானைகளும் கூட நடுங்கி விழும்படியான உக்கிரத்தில் ஒருவனின் தவத்தைக் கெடுக்க வந்து கொண்டிருந்தான் அவ்வசுரன். ஒரே நேரத்தில் இருவர் விட்ட அம்பு அப்பன்றியைத் துளைத்தது. வேடன் ஒருவனும் வில்லாளி ஒருவனும்தான் அப்பன்றியின் மேல் அம்பு விட்டவர்கள். இருவரும் தான் விட்ட அம்பால்தான் அந்த அசுரன் இறந்தான் என வாதிட்டனர். முடிவில் யார் விட்ட அம்பால் அந்தப் பன்றி இறந்தது என்பதைப் பார்ப்போம்
திருவேட்களம் என்னும் ஊரில் ஒரு வில்லாளி தவம் செய்து கொண்டிருந்தான். அவன் பெயர் அர்ஜுனன், பஞ்சபாண்டவர்களில் ஒருவன். அவனுக்குப் பார்த்தன் என்றொரு பேரும் உண்டு.. அவனிடமே காண்டீபம் என்னும் வில் இருக்கும்போது பாசுபதாஸ்திரம் என்னும் வில்லை சிவனிடம் பெற வேண்டிக் கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தான்.
