அன்புமிக்க திருமதி.தேனம்மை லட்சுமணன் அவர்களுக்கு.. காவிரிமைந்தனின் கனிவான வணக்கமும் உளமார்ந்த நன்றிகளும்! “காதல் பொதுமறை” நூலினைத் தங்களுக்கு வழங்கி தங்களின் பின்னூட்டம் தாருங்கள் என்று பணித்து கிட்டத்தட்ட அதை நானே மறந்து.. இன்று தங்கள் வலைப்பூக்கள் பக்கத்தில் பதிவிட்டமையறிந்து.. நூல் ஒன்றுக்கு இப்படித் தக்கதொரு மதிப்புரை தரமுடியும் என்று இலக்கணம் வகுத்ததுபோலிருந்தது உங்கள் வரிகள்! ஒரு எழுத்தாளனின் எண்ணங்களின் வண்ணங்கள் எழுத்துக்கள் வடிவில்சேர்ந்து படைப்பாய் பரிணமிக்கும்போது.. அதற்கான வாசகர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மட்டும்தான் படைப்பாளன் பெறுகின்ற பதக்கங்களாகும்! தேனம்மை லட்சுமணன் என்கிற பெயர் வலைதளம்..இணையதளம் என்று வியாபித்திருக்க.. ஆகச்சிறந்த படைப்பாளர் ஒருவர் நம்மோடு நட்பில் இணைந்ததோடு.. தமிழ்த்தேர் இதழின் ஆசிரியர் என்கிற வகையில் அமீரகத்தில் நடைபெற்ற தமிழ்த்தேர் மாத இதழ்களுக்கு தனது கவிதைகளைத் தந்து அறிமுகமான இலக்கியத் தோழி இவரின் பெருமைகள் அநேகமாக முகநால், வாசிப்பாளர்கள் வரிசையில் முன்னணியில் என்றைக்கும் விளங்கும்! அத்தகு பிரபலமான ஒருவர் எனது “காதல் பொதுமறை” நூலிற்கு நீண்டதொரு உரைதந்து எனை உவகைக்கடலில் மிதக்கவிட்டிருக்கிறார் எனில் அது மிகையில்லை! சக படைப்பாளர் ஒருவரின் படைப்பை இந்த அளவிற்கு நுகர்ந்து, அதன் உட்பொருளில் நுழைந்து.. எழுத்துக்களின் வண்ணங்கள்.. வடிவங்கள் பற்றியெல்லாம் அகரவரிசையிட்டு ஒரு ஆனந்தக்கோலமிட்டிருக்கிறார். ஏதோ நானும் இந்த நூலைப் படித்தேன்.. ரசித்தேன் என்று கடமைக்காக பதிவிடும் பல பேரில் அடங்கிவிடாமல்.. தூய முயற்சியெடுத்து.. துளித்துளியாய் அதை ரசித்து, ஆளும் தமிழை அதில் கண்டு.. தானும் உணர்ந்ததை எழுத்துவடிவில் நிறைவுடன் தந்திருக்கும் திருமதி.தேனம்மை அவர்களை நிச்சயமாக நன்றிப்பெருக்கோடு பாராட்டுகிறேன். கண்ணதாசன் பாடல்கள் காலத்தின் பதிவுகள், காலத்தை வென்றவை, வாழும் தமிழே வாலி, என் பார்வையில் கண்ணதாசன், நேரம்+நிர்வாகம்=வெற்றி, மனதில் நிறைந்த மக்கள் திலகம், கர்மவீரர் காமராசர், துபாய் வாழ் தமிழ் மக்கள் நெஞ்சில் கண்ணதாசன், நீ வாழ நினைத்தால் வாழலாம், காவிரிமைந்தன் கவிதகள் என்று பட்டியிலிட்டு எழுத்துலகில் தடம்பதிக்கும் எனது படைப்புகளில் அருந்தமிழ் விருந்தினை தமிழ்மக்களுக்குத் தந்திருக்கிறேன் என்று சொன்னால்.. அது காதல் பொதுமறையாகத்தான் இருக்கும்! இதற்கெல்லாம் என்னுள்ளிருந்து என்னை இயக்கும் என் கவி ஆசான் கண்ணதாசனுக்குத்தான் முதல் நன்றி!! இன்று தேனம்மை தந்திருக்கும் பாராட்டுக்களையும்கூட கண்ணதாசனுக்கே காணிக்கையாக்குகின்றேன்..
அன்புமிக்க திருமதி.தேனம்மை லட்சுமணன் அவர்களுக்கு..
