விடியல் ப்ரகாஷ் , முகநூல் சகோதரர். குமாரபாளையத்தைச் சேர்ந்தவர். நாற்பத்திரண்டு வயதாகும் இவர் எல் ஐ சி முகவர். சில ஆண்டுகளாக விடியல் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களுக்குச் சேவை செய்து வருகிறார்.
அதுவும் அரசுப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகளாகத் தேர்ந்தெடுத்து அங்கே உள்ள மாணாக்கருக்கு நெகிழிப் பையின் தீமை, தண்ணீர்ச் சிக்கனம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, மரக்கன்று நடுதல், சுகாதாரம் ஆகியன பற்றி விடியல் அமைப்பு மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்.
அவரிடம் நம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டபோது இதை எழுதித் தந்தார். ( விடியல் சேவையில் நீங்க ஈடுபடக் காரணமாய் இருந்த நிகழ்வு ஏதும் இருந்தா பகிருங்க. இல்ல உங்களைத் தூண்டியது எதுன்னு சொல்லுங்க போதும். புகைப்படங்களே எல்லாம் பேசுது.)
(திருமணம் ஆயிடுச்சா. உங்களுடன் இப்பணியில் ஈடுபடுபவர் யார் உங்களுக்குக் கரம் கொடுக்கும் தோழர்களையும் அறிமுகப்படுத்துங்க முடிஞ்சா இன்றிரவுக்குள்/இன்னும் ஓரிரு மணிகளில் விபரம் மட்டும் அனுப்புங்க. நாளைக்கு சனிக்கிழமை. போஸ்ட் போட்டுடுவேன்.)
அவர் தன்னைப் பற்றியும் விடியல் பற்றியும் கூறியது இது.
எனக்கு திருமணமாகி விட்டது ஒரு பையன் ஒரு பெண் இருவரும் படிக்கிறார்கள் நான் பள்ளியில் படிக்கும் பொழுது போட்டிகள் மற்றும் விளையாட்டு என்பது அரிதான ஒன்று . இதேபோல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் நலன் கருதி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எண்ணத்தில் நாமும் பெரியவனாகி வருமானத்திலிருந்து ஒரு பகுதியாக இந்த குழந்தைகளுக்கு செலவு செய்து வருகிறேன் . இது என்னோட சொந்த பணம் . எனக்கு யாரும் இந்த ஒத்துழைப்பு தருவதில்லை. நானே சுயமாக நின்று இப் பணியை மேற்கொண்டு வருகிறேன் . உங்களை போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் இறைவன் அருளால் என்னை உங்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார் மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
விடியல் ஆரம்பம் கல்வி சேவை அமைப்பு
பணிகள்
1. நாட்டுக்காக உழைத்த தேசிய தலைவர்கள் பலரும் நாட்டுக்காக ரத்தம் சிந்தி பல்வேறு காலங்களில் சிறைச்சாலைகளில் அவர்கள் பட்ட சித்தரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதைப்பற்றி வளரும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்களை பற்றி படிக்க வேண்டும், அதற்காகவே கட்டுரைப் போட்டிகள் பேச்சுப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் வைத்து அவர்களை ஊக்கப்படுத்துகிறோம்.
ஒவ்வொரு தேசியத் தலைவருக்கும் ஒரு அரசுப் பள்ளியில் அவரின் பிறந்த நாள் விழா அன்று மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைத்து அந்தத் தலைவரைப் பற்றி வரலாறுகளைக் கூறி சான்றிதழ், பரிசு, புத்தகங்கள் தருகிறோம்.
2) வயதுக்கு வந்த மாணவிகள் கழிப்பறைகள் சுத்தமாக இல்லாததால் அவர்கள் பள்ளியில் உள்ள கழிப்பறையை உபயோகப்படுத்த சிரமப்படுகிறார்கள் . இந்த சிரமத்தை போக்க சிறுநீர் மற்றும் இயற்கை உபாதைகளை அடக்கி வைக்கக் கூடாது என அரசு பெண் மருத்துவரை அழைத்து வந்து அவர்கள் சந்தேகங்களைப் போக்கிக் தெளிவுபடுத்துகிறோம்.
சுகாதாரம்
3 ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி சென்ற ஆண்டு மட்டும் ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக அளித்துள்ளோம்.
4) திருக்குறள் புத்தகம் இலவசமாக தந்து மாதம் 100 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவ மாணவர்களுக்கு பாரதியார் பாரதிதாசன் புத்தகங்கள் தருகிறோம்.
5) தன்னம்பிக்கை பயிற்சி விளையாட்டு போட்டிகள் வைத்தல் இலவச யோகா இலவச கராத்தே பயிற்சி அளிக்கிறோம்.
6) கல்லூரி மாணவர்களிடையே பழைய புத்தகங்களை வாங்கி இல்லாத ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்.
7. நெகிழி ஒழிப்பு பேரணி.
8.குடிநீர் சிக்கனம்.
டிஸ்கி:- அஹா நிஜமாகவே மாணவர்க்கு, எதிர்காலத் தலைமுறையினருக்கு விடியல் ஆரம்பம்தான். தனிமனித முயற்சியாக எவ்வளவு அரிய சேவைகள் செய்துட்டு வர்றீங்க. மனமார்ந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள். . நிஜமாகவே உங்க அமைப்பில் நிறையப் பேர் இருப்பாங்கன்னு நினைச்சேன். தன்னுடைய சொந்த வருமானத்தில் இவ்வளவும் செய்து வரும் உங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் கூட வாழ்த்துக்கள் சகோ. வாழ்க வளமுடன். தொடரட்டும் உங்கள் தொண்டு. உங்க விடியல் ஆரம்பம் அமைப்பு பற்றிக் கூறி சாட்டர்டே போஸ்டை ஒளிரச் செய்தமைக்கு அன்பும் நன்றியும்.

தங்களது சமூக, மக்கள் நலன் சார்ந்த அனைத்து சேவைகளும் மென்மேலும் தொடர தளிர்விடும் பாரதம் சேவை குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.

நல்லதொரு மனிதர். அவரது தொண்டுகள் தொடரட்டும்.
பதிலளிநீக்குபாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வாழ்த்துகள் தேனம்மை அவர்களே. நம் போன்றோரின் ஊக்க வார்த்தைகள் விடியலை விரைவாய் விடிய வைக்கும்.
பதிலளிநீக்குCONGRATS TO YOU AND HATS OFF TO PRAKASH.
பதிலளிநீக்குபோற்றத்தக்க அரிய மனிதர், செயல்கள். விடியல் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி ஸ்டோர் ஸ்ரீனிவாசன்
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
நன்றி பெயரில்லா
நன்றி ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் ஐஏஎஸ் அகாடமி
நன்றி ஜம்பு சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
பதிலளிநீக்குவாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
பதிலளிநீக்குSuper Anna.
பதிலளிநீக்குஎன்னுடைய அருமை நண்பர் விடியல் பிரகாஷ் ராமசாமி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அவர் கல்விப் பணியில் மாணவ மாணவிகளுக்கு அருமையான பணிகளை நலத்திட்ட உதவிகளை செய்து வரும் அருமை நண்பருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
பதிலளிநீக்கு