2017 -ம் ஆண்டில் என்
வலைத்தளத்தில் நட்புக்களைப் பற்றி
பகிரும் விதமாக
'என்னைப் பற்றி
நான்'
என்ற
தலைப்பில் வாரத்தில் ஒரு
நாள்
(புதன்
அல்லது
ஞாயிறு)
ஒதுக்கலாம் என்று
முடிவு
செய்திருக்கிறேன்.
உங்களுடன் சேர்ந்து சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். யார் முதலில் அனுப்புகிறார்களோ அதன்
அடிப்படையில் வெளியிட எண்ணம்.
தாங்கள் செய்ய
வேண்டியது உங்களைப் பற்றி
நீங்கள் என்ன
வேண்டும் என்றாலும் சொல்லலாம்... முக்கியமாக வலைப்பதிவுகுறித்தும் பணியில் கிடைத்த மறக்க
முடியாத அனுபவம், புனைப்பெயர் வைத்து
எழுதினால் அது
குறித்து சொல்ல
முடியும் என்றால் சொல்லலாம், தங்களின் நிறைவேறிய / நிறைவேறாத ஆசை,
தங்களின் சாதனையாக நினைப்பது, எதிர்கால திட்டம் என
எல்லாவற்றையும் குறித்துச் சொல்லலாம்.
மிகச் சிறப்பான அறிமுகத்துக்கும் பதிவிட்டு என்னை வெளிப்படுத்த உதவியமைக்கும் அன்பும் நன்றியும் குமார் சகோ :)
இதை இங்கேயும் படிக்கலாம்.
http://vayalaan.blogspot.com/2017/04/12.html
மிகச் சிறப்பான அறிமுகத்துக்கும் பதிவிட்டு என்னை வெளிப்படுத்த உதவியமைக்கும் அன்பும் நன்றியும் குமார் சகோ :)
இதை இங்கேயும் படிக்கலாம்.
http://vayalaan.blogspot.com/2017/04/12.html
என்னைப்
பற்றி நான் :-
முதலில்
என்னைப் பற்றி நான் எழுத அழைத்த சகோ குமாருக்கு நன்றி. ஏன்னா சமீபகாலமாகத்தான் என்னைப்
பற்றி நான் அதிகமா சிந்திச்சிக்கிட்டு இருக்கேன். என்ன செய்திருக்கேன். செய்ததெல்லாம்
உருப்படியா செய்திருக்கேனா, இன்னும் என்ன என்ன செய்யணும்னு எல்லாம். தொடர்ந்து வலை
உலகில் செயல்பட்டுவரும் ( கிட்டத்தட்ட 100 பேர் இருப்போம் ) வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும்
விதமா இந்தப் பதிவு அமைந்திருப்பதுக்கு முதலில் பாராட்டுகள் குமார் சகோ. குமார் சகோவின்
சிறுகதைகள் மிக அருமையா இருக்கும் அதுக்கும் பாராட்டுகள் சகோ.
நான்
இல்லத்தரசி. 2009 ஜூலை 13 ஆம் தேதியில் இருந்து சும்மா என்ற வலைப்பூவில் எழுதிட்டு
வரேன். இதுக்குப் பேர் வைக்கும்போது என் மூத்த பிள்ளை சொன்னது மறக்க முடியாது. சும்மா
வெட்டியாத்தானே வீட்டுல இருக்கீங்க அதுனால சும்மான்னு வைப்போம்னு. நானும் பூம் பூம்
மாடு மாதிரி தலையாட்டினேன். ப்லாகில் எழுதினால் போதும்னு J
அப்புறம்
கோலங்கள், சமையல் குறிப்புகள், டைரிக் கிறுக்கல்கள்னு இன்னும் 4 ப்லாகுல எழுதிட்டு
இருக்கேன். CHUMMA அப்பிடின்னு ஆரம்பிச்சது இப்போ ஆங்கில சமையல் ப்லாகா பாதில நிக்குது.
சும்மாவைத் தொடர ஊக்கம் கொடுத்த வலைத்தள நட்புகள் லிஸ்ட் பெரிசு. இராகவன் நைஜீரியா,
விஜய், நேசன், பாரா, சங்கர்ஜி, ஐ எஸ் ஆர் செல்வகுமார், சுரேஷ் சூர்யா, டிடி, முனியப்பன்
சார், சீனா சார், விஜிகே சார், தமிழ் உதயம், ஆர் ஆர் ஆர், ராமலெக்ஷ்மி, சாந்தி, துளசி,
வல்லிம்மா, ரமணி சார், வெற்றிவேல் சார், மேனகா, ஆனந்தி, ஹேமா, கலையரசி, சரஸ்மா, யாழ்பாவண்ணன்
சகோ , பகவான் ஜி, கில்லர் ஜி, குமார் சகோ, வெங்கட் சகோ, ஜெயக்குமார் சகோ, பாலா சார்,
ஸ்ரீராம், கீதா மேம், விஸ்வநாத், ஜம்பு சார், துளசி சகோ, கீதா, கீத்ஸ், செந்தில் சகோ,
நவாஸ் சகோ, அக்பர் சகோ, ஜமால் சகோ, ப்ரகாஷ் சகோ, இளங்கோ சார், நாகேந்திர பாரதி சகோ,
சுரேஷ் சகோ, இன்னும் பலருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்
அப்புறம்
நண்பர் ஐ எஸ் ஆர் செல்வகுமார் கொடுத்த ஊக்கத்தால் பத்ரிக்கைகளுக்கு எழுத ஆரம்பிச்சேன்.
