|
நம் தோழி எடிட்டர் முருகேஷ் பாபு அவர்கள் குடும்பத்தோடு பின்னணியில் இருப்பவர் நண்பர் நரேந்திர குமார். |
ஒரு முறை காரைக்குடி வள்ளல் அழகப்பர் பதிப்பகத்தைச் சேர்ந்த திரு. நாராயணன் அவர்கள் என் கணவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது இந்தக் காலத்தில் மாசத்துக்கு 3000/- ரூபாய்க்குக் கூட உடைகள் வாங்குகின்றார்கள் இளைஞர்கள். ஆனால் வருடத்துக்கு 300 ரூபாய்க்குக் கூடப் புத்தகம் வாங்குவதில்லை எனக் குறைப்பட்டுக் கொண்டார்.
ஆனால் என் வதனப் புத்தக நண்பர்கள் பலரை நான் புத்தகத் திருவிழாவில் சந்தித்தேன். கை கொள்ளாமல் புத்தகங்களோடு பார்த்தவர்கள்தான் அதிகம். அன்றைய ஒ எம் சி ஏ கிரவுண்டே புத்தக வாசனையால் நிரம்பிக் கிடந்தது.
அதிலும் நரேந்திர குமார் மற்றும் தோழர் மபா வாங்கிய லிஸ்ட் ரொம்பப் பெரிசு. அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்ததையும் வலைத்தளத்தில் பகிர்ந்திருந்ததையும் இங்கே தருகிறேன்.
முதலில் நரேந்திரகுமார்.
//// இந்த
புத்தக கண்காட்சி எனக்கு அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி மற்றும்
புது எழுத்தாளர்கள் ஸ்பெஷல். கொஞ்ச நாள் கழிச்சு போடலாம்ன்னு பார்த்தேன்.
சில நண்பர்கள் புத்தக கண்காட்சியில் என்ன புத்தகங்கள் வாங்கினீங்கன்னு
ரொம்ப ஆர்வமா கேட்கிறதால........
சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கியவை :
கொற்கை - ஜே.டி.குரூஸ் - காலச்சுவடு
ஈழம் தேவதைகள் கைவிட்ட தேசம் - Tamilnathy Rajarajan - காலச்சுவடு
மூன்றாம் சிலுவை - Uma Varatharaajan - காலச்சுவடு
ஒற்றன் - அசோகமித்திரன் - காலச்சுவடு
தீண்டப்படாத முத்தம் - சுகிர்தாராணி - காலச்சுவடு
காலக்கண்டம் - எஸ்.செந்தில்குமார் - உயிர்மை
சந்தன மரங்கள் - கமலாதாஸ் - உயிர்மை
நீலநதி - Lakshmi Saravanakumar - உயிர்மை
பூனைகள் இல்லாத வீடு - சந்திரா - உயிர்மை
எதிர்குரல் 3, 4 - மனுஷ்யபுத்திரன் - நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
பிரண்டையாறு - மெலிஞ்சி முத்தன் - கருப்புப் பிரதிகள்
போர் ஓயவில்லை - ஷோபா சக்தி - கருப்புப் பிரதிகள்
ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் - தமயந்தி - கருப்புப் பிரதிகள்
எண்ணும் மனிதன் - மல்ஹா தாஹன் (அகல்) - கறுப்புப் பிரதிகள்
மானசரோவர், 18 வது அட்சக்கோடு, ஆகாயத் தாமரை, இன்று, குறுநாவல்கள் (3 தொகுதிகள்) - (நிவேதிதா பதிப்பகம்) (கிழக்கு) (பனுவல்)
லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - Vaa Manikandan - டிஸ்கவரி புக் பாலஸ்
மஞ்சள் வெயில் - யுமா வாசுகி - Vediyappan Discovery Book Palace
அஞ்சாங்கல் காலம் - உமா மகேஸ்வரி (வம்சி) - டிஸ்கவரி புக் பாலஸ்
யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி - தமிழினி
சாத்தான்களின் அந்தபுரம் - நறுமுகை தேவி - பனுவல்
சிநேகத்தின் வாசனை - Sakthi Selvi - பனுவல்
உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணக்குமார் - பனுவல்
பிருஹணள்ளை - கிருஷ்ண மூர்த்தி - Panuval - Online Tamil BookStore
ஏற்கெனவே - யுவன் சந்திரசேகர் - கிழக்கு
பனி மனிதன் - ஜெயமோகன் - கிழக்கு
கால வெள்ளம், தந்திர பூமி, குருதிப்புனல், வேர்ப்பற்று, வேதபுரத்து
வியாபாரிகள், ஹெலிகப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, வெந்து தணிந்தது காடுகள்,
