எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 பிப்ரவரி, 2014

தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

11. எனக்கென ஏற்கனவே..

எனக்கென ஏற்கனவே இருப்பவள் இவளோ.. இந்தப் பாடலில் பிரசாந்த் சிம்ரனுக்காக லைலாவைக் காதலிப்பார். அதனால் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து பஸ் நகரும்போது ஓடிவந்து ஃபுட்போர்டில் ஏறிப் பார்த்துக் கொண்டே வருவார். இருவரின் கண்கள் பேசும் பாஷையும் அழகு.

12. மலர்களே மலர்களே..

பிரபுவும் நக்மாவும் பாடும் பாடல். நக்மாவின் கண்களில் ஒளிவிடும் காதல் ஏக்கம் இந்தப் பாடலுக்கு மிகுந்த அழகூட்டும். மேலும் காட்சியமைப்பும் இரு இரு பிரபுதேவாக்கள் மாற்றி மாற்றி வருவதும் நக்மாவைச் சூழ்ந்து எந்தத் திசையிலும் பிரபுதேவாவே இருப்பதுமாக சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும். கால்கள் வைக்கும் தடங்களில் எல்லாம் தாமரை மலர்வது எக்ஸ்ட்ரா அழகு. 

13. புத்தம் புதுக் காலை.

எப்பக் கேட்டாலும் புத்துணர்வை ஊட்டக் கூடிய பாடல்.  கார்த்திக்கும் ராதாவும் அறிமுகமான படம்.


14. செந்தாழம் பூவில். - முள்ளும் மலரும்.

சரத் பாபுவும் ஷோபாவும் இந்தப் பாடலில் பேசாமல் பேசிக் கொள்வது அழகு. யதார்த்தமான கிராமத்துப் பெண்ணாக இயல்பான அழகோடு ஷோபனா இருப்பார்.  மலையின் இயற்கையை அள்ளி வந்த இசையும் காட்சியும் அருமை.

15. பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே

ராதாவும் விஜய்காந்தும் இதில் சிறப்பாக நடித்திருப்பார்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள். ராதா ரொம்ப கம்பீரமாக இருப்பார்.. அது எனக்குப் பிடிக்கும் 

16. என் இனிய பொன் நிலாவே.

இது ஒரு மாதிரி கொஞ்சம் மனநிலை சரியில்லாத ஒரு ஹீரோ ஹீரோயினை கடத்தி வந்து  காதலிப்பதான கதை. ஒரு நிலவு இரவில் கிடார் வாசித்தபடி பிரதாப் போத்தன் பாடும் இந்தப் பாடல் காட்சியழகு. அதில் ஷோபனா ஒரு ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து இருப்பார். அவரின் புன்முறுவலும் கண்களும் கொள்ளை அழகு.

17. ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது


இந்தப் பாடலில் இரு குழந்தைகள் நட்புணர்வோடு ஓடி ஆடுவது பாடல் காட்சியாக்கப்பட்டிருக்கும். மணல் வீடு கட்டுவது, ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவது, உப்பு மூட்டை தூக்குவது என குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் நிரம்பிய பாடல் . கேட்கும்போது பார்க்கும்போது சிறுபிள்ளைப் பருவத்துக்கே போய் மீள்வோம்.

18. அவள் செந்தமிழ்த் தேன் மொழியாள்.

இந்தப் பாடல்  பெண்ணைப்  புகழ்ந்து பாடப்பட்டதாக இருக்கும். அழகான வர்ணனைகளோடு கூடிய பாடல்.  பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ. என்னும் வரிகள் என்னோட ஃபேவரைட்.

19. ஒரே நாள்.. உன்னோடு ஒரே நாள்

சிவகுமார் மிகுந்த கோபக்காரராக இந்தப் படத்தில் இருப்பார். இந்தப் பாடல் அந்தப் படத்தில் ஒரு மென்மையான உணர்வை உண்டு செய்யும். இதன் இசை வித்யாசமாக ஒரே லயத்தில் ஹார்ட் பீட் துடிப்பது போல இருக்கும்..

20. உனக்காக எல்லாம் உனக்காக

சந்திர பாபு இல்லாமல் பாடல்களா. மிக அருமையான பாடல்கள் இவர் பாடி இருக்கிறார். பாடியது மட்டுமில்ல. அழகாக நடனமாடவும் செய்வார். எதுக்காக கண்ணே எதுக்காக நீ எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக என்ற வரிகளைப் பாடும்போது மிக அழகாக முகம் பாவம் காட்டுவார். ஒரு காதலன் காதலிக்காக என்னென்ன செய்வேன் என்று பட்டியலிடுவது சிறப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கும்.

அந்தக் காலத்தில் மிகப் பெரும் நடிகர்கள் எல்லாம் தங்கள் படத்தில் இவரோட  கால்ஷீட்டுக்காகக் காத்து நின்னுருக்காங்க என்ற தகவலை என் தம்பி மாமனார் திரு முருகப்ப செட்டியார் ஒரு முறை துபாய் சென்றிருந்த போது பகிர்ந்துகொண்டார்கள்.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.


3 கருத்துகள்:

  1. பழைய / புதிய என அனைத்தும் ரசிக்கும் பாடல்கள்... ரசனைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் சகோதரி...

    என் இனிய பொன் நிலாவே என்றும் இனிமை... செந்தாழம் பூவில் - குற்றாலம் ஞாபகம் வந்து விடும்... (ஒரு பதிவிலும் எழுதி வைத்துள்ளேன்...) ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு இனிமையான பழைய நாளை நினைக்க வைக்கிறது...!

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...