பத்ரிக்கைகளுக்குக் கவிதை கதை கட்டுரை மட்டுமில்ல சமையல் குறிப்புகளும் கோலங்களும்
எழுதி இருக்கேன். நிறையப் பிரபலங்களை நேர்காணல் & பேட்டி எடுத்திருக்கேன். மருத்துவ விழிப்புணர்வு பற்றிய பேட்டிகளும் எடுத்திருக்கேன். ப்லாகர் என்று போட்டே பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்புப் பேச்சாளரா அழைக்கப்பட்டிருக்கேன்
என்பதே சந்தோஷம். தேனு, தேனம்மைலெக்ஷ்மணன், ஆண்டாள், தேனாஞ்சி, சபா வெங்கட், தேனு கண்ணன், கோதை என்ற
பெயர்களில் எல்லாம் எனது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன.
ஒரு
மூணு ஆசையை வீட்டுல சொல்லி இருக்கேன். அது குறித்து இங்கேயும் பிரஸ்தாபிக்கிறேன். ஜெயாம்மா
கையால விருது வாங்கணும்னு நினைச்சேன். அப்புறம் சங்கர் டைரக்ஷனில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில்
ஒரு சினிமா பாடல் எழுதி அது உலகப் புகழ் பெறணும்னு. மூணாவதா சாகித்ய அகாடமி விருது
வாங்கணும்னு. ஹாஹா முதல் ஆசை கோவிந்தா கோவிந்தா. அம்மா இலக்கிய விருதைக் கூட வாங்க
முடியுமா தெரில. அடுத்து சங்கர் இப்ப படம் எடுக்கிறாரா என்னன்னே தெரில. மூணாவதா இப்பிடி
என்னோட சொந்த ப்லாக் மொக்கைகளிலேயே தினம் தினம் குளிச்சு எந்திரிச்சுப் பொழுதைக் கழிக்கும்போது ஆழ்ந்த
ஒரு பொருளைப் பற்றி நாவல் எழுதி அது சாகித்ய அகாடமி விருது வாங்கி… ஹ்ம்ம். இருந்தாலும்
நான் நம்பிக்கையைக் கைவிடலை. எப்பவாவது இது மூணும் நிகழக் கூடிய சாத்யக்கூறு இருக்கு.
அதுக்குத் தகுந்த சூழலை நான் உருவாக்கிக்கலை, என்னை மேம்படுத்திக்கலைன்னே சொல்வேன்.
சரி முயற்சிதானே வாழ்க்கை. மெல்ல முயல்வோம் J
எதிர்காலத்
திட்டம்னா தொடர்ந்து ப்லாக் எழுதணும். இன்னும் மேம்படுத்தப்பட்ட படைப்புகளோட எல்லாரையும்
சந்திக்கணும். இன்னும் பல நாடுகள் பல உணவுகள் பற்றி எழுதணும். ப்லாக் எழுத்தின் மூலமே
பெருந்தலைகளை அசைக்கும் வல்லமை பெறணும். அவ்ளோதான். J
என்னைப்
பற்றி நான் எழுதி என் மனோ வியாகுலங்களையும் மனோ ராஜ்ஜியங்களையும் வெளிப்படுத்த இடம்
கொடுத்த சகோ பரிவை சே குமார் அவர்களுக்கு நன்றியும் அன்பும்.:) :) :)
வாழ்த்துகள் சகோதரி...
பதிலளிநீக்குஎழுதுவதற்கு நல்ல சூழ்நிலை ஓரளவு பிறரிடமிருந்து ஊக்கம் தேவை என நினைக்கிறேன்செய்ய்ய முடிந்ததைச் செய்வோம் நன்றாக வந்தால் யாரும் தடுக்க முடியாது வாழ்த்துகள்
பதிலளிநீக்குதாங்கள் நினைத்துள்ளவைகள்
பதிலளிநீக்குஅடையக் கூடியவைகளாகவே
தாங்கள் அதற்கான முழுத் தகுதிப்
படைத்தவர்களாகவே இருக்கிறீர்கள்
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
நன்றி டிடி சகோ
பதிலளிநீக்குஆம் பாலா சார். உங்கள் ஆசிக்கு நன்றிகள்.
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அன்பும் ரமணி சார் !!!
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
I thought you are a Central Govt employee from your participation in a function at Shastri Bhavan.
பதிலளிநீக்கு