தீவுகள், ஆகாசத் தாமரை - இந்திரா பார்த்தசாரதி - (கிழக்கு, அகநாழிகை)
உலோகம் - ஜெயமோகன்
ஏழாம் உலகம் - ஜெயமோகன் - (கிழக்கு, அகநாழிகை)
கவிதையின் கால் தடங்கள் - செல்வராஜ் - அகநாழிகை
ஆல்பர்ட் மெம்மியின் இனவெறியும் வித்தியாசமும் - புதுப்புனல் - அகநாழிகை
அன்னப்பட்சி - Thenammai Lakshmanan - அகநாழிகை
கூனன் தோப்பு - தோப்பில் முகம்மது மீரான் - அடையாளம்
பழையன கழிதல் - சிவகாமி - அடையாளம்
ஆனந்தாயி - சிவகாமி - அடையாளம்
அக்கரைப் பூக்கள் - அக்மேதவா - அடையாளம்
மாகடிகாரம், வளையல்கள் அடித்த லூட்டி, பென்சில்களின் அட்டகாசம் - விழியன் Books for Children
பெண்ணென்று சொல்வேன், மேதைகளின் குரல்கள் - Deepa Janakiraman - மலைகள் வெளியீடு -அந்திமழை
காந்தி எல்லைகளுக்கு அப்பால் - (சொல் புதிது) - வம்சி
நட்சத்திரங்கள் ஒளிந்துக் கொள்ளும் கருவறை - பவா செல்லத்துரை - வம்சி
ஓசை புதையும் வெளி - பரமேசுவரி திருநாவுக்கரசு - வம்சி
நிறைய அறைகள் உள்ள வீடு - Kutti Revathi - பாதரசம் வெளியீடு
காலவெளி - விட்டல் ராவ் - பாதரசம் வெளியீடு
பைத்திய ருசி - கணேசகுமரன் - நாதன் பதிப்பகம்
தமிழிசை வரலாறு - நா.முகம்மது - நாதன் பதிப்பகம்
மோகமுள் - தி.ஜானகிராமன் - ஐந்திணை பதிப்பகம்
பொன்னியின் செல்வன் - கல்கி (மலிவு பதிப்பு) - மணிவாசகர் பதிப்பகம்
மறக்கவே நினைக்கிறேன் - மாரி செல்வராஜ் - விகடன் பிரசுரம்
அம்பேத்கர் - அஜயன் பாலா - விகடன் பிரசுரம்
திருப்பட்டூர் அற்புதங்கள் - விகடன் பிரசுரம்
அசடு - காசியபன் - விருட்சம் வெளியீடு
உரையாடல்கள் - அசோகமித்திரன் - விருட்சம் வெளியீடு
ஈழவாணி சிறுகதைகள் - Eezhavaani - மித்ர பதிப்பகம்
மகாத்மாவும் இசமும் - பாரதி புத்தகாலையம்
கவியரசர் என் காவலர் - பழ.நெடுமாறன்
பத்தினிப் பெண்டிர் அல்லோம் - அ.கா. அழகர்சாமி Kayal Kavin Pathippagam
செம்மணி வளையல் - அலெக்சாண்டர் குப்ரின் - புலம்
ஜஸ்டின் - மர்க்விஸ் தே சாட் - புலம்
ஒவ்வொன்றுக்கு பின்னாலும் அரசியல் - அ மார்க்ஸ் - புலம்
அம்பேத்கரின் வழித்தடத்தில் - பகவான்தாஸ் - புலம்
சிலந்தியும் ஈயும் - லிப்னஹெட் - புலம்
நவீன அரபு இலக்கியம் - எச்.பீர்.முகம்மது - எதிர்
மச்சம் - லக்ஷ்மி சரவணக்குமார் - உயிர் எழுத்து
சமுதாயமும் தனிநபரும் - NCBH
குடும்பம், தனிசொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - எங்கெல்ஸ் - NCBH
அமேரிக்கா - ரிச்சர்ட் பேக்கர் - விடியல்
வனம் பேசும் வரலாறு - விடியல்
நீட்சே தத்துவமும் வாழ்வும் - விடியல்
பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும் - விடியல்
அம்பேத்கரியர்கள் நெருக்கடிகளும் சவால்களும் - விடியல்
வரலாற்றில் கிறித்தவம் - எங்கெல்ஸ் - விடியல்
கருப்பாயி என்கிற நூர்ஜஹான் - அன்வர் பாலசிங்கம் - விடியல்
பொது உடைமை கல்வி முறை - குரூப்ஸ்கயா - விடியல்
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை வேங்கடசாமி - விடியல்
இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான சோஷியலிசம் - மார்த்தா அர்நேக்கர் - விடியல்
அன்பளிப்பாக கிடைத்த புத்தகங்கள் :
கானல் வரி - தமிழ்நதி
மனநேயக் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கலைஞன் - ரமேஷ் பிரேதன் - Manonmani Pudhuezuthu
களம், காலம், ஆட்டம் - சபரிநாதன் - புது எழுத்து
பூவரசி இதழ்
இத்தனை புத்தகங்களான்னு கண்ணு வெச்சுடாதீங்கப்பா !!!
