ஊனையூர் முத்து வெள்ளைச் சாத்தையனார் கோவிலில் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும் என்பது என் நீண்டகால அவா
அது சில மாதங்களுக்கு முன் சாத்தியமானது. மூர்த்திகள் 23 க்கும் மேல் இருக்கும் என்றாலும் ஏழு அபிஷேகங்களுக்கு உரிய அபிஷேகப் பொருட்களையும் மற்ற எல்லா சாமிகளுக்கும் வஸ்திரங்களையும் வாங்கிச் சென்றோம்.
அங்கே கும்பாபிஷேக வேலை நடைபெற்று வருகிறது. தை மாதம் கும்பாபிஷேகம் இருக்கும் என்று சொன்னார்கள். வேளார் ரவி, பெரியசாமி ஆகியோரின் எண்களைக் கேட்டு வாங்கி அவர்களிடம் அபிஷேகப் பொருட்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டு வாங்கிச் சென்றோம்.
பிள்ளையார், பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார், ஸ்ரீ பண்டாரத்தையா, ஊனையூர் கருப்பர், ஸ்ரீ வீரப்ப சாமி, ஸ்ரீ அகோர வீரபத்திரர், ஸ்ரீ காளி ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
சுற்றுப் பிரகாரத்தில் உள்ள செட்டிச்சி அம்மன்.
ஸ்ரீ வீரப்ப சுவாமி
ஊனையூர் கருப்பர்
முன்னோடி
ஸ்ரீ பண்டாரத்தையா.
இக்கோயிலை அமைத்த நகரத்தார்,செட்டியார் ஒருவரின் சிலை சந்நிதிக்கு எதிரே வைக்கப்பட்டுள்ளது.
சுற்று பிரகாரத்தில் தனிச்சந்நிதியில் உள்ள பைரவர்
சுற்றுப் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ பண்ணி வீரப்பர்.
ஸ்ரீ காளி. இப்பீடம்தான் காளியாக வணங்கப் படுகின்றது.
கோயிலுக்கு எதிரில் உள்ள ஸ்ரீ சோணையன் சந்நிதி.
இங்கே வேண்டுதல் புரவி செய்து வைத்துச் செலுத்துவார்கள்.
வம்சம் விருத்தியாக வேண்டுதல் தொட்டில்.இதில் பாவாடை துண்டு ஆகிய துணிகளைக் குழந்தை பிறக்க வேண்டிக் கொண்டு கட்டுவார்கள்.
அபிஷேக திரவியங்கள், பூமாலைகள், வஸ்திரங்கள்.
விபூதி ஒரு கிலோ, குங்குமம்,எண்ணெய், இவை போக ஏழு அர்ச்சனைச் சாமான்கள். ஏழு தேங்காய், பதினான்கு வாழைப்பழம், சூடம், ஊதுபத்தி, வெற்றிலை பாக்கு, கதம்பம் 5 முழம், 23 மாலைகள், 27 வஸ்திரங்கள் ( பாவாடை, துண்டு வேஷ்டிகள் சேர்த்து ), திரவியப் பொடி, சந்தனம், பன்னீர், நல்லெண்ணெய், கருப்பு திராக்ஷை, இளநீர், பால்,தயிர் ஆகிய ஏழு அபிஷேகங்கள்.
ஒரு கிலோ சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம். மிக அருமையாக இருந்தது. குடும்பத்தோடு சென்று தரிசித்து அருள்பெற்று வந்தோம்.
அருமை..
பதிலளிநீக்குஅருமை..
நன்றியும் மகிழ்ச்சியும் துரை செல்வராஜூ சார்
பதிலளிநீக்கு