பதிலளிநீக்குகாவிரிமைந்தனின் கனிவான வணக்கமும் உளமார்ந்த நன்றிகளும்!
“காதல் பொதுமறை” நூலினைத் தங்களுக்கு வழங்கி தங்களின் பின்னூட்டம் தாருங்கள் என்று பணித்து கிட்டத்தட்ட அதை நானே மறந்து.. இன்று தங்கள் வலைப்பூக்கள் பக்கத்தில் பதிவிட்டமையறிந்து.. நூல் ஒன்றுக்கு இப்படித் தக்கதொரு மதிப்புரை தரமுடியும் என்று இலக்கணம் வகுத்ததுபோலிருந்தது உங்கள் வரிகள்! ஒரு எழுத்தாளனின் எண்ணங்களின் வண்ணங்கள் எழுத்துக்கள் வடிவில்சேர்ந்து படைப்பாய் பரிணமிக்கும்போது.. அதற்கான வாசகர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மட்டும்தான் படைப்பாளன் பெறுகின்ற பதக்கங்களாகும்!
தேனம்மை லட்சுமணன் என்கிற பெயர் வலைதளம்..இணையதளம் என்று வியாபித்திருக்க.. ஆகச்சிறந்த படைப்பாளர் ஒருவர் நம்மோடு நட்பில் இணைந்ததோடு.. தமிழ்த்தேர் இதழின் ஆசிரியர் என்கிற வகையில் அமீரகத்தில் நடைபெற்ற தமிழ்த்தேர் மாத இதழ்களுக்கு தனது கவிதைகளைத் தந்து அறிமுகமான இலக்கியத் தோழி இவரின் பெருமைகள் அநேகமாக முகநால், வாசிப்பாளர்கள் வரிசையில் முன்னணியில் என்றைக்கும் விளங்கும்! அத்தகு பிரபலமான ஒருவர் எனது “காதல் பொதுமறை” நூலிற்கு நீண்டதொரு உரைதந்து எனை உவகைக்கடலில் மிதக்கவிட்டிருக்கிறார் எனில் அது மிகையில்லை!
சக படைப்பாளர் ஒருவரின் படைப்பை இந்த அளவிற்கு நுகர்ந்து, அதன் உட்பொருளில் நுழைந்து.. எழுத்துக்களின் வண்ணங்கள்.. வடிவங்கள் பற்றியெல்லாம் அகரவரிசையிட்டு ஒரு ஆனந்தக்கோலமிட்டிருக்கிறார். ஏதோ நானும் இந்த நூலைப் படித்தேன்.. ரசித்தேன் என்று கடமைக்காக பதிவிடும் பல பேரில் அடங்கிவிடாமல்.. தூய முயற்சியெடுத்து.. துளித்துளியாய் அதை ரசித்து, ஆளும் தமிழை அதில் கண்டு.. தானும் உணர்ந்ததை எழுத்துவடிவில் நிறைவுடன் தந்திருக்கும் திருமதி.தேனம்மை அவர்களை நிச்சயமாக நன்றிப்பெருக்கோடு பாராட்டுகிறேன்.
கண்ணதாசன் பாடல்கள் காலத்தின் பதிவுகள், காலத்தை வென்றவை, வாழும் தமிழே வாலி, என் பார்வையில் கண்ணதாசன், நேரம்+நிர்வாகம்=வெற்றி, மனதில் நிறைந்த மக்கள் திலகம், கர்மவீரர் காமராசர், துபாய் வாழ் தமிழ் மக்கள் நெஞ்சில் கண்ணதாசன், நீ வாழ நினைத்தால் வாழலாம், காவிரிமைந்தன் கவிதகள் என்று பட்டியிலிட்டு எழுத்துலகில் தடம்பதிக்கும் எனது படைப்புகளில் அருந்தமிழ் விருந்தினை தமிழ்மக்களுக்குத் தந்திருக்கிறேன் என்று சொன்னால்.. அது காதல் பொதுமறையாகத்தான் இருக்கும்! இதற்கெல்லாம் என்னுள்ளிருந்து என்னை இயக்கும் என் கவி ஆசான் கண்ணதாசனுக்குத்தான் முதல் நன்றி!! இன்று தேனம்மை தந்திருக்கும் பாராட்டுக்களையும்கூட கண்ணதாசனுக்கே காணிக்கையாக்குகின்றேன்..
நன்றிகளுடன்
காவிரிமைந்தன்
விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி திரு காவிரிமைந்தன் அவர்களே !
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!