மூணு, நாலு வருஷமா தீபாவளி, பொங்கலுக்கு துணிகள் எடுக்காம, பொறந்தநாள் கூட கொண்டாடாம சேர்த்த காசுல வாங்கினது......( ) /////
அட.. நெசம்மாவே ட்ரெஸ் வாங்குற காசுல புக்கு வாங்கி இருக்காரு.. !!!
-----------
தோழர் மகேஷ் பாபு பத்மநாபன் வாங்கிய புத்தகங்கள் இவை.
1 'மீதமிருக்கும் வாழ்வு'.
-என்.ஸ்ரீராம்.
பாதரசம் வெளியீடு,சென்னை.
பக்கம் 78. விலை ரூ80/-
2 'விமலாதித்த மாமல்லன் கதைகள்'
-விமலாதித்த மாமல்லன்
உயிர்மை பதிப்பகம், சென்னை.
பக்கம் 312. விலை ரூ180/-
3 'தப்புகிறவன் குறித்த பாடல்'
-லிபி ஆரண்யா.
உயிர் எழுத்து, திருச்சி.
பக்கம் 56. விலை ரூ40/-
4 'கவிதையின் கால்தடங்கள்'
50 கவிஞர்களின் 400 கவிதைகள்
தொகுப்பு செல்வராஜ், ஜெகதீசன்.
அகநாழிகை பதிப்பகம், சென்னை.
பக்கம் 268. விலை ரூ.230/-
5 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'
-கி.ராஜநாராயணன்.
அகரம், (அன்னம்) தஞ்சாவூர். .
பக்கம் 248. விலை ரூ150/-
6 'மார்கோ போலோ பயணக்குறிப்புகள்.'
-தமிழில் பொன் சின்னத்தம்பி முருகேசன்.
அகல், சென்னை.
பக்கம் 312. விலை ரூ.240/-
7 'டேவிட் ஒகில்வி' (ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள்)
கிழக்கு பதிப்பகம். விலை ரூ.125/-
8 அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்.
- என்.சொக்கன்.
கிழக்கு பதிப்பகம். விலை ரூ.100/-
9 லிண்ட்சே லோகன் w/o மாரியப்பன். (மின்னல் கதைகள்)
- வா. மணிகண்டன்.
யாவரும்.காம். விலை ரூ.90/
10 அன்ன பட்சி
- தேனம்மை லெக்ஷ்மணன்
அகநாழிகை. விலை ரூ.80/-
11 தஞ்சாவூர் - பெரிய கோவிலின் 1001-வது ஆண்டு சிறப்பு வெளியீடு.
-டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்.
அன்னம், தஞ்சாவூர்.
பக்கம் 384. விலை ரூ.400/-
12 காசி ஆனந்தன் நறுக்குகள்.
காசி ஆனந்தன் குடில். விலை ரூ.100/-
13 சேதுக் கால்வாய் தமிழர்கால்வாய்.
காந்தளகம்.
14
திருமுறைத் திருமணம் / சைவத் திருமண தமிழ் மந்திரங்கள்.
புத்தக விமர்சனம் பிரிதொரு நாளில்.
-தோழன் மபா. ////
இவர்கள் இருவரும் என்னுடைய அன்னபட்சியை வாங்கி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். நன்றி நன்றி தோழர்களே. :)
அன்னபட்சி கிடைக்குமிடம் :-
அகநாழிகை பதிப்பகம். சைதாப்பேடை, சென்னை.
”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.
சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்
மற்ற
ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125
ரூபாய்
இணையத்தில் வாங்க.:-
.
http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795
http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795
Aganazhgai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.
இத்தனை நூல்களா...? ம்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநிறைய வாசிக்க வாங்கியிருக்கிறீர்கள்....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
நன்றி தனபால் சகோ
பதிலளிநீக்குநன்றி குமார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!