கார்த்திக் சரவணன் சென்னையில் வசித்து வருகிறார். ஸ்கூல் பையன் என்றவுடன் ஸ்கூல் போறவர்கிட்ட பேட்டி எடுத்துட்டேன்னு நினைக்காதீங்க. இவர் திருமணமானவர். அன்புக்கும் ஆசைக்குமா ரெண்டு சுட்டி குட்டீஸும் இருக்காங்க. இவர் முகநூல் நண்பர் மட்டுமல்ல. வலைப்பதிவ சகோதரரும்கூட.
அவர் முதன் முதலில் சென்றவருடம் ஒரு குறும்படம் எடுத்துப் போட்டிருந்தார். தொட்டால் தொடரும் குடிப்பழக்கம் பற்றி மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருந்த படம் அது. அவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக அந்தக் குறும்படம் எடுத்த அனுபவங்களை எழுதித்தரச் சொன்னேன்.
மனுஷன் உடனேயே எழுதித்தந்துட்டாரு. ஒரு ப்லாகரோட கஷ்டம் இன்னொரு ப்லாகருக்குத்தான் தெரியும்கிறது எவ்ளோ உண்மை ( அதுதாங்க புதுசு புதுசா போஸ்ட் போட்டு ப்லாகை உயிர்ப்போட ஓடியாட விடுறது :) ப்லாகர்ஸ் ஆர் ஆல்வேஸ் ப்லாகர்ஸ். இத ஃபேஸ்புக்குல எல்லாம் போடாம சுட சுட ப்லாகுல சுட்டுப் போட்டுக் கொடுத்ததுக்கு தாங்க்ஸ் சரவணன். சரி ஸ்கூல் பையன்னு ப்லாக் பேர் வைச்சிக்கிட்டதுக்காக இன்னும் ஸ்கூல்பேகை முதுகைவிட்டு இறக்காம இருக்கது கஷ்டமாயில்ல :) :) :)
////கார்த்திக் உங்க குறும்பட அனுபவங்களை என் ப்லாகுக்காக எழுதி அனுப்ப முடியுமா
சாட்டர்டே போஸ்ட் என்று ஒன்று போடுறேன். அதுக்காக
இதுல ஒவ்வொரு ஃபோட்டோவையும் க்ளிக் பண்ணீங்கன்னா அதுக்கு பக்கத்துல இருக்க லிங்க் ல அவங்க எழுதியதைப் படிக்கலாம். :) https://www.facebook.com/thenulakshman/media_set?set=a.859819344032079.1073741842.100000120633183&type=3
முடிந்தால் மாலைக்குள் அனுப்புங்க
அடடா, இப்போ முடியாதே... எட்டு மணிக்குள் அனுப்பினால் போதுமா? அப்பிடின்னு கேட்டவர் நைட்டு டாண்ணு எட்டுமணிக்கு அனுப்பிட்டாரு.
இதுல ஒவ்வொரு ஃபோட்டோவையும் க்ளிக் பண்ணீங்கன்னா அதுக்கு பக்கத்துல இருக்க லிங்க் ல அவங்க எழுதியதைப் படிக்கலாம். :) https://www.facebook.com/thenulakshman/media_set?set=a.859819344032079.1073741842.100000120633183&type=3
ஜாலிகார்னர் & சாட்டர்டே போஸ்ட் என்று ஒன்று போடுறேன்
அதுக்கு நீங்க ஒரு கட்டுரை வடிவில் உங்க குறும்பட அனுபவங்களை எழுதி இங்கே போடுங்க எடுத்துகுறேன்
சனிக்கிழமை அதாவது நாளை போடணும்.
இப்ப ஃப்ரீயா இருந்தா எழுதி அனுப்ப வேண்டுகிறேன்
உங்க புகைப்படமும், ஆர்டிகிள் சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் வேணும்.
அடடா, இப்போ முடியாதே... எட்டு மணிக்குள் அனுப்பினால் போதுமா? அப்பிடின்னு கேட்டவர் நைட்டு டாண்ணு எட்டுமணிக்கு அனுப்பிட்டாரு.
பதில் :- அதிகப்படியான சொந்த அனுபவங்கள் மற்றும் சில சிறுகதைகளையே
வலையேற்றியிருக்கும் எனக்கு குறும்படம் பற்றிய அனுபவங்களைப் பகிரக் கேட்டிருப்பது
ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் மற்றொரு பக்கம் வியப்பாக இருக்கிறது.
எடுத்திருப்பது ஒரே ஒரு குறும்படம். அதை குறும்படம் என்று சொல்வதைவிட ஒரு சின்ன
கான்செப்ட் என்று சொல்வதே தகும். இயக்குநர் கேபிள் சங்கர் தனது “தொட்டால் தொடரும்”
படத்துக்கான வெளியீட்டுக்கு முன்னர் ஒரு குறும்படப் போட்டி ஒன்றை
அறிவித்திருந்தார். அதாவது, “தொட்டால் தொடரும்” என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு
நிமிடத்தில் இருக்கவேண்டும் என்பதே.
