எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ப்ளூம்பாக்ஸ் (BLOOM BOX ) எப்போ இந்தியாவுக்கு வரும்

ப்ளூம்பாக்ஸ் எப்போ இந்தியாவுக்கு வரும்
**********************************************

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்து வழங்க ( 3 ஆண்டுகளில் ) தமிழக அரசு திட்டம் அறிவித்து இருக்கும் நேரம் நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்க விரும்புறேன்.

நம்ம ஊரைச் சேர்ந்த கே. ஆர் . ஸ்ரீதர் கண்டுபிடிச்ச ‘ப்ளூம் பாக்ஸ்’ மூலமா ஆக்சிஜனும் ( ஆக்சிஜனையும் தயார் செய்து  அனுப்பணும் ) இயற்கை எரிபொருள் அல்லது சூரிய சக்தி சேர்த்து ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின்சாரத்தை  நாமே தயாரிச்சுக்கலாம். ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருக்கா..


மின்சாரத்தை நாம் இதுவரை தெர்மல் பவர் ஸ்டேஷன்களில் இருந்தும், அடாமிக் எனர்ஜி மூலமாவும் அதிக அளவில்  பெற்றுக் கொண்டிருக்கிறோம்.  விண்ட் மில், மற்றும் ஹைட்ரோ பவர் மூலம் கிடைக்கும் மின் சக்தியை சேமித்து அனுப்ப முடியாமல் இருக்கிறது. பயோ காஸ் மூலம் மற்றும் சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின் சக்தியை எல்லா நேரமும் உபயோகப்படுத்த முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ப்ளூம் பாக்ஸ்  மூலமா ஆக்சிஜனையும் இயற்கை எரிபொருள் அல்லது பயோ காஸ் அல்லது சூரிய சக்தியை சேர்த்து அனுப்பினால் ஓரளவு இந்தியாவில் உள்ள இரு வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை ஒரு ப்ளூம் பாக்ஸ் மூலமா பெறலாம்.

இதுவரை இதை மிகப் பெரிய நிறுவனங்களே பயன்படுத்தி வந்தன.இனிதான் இதைப் பொதுமக்களுக்கும் வழங்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். கூகுள், நெட்ஸ் கஃபே, அமேசான், போன்ற நிறுவனங்கள் இதை ஒரு லட்சம் டாலர் செலவில் நிறுவி இருக்கின்றன. இதனால் மின்சார செலவு இல்லை. ஆனால் இது வந்து 10 வருடங்களான பின்புதான் பொதுமக்களுக்கு வழங்க உத்தேசித்து இருக்கிறார்கள். முன்பே வந்திருந்தால் அணு உலைக்கெல்லாம் தேவையே ஏற்பட்டிருக்காது. இதனால் ஏற்படும் அணுக்கழிவுகள் மனிதர்களை  எந்த அளவு பாதிக்கும் என இன்று நடக்கும் போராட்டமும் ஏற்பட்டிருக்காது.

இந்த ப்ளூம் பாக்ஸ் சந்தைக்கு வரும்போது அதன் விலை 3.000 டாலரா இருக்குமாம். அப்படியானால் மின்சாரத்துறைக்கே வேலை இல்லாமல் போய்விடலாம். இந்திய மதிப்புப் படி 1.50.000/- ரூபாய் ஆகிறது. எல்லா எளிய மக்களாலும் இந்தத் தொகையை செலுத்த இயலுமா எனத் தெரியவில்லை. மானியத்தில் கிடைத்தால் நல்லது. ஆனால் நாமே மின் உற்பத்தி செய்து  தன்னிறைவு அடையும்போது மின்சார செலவில்லாமல் போய்விடும்.

கட்ட மறந்து விட்டால் ஃப்யூசை எடுத்துக் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயமோ ஒவ்வொரு யூனிட்டுக்கும் எவ்வளவு கூடுமோ என்ற கவலையுமோ ஏற்படாது என்பது கூடுதல் சந்தோஷம்.

பார்க்கலாம் இந்திய சந்தையில் ப்ளூம் பாக்ஸ் எப்போது வரப் போகிறது என..



7 கருத்துகள்:

  1. 1Kw/2KW சோலர் பேனல் போட்டு அதன் மூலம் வீட்டுக்கு மின்சாரம் கொடுக்க 1.75 லட்சம் ஆவதாக lawforus.blogspot கணக்கு போட்டு கான்பித்திருக்கார் அதுவும் மானியம் போக.இதை பார்க்கும் போது 1.5ல சீப் தான்.

    பதிலளிநீக்கு
  2. வந்தால் முதலில் தமிழ் நாட்டிற்கு வரட்டும் நமக்கெல்லாம் நிம்மதி தரட்டும்

    பதிலளிநீக்கு
  3. நல்ல தகவலுக்கு நன்றி. ப்ளூம் பேட்டிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வரட்டும் வரட்டும் மக்கள் தவிப்பும் மாறட்டும்.

    பதிலளிநீக்கு
  5. சீக்கிரம் வரட்டும்...முதலில் தமிழ் நாட்டிற்க்கு வரட்டும்....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  6. நன்றி வடுவூர் குமார்

    நன்றி கண்ணதாசன்

    நன்றி கண்ணதாசன்

    நன்றி மனோ

    நன்றி மலர்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...