கருப்பை நம் உயிர்ப்பை
எனது 27ஆவது நூலின் முன்னுரை.
என்னுரை
"பெண் என்று பூமிதனில் பிறந்திட்டால் பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம்" என்று பாரதியார் பாடியது பெண் உடல்நலம் குறித்துப் பேசுவதற்குப் பொருந்தும்.
"ப்யூபர்டி" என்னும் பருவமடைதலில் தொடங்கி மெனோபாஸ் வரைக்கும் ஏன் அதன் பின்னும்கூட பெண் தனது உடல் ஆரோக்கியம் பேணுவது குறித்து அறிந்து கொள்வது காலத்தின் தேவை.
முதல் தீட்டு, அதிகப் போக்கு, கர்ப்பம் தரித்தல், பிரசவம், தீட்டு நிற்றல் போன்ற நேரங்களில் பெண் உடலில் ஏற்படும் மாற்றம் குறித்தும் அதை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்வது அவசியம்.
இவை அனைத்தையும் தவிர மற்றுமுள்ள கருத்தரியாமை, நீர்க்கட்டி, சதைக்கட்டி, புற்றுநோய்க்கட்டி, கருச்சிதைவு, வீழ்ந்த கருப்பை என இன்னபிற பிரச்சனைகளையும் வளரிளம் பெண்கள், பேரிளம் பெண்கள் மற்றுமுள்ள ஆண்கள், பெண்களும் அறிவதும் அது பற்றித் தெளிவதும் அவசியம்.
பெண்கள் கருவைச் சுமக்கும் உயிர்ப்பையின் உருவமைப்பு, செல்பாடு, செயல்திறன் காலம் அனைத்தும் அறிந்து செயல்பட " கருப்பை நம் உயிர்ப்பை'" என்ற தலைப்பில் இந்நூலை எழுதி உள்ளேன்
நமது மண்வாசம் மாத இதழில் 19 மாதங்கள் வெளியான கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது எனது 27ஆவது நூல். பட்டறிவுப் பதிப்பகம் மூலமாக வரும் எனது 5ஆவது நூல். தொடர்ந்து ஊக்கம் கொடுத்துப் பங்களிப்புச் செய்ய வாய்ப்பு நல்கிவரும் பட்டறிவுப் பதிப்பகத்தாருக்கும், நமது மண்வாசம் ஆசிரியர் திரு. திருமலை அவர்கள் உள்ளிட்ட நமது மண்வாசம் குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
தேனம்மைலெக்ஷ்மணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)