எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 19 நவம்பர், 2020

கொண்டோலா ரைட். பெகாஸஸ். வெனிஸ்.

 ஆறு பேர் செல்லக்கூடிய வெனிஸின் பாரம்பரியப்  படகுச் சவாரிதான் கொண்டோலா ரைட். யூரோப் டூரின் போது நான்காம் நாள் இத்தாலி வந்தோம். அங்கே இந்தத் தட்டையான நீளமான படகில் சவாரி செய்து என் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன். 

மர்ச்செண்ட் ஆஃப் வெனிஸ் படித்தபோதும் சரி, ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் ஜாக்கி சான் படங்களிலும் இந்தக் கொண்டோலா போட்டைப் பார்த்தபோதும் சரி இதில் ஒருதரமாவது சவாரி செய்தே ஆகணும்னு அக உணர்வால் தூண்டப் பெற்றேன். 

எங்க குட்டிப் பையன் எங்களை எல்லாம் யூரோப் டூருக்கு அனுப்பும்போது கூட நாம கொண்டோலா போட்டில் வெனிஸில் சுத்தப் போறோம்னு தெரில. அதுனால ரொம்பவே த்ரில்லிங்கா இருந்தது இது. 

வெனிஸே நீர் சூழ் நகரம்தான். இதுல முதலில் ஒரு மாபெரும் படகில் ( மோட்டார் போட்டில் ) நகரைச் சுற்றிப் பார்த்தபின் கொண்டோலா ரைட் என நீள போட்டிலும் சவாரி செய்தோம் 
லே மிஸரபிள்ஸில் வருவது போல் ( அது பாரிஸ் ) இங்கேயும் நகரைப் பிரிப்பதும் இணைப்பதும் இந்த நீர்க்கால்வாய்களே. இவற்றில்தான் குறுக்கும் மறுக்குமாக இந்தப் படகுகள் சென்று வருகின்றன. 

மோட்டார் போட்டுக்கு முன்னால் ஒரு செல்ஃபி. 

ஏதோ டைட்டானிக் பட ரேஞ்சுக்கு இருக்கோ :) 
எல்லாரும் எடுத்துண்டாங்க. சோ நாங்களும் ஜோதில ஐக்கியமாயிட்டோம். 
எங்க பெரிய பையன் & எங்களுடன் யூரோப் டூர் வந்த நார்த் இந்தியர்கள் ( வந்த எல்லாருமே அமெரிக்கா, இங்கிலாந்தில் அல்லது யூரோப்பில் வசிக்கும் இந்தியர்கள்தான் ) 
ஆசையே கடல்போலே நாமெல்லாம் அதன்மேலே.. 

அங்கங்கே குட்டிப் பாலங்களும் குறுக்கிட்டன. தண்ணீர்தான் தேங்கியே கிடப்பதால் கொஞ்சம் ஸ்மெல். 
இந்தக் கொரோனா காலகட்டத்துக்குப் பின் இதை எல்லாம் இனிப் பார்க்கமுடியோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் 2019 ஜூலை ஆகஸ்ட் நாங்கள் சென்ற பொன்னான காலம். 


வெய்யில்தான் மசப்போடு போடுது. சும்மா உங்க வெய்யில் எங்க வெய்யில் இல்ல. காட்டமான வெய்யில் உடம்பு எரியும் அளவு. 

எவ்ளோதான் தண்ணிக்குள்ள ஊர் இருந்தாலும் இந்தக் காட்டம் ரொம்பவே நம்மள வரட்சியாக்குது. 

வெய்யில் தாக்காம இருக்க கூலர்ஸ் :)
இவர்தான் எங்க படகோட்டி.இவரை ஸ்பெஷலா எடுத்ததும் ரொம்பவே சந்தோஷமாயிட்டாரு. இந்தமாதிரி ரேஸ் படகை ஓட்டுறவங்களை ஓர்ஸ்மேன் அப்பிடிங்கிறாங்க. இவர் அந்த உட்டன் டெக்ல நின்னுக்கிட்டு துடுப்பு மூலமா படகைச் செலுத்துறாரு. 

