எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 ஜூலை, 2015

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்புச் சாமானும் நுங்கு வண்டியும்.


45. இனிஷியல் கேம் :-

ஒரு பேப்பரில் அடுத்தடுத்து டப்பா போடும் விளையாட்டு -- மேலே கீழே கோடுபோட்டு டப்பாவா ஃபில் பண்ணி ஒவ்வொரு டப்பாவிலும் முடிவுக்கோடு போட்டவங்க இன்ஷியல் எழுதிக்கலாம்

இது இருவர் விளையாடும் விளையாட்டு. ஒரு ப்ளயின் பேப்பரில் ஒரு கோடு போட்டு ஆரம்பிக்க வேண்டும். அடுத்தவர் அதன் மேல் அல்லது கீழ் அல்லது சைட் கோடு போடலாம். அடுத்து முதலாமவர் மூன்றாவது கோடு போட நான்காவதாக ஒரு கோடு போட்டு டப்பா போல முடிக்க வேண்டும். இது அடுத்தவர் போட்டு விடாமல் நாமே போடவேண்டிய ஒரு புத்திசாலித்தனமான விளையாட்டு. அதிகம் யார் இன்ஷியல் இருக்கிறதோ அவரே ஜெயித்தவர். இதை 3 வயதுக் குழந்தையுடனும் விளையாடலாம்

46. அம்மா குத்து அப்பா குத்து.  

ஏழெட்டு மாதக் குழந்தையிலிருந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.இரு கைகளையும் நாம்விரித்துப் பிடித்துக் கொண்டு அதன் நடுவில் 

அப்பா குத்து
அம்மா குத்து
பிள்ளையார் குத்து
பிடிச்சுக்க குத்து 

என்று நாம் சொல்லியபடி கைக்குள் வலது கை முஷ்டியை மடக்கிக் குத்தச் சொல்லிக் கொடுக்க வேண்டும். மூன்று முறை பிடிக்காமல் நான்காவது முறை பிடிச்சுக்க குத்து என்று சொல்லிக் குத்தும்போது அதன் முஷ்டியை படக்கென்று பிடித்துக் கொள்ள வேண்டும். அது அதற்குள் கையை விடுவிக்கப் பயிற்சி பெற வேண்டும்

நாமும் அதைக் கையை விரிக்கச் சொல்லி இதே போல் குத்திப் பிடிக்கச் சொல்லலாம்.

அந்தக் காலத்தில் பிள்ளைகளின் கை கால் செயல்பாட்டுக்காகவும் வார்த்தைப் பயிற்சிகளுக்காகவும் இம்மாதிரிப் பொழுதுபோக்கு விளையாட்டுகள் விளையாடப்பட்டிருக்க வேண்டும்.

இன்றைய க்ரச் உலகில் தந்தைக்கும் தாய்க்கும் நேரமில்லை. தாத்தா பாட்டி தங்கள் ரூமில் அல்லது தங்கள் ஊரில் இருக்கிறார்கள். இதை எல்லாம் பயிற்சி செய்ய உலகைக் கற்றுக் கொள்ள பிள்ளைகளுக்கும் நேரமிருப்பதில்லை. நேரடியாகவே உலகையும் வார்த்தைகளையும் கற்றுக்கொண்டு விடுகிறார்கள் .

47. பாட்டுக்குப் பாட்டு. அந்தாக்ஷரி. 

