எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 மார்ச், 2020

மலரானவளுக்காக..

**நோய் வரும்போது
அழகு அறிவு அன்பு
எதுவுமே பயனற்றுப் போகிறது.

**என்ன செய்துகொண்டிருக்கிறோம்
எதுவரை இயங்குவோம்
எது நமக்கான விளிம்பு..

**அந்தரத்தில் பறப்பதுபோல் இருக்கிறது
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் அல்ல
வெட்டுக்கிளிகள் துடிக்கின்றன.

**என்ன செய்துவிட்டாய் ஒரு நொடியில்
என்ன செய்துகொண்டிருக்கிறேனென்பதே புரியவில்லை
உனக்குப் பிறகு.

**வந்தாய் கவர்ந்தாய்
அழகைக் கண்டு அறிவைக் கண்டு பொறாமைப்பட்டேன்
சென்றுவிட்டாய்
சாம்பல் என்னை அச்சுறுத்துகிறது

**உயிருடன் இருப்பதே வரமா.. சாபமா ?

**பிரச்சனைகள் நம்மை வாள் கொண்டு வெறியோடு தாக்குவதிலான எண்ணத்தில்தான் டீ ஆக்டிவேட் செய்தேன்.
அதன்பின் என்னைச் சுற்றி ஒன்றுமே இல்லை.. என் புற உலகில்..
அக உலகில்தான் எல்லாம் என்பதை உணர்ந்தேன்.

**இருக்குன்னு நினைச்சா எல்லாமே இருக்கு.
இல்லைன்னு நினைச்சா எதுவும் இல்லை.
சூழ்நிலையைக் கையாள ஒரு சில நிமிடப் பொறுமையோ அல்லது வாயோ மனமோ அடைத்துப்போகும்/ஊமையாகும் சாத்யம் இருந்தால் அதிலிருந்து தப்பிக்கலாம்.

**ஒரு இறப்பு,, எத்தனை நாள் வலி.. முடியல..

கண்கள் கசிந்துகொண்டுதான் இருக்கின்றன.

**காற்றில் ஆடும் இசைமணிபோல்
கண்களுள் ஆடிக்கொண்டிருந்தாய்
எப்போது இசை நின்றது
காற்றே தீர்ந்துவிட்டதா

**உருவம் உருவம் உருவம்
அருவமாகிவிட்டாய்
கண்கள் எதிரில், காற்றில்
திரைத்துணிகளின் அசைவில்
வீட்டின் தனிமையில்
எங்கோ குடி கொண்டிருக்கிறாய்
எங்கே எங்கே எங்கே
மூளையின் ஞாபக அடுக்குகளில்

**கண்டத்திட்டுகளாய் அசைத்துச் சென்றுவிட்டாய்
சுனாமியாய்க் கொந்தளிக்கிறது மனது
எப்போது நிம்மதி திரும்பும்.

**என்னவாயிற்று ஏன் எதற்கு
என்ன செய்வேன்
எங்கே தொலைந்தேன்
யாருமற்ற பாலையில் நானும் அன்று
அலைந்துகொண்டிருந்தேன்

**சந்தித்ததே இல்லை உன்னை
மூன்று நாட்களாக ஒருநொடி விடாமல்
சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.

**என்னடி ஆச்சு ஏண்டி பாவி
மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறாயே
முடிவை நீ  முந்திக்கொண்டாயா

**என்னை அறைந்திருக்கலாம்
இப்படி ஒரு முடிவினால் என் குருதியெல்லாம்
கண்ணீராய்ப் பொழிய விடாமல்

**துரத்திக் கொண்டே இருக்கிறாய்
தூக்கத்திலும் உன்னை உணர்கிறேன்
நீ இல்லையென்று யார் சொன்னது ?

**தங்கை மகள் குழந்தை
என்னவோ ஒன்றாகத் தோன்றினாய்
தலை கோதி மார்போடணைக்கத் துடிக்கிறது
தோள் இல்லையென்று போனாயோ

**மூளையைக் கழற்றி எறிந்துவிடலாம்
இதயத்தை என்ன செய்வேன்.

**ஒரே நாளைக்குள்
எத்தனையோ நாட்கள் பிறக்கின்றன
உன் நினைவுகளால்.

#சபிதாவுக்காக. 

5 கருத்துகள்:

  1. இறப்பை உன்னல் உணரமுடியாது உணர முடியலாமென்னும்போதுநீ இருக்கமாட்டாய் எங்கோ படித்தது

    பதிலளிநீக்கு
  2. இறப்பு என்பது என்ன வென்று தெரியாது தெரிஅய வரும்போது நாமிருக்க மாட்டோம் எங்கோ படித்தது

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் பாலா சார்

    ஆம் மணவாளன் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...