எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 பிப்ரவரி, 2013

சுவரோவியங்களும் குட்டீஸ் ஓவியங்களும்:-

சும்மா மோட்டு வளையை அல்லது சீலிங் பானைப் பார்த்தபடி படுத்திருக்கும் போது சுவத்துல குட்டீஸ் கலர் பென்சில், க்ரையான்ஸ்ல கிறுக்கி இருப்பதை பார்க்கலாம் . இது போக சுவத்துல தானே தண்ணீர் பட்டோ, கீறல் பட்டோ வெடிப்பு விழுந்தோ இயற்கையான உருவங்கள் தெரியும்..

எங்க தெரியுதுன்னு கேக்கிறீங்களா.. அதுக்கெல்லாம் கொஞ்சம் கலைக் கண் வேணுங்க..! ( ஹிஹி ).

எனக்குத் தெரிஞ்ச சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.

இது சித்தன்ன வாசல், குடுமியான் மலை  ஓவியங்களை ஞாபகப்படுத்துது இல்லையா. எதிர் காம்பவுண்டுல மண் சுவர் வீடு பேர்ந்து உருவான ஓவியம் இது. சிலருக்கு ஒரு படத்துல வடிவேலு தலை இப்படி இருந்தது ஞாபகம் வரலாம்.


இந்த சிமிண்ட் பூசுன சுவத்துல ஒரு ஒட்டகம் திரும்பிப் பார்ப்பது தெரியுதா இல்லையா. என்னது இல்லையா. நல்லா உத்துப் பாருங்க.. அட ஒரு மான் மாதிரியாவது தெரியுதா..

அம்மா பூதமும் குட்டி பூதமும். உதிரிப் பற்களோட. (ஸ்விட்ச் போர்டு.!)

இது என் தம்பி பையன் வண்ணம் தீட்டிய கணேஷா..

இது என் தம்பி பொண்ணு வண்ணம் தீட்டிய ஆஞ்சநேயா.

எங்க வீட்டுல ஒரு ஓவியக் குட்டி இருக்கான்.  அவன் ( என் சின்னப் புள்ள )  வரைஞ்ச ஓவியம் இது. ஏதோ அதிக சுமைய தலையில சுமந்து போற பொண்ணை வரைஞ்சிருக்கான். டெல்லியில செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது வரைஞ்சது. துப்பட்டா போட்டு தலையில எதையோ சுமந்து போகும் பெண் படம்.

என் கொழுந்தனார் பையன் தன்னோட பேரை கல்வெட்டுல வெட்டுனமாதிரி என்னமா சுவத்துல வெட்டி வச்சிருக்கான் பாருங்க. !

இவன் பேட்மேன் எல்லாம் சூப்பரா வரைவான். இதுல வேகமா போற ஒரு சேவலை வரைஞ்சு DAD, DAD ன்னு கண்ணு, கால் அம்புட்டுலயும் பச்சை குத்தி சேப்புக் கலர்ல டாடைப் பொறிச்சிருக்கான்.

இதுதான் அவனோட மாஸ்டர் பீஸ். ஆலிலையில் கிருஷ்ணன். இதெல்லாம் வரையும்போது அவனுக்கு வயசு 6 அல்லது 7  இருக்கும். செம சூப்பரா இருக்கில்ல..




 என் பையன் சின்னப் பிள்ளையில ஒரு மிக்கி மவுஸ் கையை விரிச்சுக்கிட்டு இருக்கிற படம் அடிக்கடி வரைவான். அத தேடிப் பார்த்தேன். கிடைக்கலை. பழைய டைரி எதிலயாவது இருக்கும்.

ஏன் பிரபல ஓவியர்கள் வரைஞ்சாதான் ஓவியமா. நம்ம வீட்டு ஓவியங்கள்  வரைவது நமக்கு ஓவியமான ( சிறப்பான ) ஒன்றுதானே. ! என்ன நான் சொல்றது.. :)

8 கருத்துகள்:

  1. முதல் சுவரோவியம் கி.ராவின் கதவு கதையை நினைவூட்டுகிறது!

    பதிலளிநீக்கு
  2. கணேஷா... ஆலிலையில் கிருஷ்ணன்... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  3. அனைத்துமே பிரமாதம். ஓவியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி விதூஷ்

    நன்றி மதுரை அழகு

    நன்றி தனபால்

    நன்றி கோவை2தில்லி :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...