 பாட்டுக்குப் பாட்டு இது அந்தாக்ஷரி மாதிரி இருவர் பாட வேண்டும். ஒருவர் பாடும் பாடலின் முடிவில் உள்ள வார்த்தையில் இருந்து அடுத்தவர் பாட ஆரம்பிக்க வேண்டும். அது சினிமா பாடலாயினும் சரி ராக் பாப் பாடலாயினும் சரி அல்லது ஸ்லோகம் பக்திப் பாடலாயிருந்தாலும் சரி. அதன் முடிவில் உள்ள வார்த்தைகள் அல்லது ஒரு எழுத்தை மட்டும் வைத்துப் பாட வேண்டும். இதனால் புதுப்புது பாடல்கள் ராகங்கள் இசை அறிமுகமாகும். ஐந்து அல்லது பத்து செகண்டுக்குள் பாடல் ஆரம்பிக்காவிட்டால் அவுட் என்று சொல்லி அடுத்து இருப்பவர்கள் ஏற்கனவே இருப்பவருடன் பாட அழைக்கலாம்.

48. கண்ணாமூச்சி வகை - 2.

இது கண்ணாமூச்சியிலேயே வேறொரு வகை. ஒரு பொருளை கண்மூடிக்கொண்டுபோயிப்  போட்டுட்டு தேடச் சொல்றது கண்ணைப் பொத்தியபடி அல்லது கண்ணைத் துணியால் கட்டி கையைப் பின்புறமாக வைக்கச் சொல்லி அவர்களைக் கூட்டிச் சென்று அந்தப் பொருளை ஓரிடத்தில் போடச் சொல்ல வேண்டும். அதன் பின் கண் கட்டை அவிழ்த்துவிட்டு அந்தப் பொருளை எங்கே போட்டோம் என்று தேடித்தரச் சொல்ல வேண்டும்.  .

49. நுங்கு வண்டி

நுங்கு வெட்டியபின் காலியான பிடி நுங்கு இரண்டை எடுத்து ஒரு கட்டையில் செருகிக் கொள்ள வேண்டும். அதை ஒரு குச்சியில் ( ஒய் வடிவக் குச்சியில் பிடித்து உருட்டிக் கொண்டே ஓடவேண்டும். இதுதான் நுங்கு வண்டி. இதைச் சீவிய தென்னை மட்டைக் குச்சியைக் கொண்டும் ஓட்டுவதுண்டு.

50.  சொப்பு சாமான் வைத்து விளையாடுவது

இது பகிர்ந்து உண்ணும் குணத்தைக் கொண்டு வருகிறது. பிற குழந்தைகளுடன் அட்ஜஸ்ட் செய்து செல்லும் குணத்தையும் விருந்தோம்பலையும் கற்றுக் கொடுக்கிறது. 

சொப்பு சாமான்கள் நகரத்தார் திருமணங்களில் இரும்பு ப்ளாஸ்டிக் மரம் ஆகியவற்றில் கொட்டான்களில் மூடி போட்டு வைக்கும் வண்ணம் திருமண சீரில் பெண்ணுக்குக் கொடுக்கும் சாமானில் பரப்புவார்கள். இது சில சமயம் மண்ணில் செய்யப்பட்ட குட்டி பானை சட்டி செட்டாகவும் இருக்கும். இதைப் பெண் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுப்பார்கள். அவர்கள் இதை வைத்து அடுப்பில் சோறாக்குகிறேன் என்று வீட்டில் இருக்கும் அரிசி பருப்பை அம்மாவிடம் வாங்கி வந்து தண்ணீரில் கலக்கி பூவரச இலையில் படைத்து விளையாடுவார்கள். 

நாங்கள் சிறுபிள்ளையாயிருந்த போது ஒரு முறை குட்டி இரும்பு கடாய் ஒன்றை இரும்பு அடுப்பில் வைத்து தண்ணீர் ஊத்தி பேப்பர் சுள்ளி எல்லாம் போட்டு எரித்து சோடா பாட்டில் மூடியால் வேப்பிலையை வட்ட சக்கரமாக வெட்டி தண்ணீரில் போட்டு அப்பளக் குறடால் எடுத்து அப்பளம் பொரிக்கிறேன் என்று வைத்து விளையாடி இருக்கிறோம். J


51. ஊஞ்சல்
 
தொட்டிச் சேலையைக் கட்டி கைக்குழந்தைகளையும் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளையும் ஊஞ்சலாட்டுவது உண்டு. அதேபோல் தோட்டத்தில் மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடுவதுண்டு. பார்க்குகளிலும் இரும்பு ஊஞ்சல்களில் விளையாண்டதுண்டு.

