வேலிக் கொடிகள்
************************
வளர்ந்து முதிர்ந்தாலும்
பனியின் இழைகளாய்
வெறுமை எதையும்
பிரதிபலிப்பதில்லை..
பிரதிநிதித்துவமாயும்..
கூடாரத்துணியுள்
பிடித்து வீச முடியாத
வர வெய்யிலாய்..
கடத்தி வெளியேற்ற
முடியாத வாடைக்காற்றாய்..
குட்டைக்குள்
ஆமையாயோ
மழை நேர
மரக்கதவிடுக்கில்
நத்தைப் பூச்சியாயோ
பாசம்பிடித்து
ஊறிக்கிடக்கும்
கிணற்றடிக் கல்லின்
வெறுப்பு மண்டிய
அழுக்குகளாய்..
நினைவின் நுனிகளில்
எப்போது வேர் பிடித்தது
என்பது தெரியாததாய்
எப்போது கசந்தது
வேலியோரப் பாகலாய்
துளைகள் கூடவிடாது
கிளையேறும் வரை
காலம் கடந்ததால்
கழட்டி வீச முடியாது
சுற்றிய கொடியாய்.
************************
வளர்ந்து முதிர்ந்தாலும்
பனியின் இழைகளாய்
வெறுமை எதையும்
பிரதிபலிப்பதில்லை..
பிரதிநிதித்துவமாயும்..
கூடாரத்துணியுள்
பிடித்து வீச முடியாத
வர வெய்யிலாய்..
கடத்தி வெளியேற்ற
முடியாத வாடைக்காற்றாய்..
குட்டைக்குள்
ஆமையாயோ
மழை நேர
மரக்கதவிடுக்கில்
நத்தைப் பூச்சியாயோ
பாசம்பிடித்து
ஊறிக்கிடக்கும்
கிணற்றடிக் கல்லின்
வெறுப்பு மண்டிய
அழுக்குகளாய்..
நினைவின் நுனிகளில்
எப்போது வேர் பிடித்தது
என்பது தெரியாததாய்
எப்போது கசந்தது
வேலியோரப் பாகலாய்
துளைகள் கூடவிடாது
கிளையேறும் வரை
காலம் கடந்ததால்
கழட்டி வீச முடியாது
சுற்றிய கொடியாய்.
சிறப்பாக கவிதை..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..
வந்த கவிதைக்கும் நாளையோ, நாளை மறுநாளோ குமுதம், விகடனில் வரப்போகும் கவிதைக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குBeautiful kavithai
பதிலளிநீக்குவேலிக் கொடிகள் - எத்தனை சொல்கிறது.
பதிலளிநீக்குவேலிக்கொடிகள் பழைய திண்ணையில் படர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவேலிக் கொடிகளுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவித்தியாசமான கருப்பொருள்! அழகான கவிதை!!
பதிலளிநீக்குஎம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கும் சொந்தம் எனும் கொடிகளைப் பற்றிய பல்வேறு கோணங்களிலான பார்வை நிறைந்த கவிதை அருமை சகோ.
பதிலளிநீக்குநன்றி சௌந்தர்
பதிலளிநீக்குநன்றி சிபி. ஆசீர்வாதமா.. சரி..:0
நன்றி ராஜா
நன்றி ரமேஷ்
நன்றி கோபால் சார்
நன்றி மாதேவி
நன்றி மனோ
நன்றி நிரூபன்