எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 ஜனவரி, 2015

நாற்றங்கால்



எனக்குள்ளும்
ஒரு நாற்றங்கால்
தலையசைக்கும்

களையெடுக்க
அவசரிக்கும்

நிலம்விரும்பி
நீருறிஞ்சி
வேர்க்கையால் நன்றி கூறி
உரம் வளர்க்கும்.

கர்மயோகியாய்க்
குண்டலியை
நெற்றியில் நிறுத்தித்
தலைவணங்கிக்
கிடக்கும் நெற்பயிர்.

சாட்டர்டே போஸ்ட். உரத்த சிந்தனையாளர்,பன்முகத் திறமையாளர் பத்மாமணி.

முதன் முதலில் பத்மாமணி மேடத்தை நான் விக்னேஷ்வரா க்ளப்பின் ஒரு நிகழ்ச்சிக்கு ருக்மணி அம்மாவுடன் துணை விருந்தினராகச் ( துணைக்குச் சென்று விருந்தினராக கௌரவிக்கப்பட்டேன். ! )  சென்றபோது சந்தித்தேன்.
எஸ் ஏ பி வரதன் அவர்களுடன்.

வெள்ளி, 30 ஜனவரி, 2015

ப்ரியமுள்ள முதியவளுக்கு :-



ப்ரியமுள்ள முதியவளுக்கு :-

ஒரு சின்னக்குட்டி
எழுதும் அன்பு மடல்
உன்னுடைய ஊன்றுகோலும்
மூக்குக்கண்ணாடியும் நலமா ?
இந்தக்காயசண்டிகைக்கு
அறிவுநீர் வார்த்து
அமைதிப்படுத்தினவளே.
என்னை
உதயகுமாரனாய் நினைத்துக்
கண்ணாடி மாளிகைக் கதவு
அடைப்பதேன்.?

செவ்வாய், 27 ஜனவரி, 2015

கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.


121. தெரிந்தவர் தெரியாதவர்
பேதமற்று இதழ் மலர்கிறது.
பேருந்தின் முன்சீட்டில்
பூத்த குழந்தை. 
 
122. தெரியாமல் செய்துவிட்டதுதான்
தெரியாமல் பின் தொடர்ந்துவந்திருக்கிறது

தெரியாமலே கலங்கிக்கொண்டிருக்கிறேன்

தெரியவைக்காமல் போகாது

தெளிந்தெழவும் விடாது

துரத்திக்கொண்டிருக்கிறது. 

123. எத்தனையோ ராஜா ராணிகளைப் பார்த்த அந்த நிலவு
அந்த உப்பரிகையின் அருகில் அன்று
எங்களையும் பார்த்தது..


ஞாயிறு, 25 ஜனவரி, 2015

திண்ணையில் ஒரு இடம்.

நான் வலை உலகில் எழுத வந்து ஒரு வருடத்துக்கு மேல்தான் திண்ணையின் இணைய முகவரி கிடைத்து எழுதத் தொடங்கினேன்.

செப்டம்பர்  2, 2010 இல் ரிஷான் ஷெரீஃபின் நூல்-- வீழ்தலின் நிழலுக்கு எழுதிய  விமர்சனம்தான் முதலில் வெளிவந்தது. அதன் பின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நகைச்சுவையும் வித்யாசமானவையும் , ஆன்மீகம், சமூகம் என்று கிட்டத்தட்ட 190 படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் புதுத்திண்ணையில் 101 படைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மிச்சம் பழைய திண்ணை இணைப்பில் இருக்கிறது.

என்னுடைய வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகித்துள்ளது திண்ணை. என் படிமக் கவிதைகளைத் திண்ணையில் படித்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் விஜயன் ஒரு முறை மெயில் செய்திருந்தார்.