இதுதான்பா பாரம்பரிய வெனிஸ் நகரம்.இதத்தான் க்ராண்ட் கேனால்னு சொல்றாங்க.  அந்தக்காலத்துல பண்ட்னு சொல்லப்படுற ஃப்ளாட் போட்டுகள் பயன்பாட்டுல இருந்துச்சாம். சில போட்டுகளில் பயணிப்பவர்கள் வெளியே தெரியாம இருக்க அல்லது மழை வெய்யிலேருந்து காக்க வேண்டித் தடுப்பா ஸ்க்ரீன் ( மடிப்பு மடிப்பா ) பயன்படுத்துனாங்களாம். அதைத்தான் நாம இப்போ வெனிஷியன் ப்ளைண்ட்ஸ்னு சொல்றோம். 


கால்வாய்களின் குறுக்குவெட்டில் ஹோட்டல்கள்களின் அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சி. 

புரவியைப் போலப் பாய்ந்து சென்ற கொண்டோலா போட்டில் அழகான பெகாஸஸ். 

இந்தக்கொண்டோலாப் படகுகள் பதினோரு மீட்டர் நீளமும் ஒன்றரை மீட்டர் அகலமும் 350 கிலோ எடையும் கொண்டது. 280 மரத்துண்டங்கள் இணைச்சுக் கையால் தயாரிக்கப்பட்டது. லைம், ஓக், மகோகனி, வால்நெட், செர்ரி, ஃபிர், லார்ச் & எல்ம் ஆகிய எட்டுவகை மரங்கள் கொண்டு தயாரிச்சிருக்காங்க. 


மீனம்மாவும் ( மெர்மெய்ட் ) மீனவனும். இதன் ஐதீகம் தெரியல. சுமாரா 400 கொண்டோலா படகுகள் உலா வருதாம். ஃபெர்ரீஸ் ( ட்ராகெட்டி ) என்கிற மிகப் பெரும் மோட்டார் போட்டுகள்தான் ( நம்ம ஊர் பஸ், ட்ரெயின் போல பப்ளிக் ட்ராஃபிக் ) பொதுமக்கள் சவாரி செய்ய பயன்படுது. 

அங்கேயும் ரிவர்வியூ/கேனால்வியூ  ஹோட்டல்கள் உண்டு.
கொண்டோலா ரைட் ( ஹனிமூன் போகலையே என்ற ஏக்கம் தீரச் ) சென்றுவந்தபின் அங்கே இருக்கும் மாபெரும் ஓபன் ஹாலில் வந்து சுற்றினோம். ஆங்காங்கே ஹோட்டல்களும் ம்யூசிக் நிகழ்ச்சிகளும் நடைபெற்றபடி இருந்தன. 
ஒரு கடையைத் தேர்ந்தெடுத்து காஃபி ஆர்டர் செய்தோம். அதன் உபகரணங்கள்தான் நீங்கள் இங்கே பார்ப்பது. கொடுக்கும் ஐந்து யூரோவுக்கு ஏதானும் அடிஷனலா தரணும்னு நினைச்சாங்களோ என்னவோ கூடவே பிஸ்கட்டும் தந்தார்கள். டிகாக்‌ஷன், பால் , சீனிப் பைகள், கோப்பைகள், தண்ணீர் க்ளாசுகள், பிஸ்கட்ஸ், டிஷ்யூஸ். 
சுடச் சுட பாட்டைக் கேட்டபடி காஃபியை அருந்தினோம். இந்த இடங்களில் இந்த ஆண்டு பெருமழை பெய்து மூழ்கடித்திருந்த காட்சியையும் தொலைக்காட்சியில் பார்த்துப் பெருமூச்சு விட்டோம். அதன்பின் கொரோனா ஆட்சி வந்து மொத்த டூரிஸ்ட் வருமானத்தையும் காலி செய்து விட்டது. 

மகனார் எடுத்த வெனிஸ் கொண்டோலா ரைடின் வீடியோ. 


வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்க்க ஆசைப்பட்ட இடத்துக்குச் செல்ல மாபெரும் செலவில்  ஏற்பாடு செய்த சின்ன மகனாருக்கும் அழைத்துச் சென்ற கணவருக்கும் பெரிய மகனாருக்கும் நன்றிகள். 

2 கருத்துகள்:

  1. பயண கட்டுரைகளின் தொகுப்பு கொண்டு வரலாம். காட்சிகளின் பதிவுகளுடன் பயணிக்கும் சிறப்பு பதிவு. டைட்டானிக் ரேஞ்சுக்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தங்களுக்குள் இருக்கும் ஒரு பயண பறவையின் உற்சாக விழிப்பை காட்டுகிறது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி துரை அறிவழகன் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...