பாரிஸ் நோர்ட் ஸ்டேஷனில் இருந்து ஜெர்மனி டூயிஸ்பர்க் வரைக்கும் தாலிஸ்/டாலிஸ் ட்ரெயினில் வந்தோம். ரொம்ப ஸ்பெஷலான அந்த ட்ரெயின் பத்தி இங்கே :) இது ப்ரென்ச் - பெல்ஜியன் ஹை ஸ்பீட் ட்ரெயின். இது ப்ரஸல்ஸ் வழியாகத்தான் ஜெர்மனி வருகிறது. 1996 இல் இருந்து இந்த ட்ரெயின் ஓடிக்கிட்டு இருக்கு. இப்போ 23 வருஷம் ஆச்சு !. பிரமாதமான சர்வீஸ்.
இதுல காபி & பேண்ட்ரி மாதிரி பார் கூட இருக்கு
! ட்ரயினில் வைஃபை கூட உண்டு. தாலிஸ் அப்ளிக்கேஷனை டவுன்லோடினால் லோக்கல் டாக்ஸி ஹோட்டல்
சுற்றிப் பார்க்குமிடம் எல்லாம் பார்த்துக்கலாமாம். லோக்கல் ட்ரான்ஸ்போட்டில் இருந்து
நாம் ஏறவேண்டிய ஸ்டேஷனுக்கு உரிய இடங்களையும் அங்கே வரக்கூடிய பஸ் மெட்ரோ ட்ராம்களின்
எண்களையும் குறித்திருப்பது வெகு சிறப்பு.
நம்மூரு பஸ் ட்ரெயின் மாதிரி செல்ஃபோன் சார்ஜ் செய்துக்க
சாக்கெட் உண்டு. அப்புறம் முக்கிய விஷயம் இந்த மாதிரி நாடு விட்டு நாடு போற ட்ரெயினுக்குள்ள எல்லாம் மொச்சு மொச்சுன்னு சாப்பிட்டுக்கிட்டே
வரக்கூடாது.
காஃபி மட்டும் குடிச்சிக்கலாம். ட்ரிங்க்ஸ் கூட
குடிக்கலாம் ஆனா சாப்பிடக் கூடாது. இருந்தும் நாங்க அந்த ட்ரெயினில் வாங்கின பீட்ரூட்
சிப்ஸை ருசி பார்த்தோம். ( பீட்ரூட் சிப்ஸ் பாதி, உருளை சிப்ஸ் பாதி கலந்தது ) வினிகர் போட்டிருப்பாங்க போல.. லைட்டா கார நெடி.
எல்லாமே கண்ணாடியால் மூடப்பட்ட ஏசி ட்ரெயின்
புஷ்பக விமானம் போலயோ நிஜ விமானம் போலயோ சொய்ங்குன்னு
பறக்கும்.
நாம் டைமை மிச்சம் செய்ய இங்கே இருக்கும் தாலிஸ்
வெல்கம் பாரிலேயே பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டுக்கு ( மெட்ரோ , ட்ராம் , பஸ் ) டிக்கட்டை
வாங்கிக்கலாம்.
நாங்க பாரிஸ் நோர்ட் இல் இருந்து டூயிஸ்பர்க் ஹெச்
பி எஃப் க்குக்கு வர ( ட்ரயின் நம்பர் 9473, செகண்ட் க்ளாஸ், 26 ஆவது கேரியேஜ், சீட்
நம்பர் 41 ) செகண்ட் க்ளாஸ் டிக்கட் விலை 67 யூரோ.
(ஒன்பது நாள் யூரோப் ட்ரிப் முடித்த களைப்பில் இருக்கிறேன். :))
பாரிஸ் நோர்ட் ஸ்டேஷனில் இருபத்தியாறாவது கேரியேஜ் வரை நடந்து வந்ததும்
மூச்சு வாங்கிவிட்டது. ட்ரெயின் ஏறக்குறைய கிளம்ப ஆரம்பிக்கும் நேரம். ஒருவருக்கு இரண்டு
லக்கேஜ்தான் வைக்கலாம். நல்லவேளை யூரோப் டூருக்கு அதன்படியே கொண்டு சென்றதால் தப்பித்தோம்.
அதையும் படி ஏறியவுடன் அருகே உள்ள கேரியேஜ் பாக்ஸில் வைக்கணும். ஒரு லக்கேஜ்தான் அங்கே
அனுமதி. இன்னொன்றை ஃப்ளைட் போல சீட்டுக்கு மேலே வைச்சுக்கனும். ஹேண்ட் லக்கேஜ் ஒண்னுதான்
அனுமதி. இதை அங்கே நிற்கும் டிடி ஆருக்கு அடுத்தபடியாக படியோரம் நிற்கும் தென் ஆப்ரிக்கர்கள் கண்காணித்தபடி அனுமதிக்கிறார்கள்.
ஹேண்ட் லக்கேஜில் ஹேண்ட்பாக் அல்லது பேக் பேக்
( லாப்டாப் பேக் ) ஒன்று மட்டுமே அலவ்ட்.
ஆனால் சல் சல்லென்று புஷ்பகவிமானம் மாதிரி பறந்துவந்து டூயிஸ்பர்க்கில் இறக்கிவிட்டது. களைப்பே தெரியவில்லை. சின்ன மகனாருடன் இன்னொரு ட்ரெயின் மாறி டூயிஸ்பர்க் இம்ஷ்லிங் வந்து சேர்ந்தோம். மிக அருமையான யூரோப் பயணத்தின் மிக அருமையான முத்தாய்ப்பு தாலிஸ் ட்ரெயினில் பயணித்ததுதான். ப்ரான்ஸ், பாரிஸ் நோர்ட் ஸ்டேஷனில் இருந்து ஜெர்மனி டூயிஸ்பர்க் வரைக்கும் வந்தபோது எடுத்த படங்களை இன்னொரு மை க்ளிக்ஸில் பகிர்வேன். :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!