எங்கள் வீடுகளில் தொட்டில் போல நான்கு பக்கமும் சித்திர வேலைப்பாடு உள்ள கட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு நான்கு இரும்புச் சங்கிலிகளால் உத்தரத்தில் கோர்த்துத் தொங்க விடப்பட்டிருக்கும் தேக்கு மர ஊஞ்சல்கள் உண்டு. அவை பெரும்பாலும் வளவுகளில் மாட்டப்பட்டிருக்கும். அவைகளில் ஆடுவது எங்கள் விடுமுறைப் பொழுது போக்கு. அதில் 4 முதல் 6 பேர் வரை அமரலாம். இரு பக்கமும் இருவர் அமர்ந்து எதிர் எதிரே வரும் பித்தளை உத்திர வளையங்களைக் காலால் தொட்டு டக் டக் என்று சத்தமெழுப்புவது மிகப் பிடித்த விளையாட்டு. சில சமயம் பல் கூசும், ஒரு மாதிரி த்ரில்லிங்க் விளையாட்டு இந்த ஊஞ்சல் ஆடுவது.

52.தென்னை மட்டை சவாரி.

தோட்டத்தில் விழுந்து கிடக்கும் தென்னை மட்டையின் தோகைப்பகுதியில் ஒருவர் அமர்ந்து கொள்ள இன்னொருவர் மட்டைப் பகுதியைப் பிடித்தபடி இழுத்துச் செல்வது இது. இது போல ஒருவர் அமர மற்றவர் மாற்றி மாற்றி இழுத்துச் சென்று விளையாடலாம். சவாரி போறேன் என்று அமர்ந்து கொள்ளலாம். அல்லது மட்டையின் நடுப்பகுதியைப் பிடித்தபடி குத்தவைத்தும் கொள்ளலாம். 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் -- பகுதி - 1.தாப்பூ தாமரைப் பூ.

2. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட்டப் ப்ராந்து.


3. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 3. கல்லா மண்ணா.

 

 

4.  குழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம்ஸ் - INDOOR GAMES )

 

5. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 5. ஐ ஸ்பை, I SPY.

 

6. குழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு. 

 

விளையாட்டும் வார்த்தைகளும். 

 

 7. குழந்தைகள் விளையாட்டு பகுதி 7 . ஈஸி சுடோகும் காகுரேவும்.

 

8.  குழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.

 

 

9. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா இரட்டையா & ஒருபத்தி திருபத்தி. 

 

10. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்புச் சாமானும் நுங்கு வண்டியும்.



5 கருத்துகள்:

  1. பாட்டுக்கு பாட்டு பேவரைட்... மற்றவைகளை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  2. அருமை. சொப்பு சாமான் விளையாட்டு, இரும்பு, மண், மரசாமான்கள் எல்லாம் நானும் விளையாடி இருக்கிறேன். இப்போது பேரன்களும், பேத்திகளும் விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. சின்ன வயதில் விளையாடிய விளையாட்டுகளை நினைவு கூற வைத்துவிட்டீர்கள்! இன்றைய குழந்தைகள் இதெல்லாம் விளையாடாமல் போகோவே கதியென்று இருப்பது வேதனை!

    பதிலளிநீக்கு
  4. அஹா எனக்கும் பிடித்தது பாட்டுக்கு பாட்டு. கருத்துக்கு நன்றி டிடி சகோ

    நன்றி கோமதி மேம். பேரன் பேத்திகளுமா. ஆச்சர்யம் :)

    நன்றி சுரேஷ் சகோ . சரியா சொன்னீங்க. என்ன செய்வது அடுத்த தலைமுறை மாறிவிட்டது.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...