எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 செப்டம்பர், 2019

வாசகசாலை கவிதை இரவு - 200.



முகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம் . சிறுகதை, நாவல் விமர்சனம் ஆகியவற்றை முன்னெடுத்து அனைவரின் வாசிப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்களின் கவிதைகளைத் தினந்தோறும் வாசித்துப் பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதில் என் கவிதைகளும் 28 ஆம் நாளில்  இடம்பெற்றிருப்பது மகிழ்வு. 

தங்கள் அன்றாடக் கடமைகளோடு ஒவ்வொரு கவிஞரின் கவிதைகளையும் தேர்ந்தெடுத்து அவற்றை முகநூலில் சரியாக இரவு பத்துமணிக்கு ரசனையான கருத்துக்களுடன்/விளக்கங்களுடன் இனிமையான குரலில் வாசகசாலைக் குழுவினர் பதிவு செய்து வருகிறார்கள். டெக்னிகல் டிஃபெக்ட் ஆன சில சமயங்கள் தவிர மற்ற நாட்களில் ஒளிபரப்பாகியே வருகிறது. 

என்னுடைய கவிதையை சௌம்யா ரெட் வாசித்து மகிழ்வேற்படுத்தினார். நான் வாட்ஸப்பில் வாசகசாலையில் 200 கவிஞர்களில் ஒருவராக இடம் பெற்ற மகிழ்வைப் பகிர்ந்தபோது இதில் இடம்பெறாதோர் பலர் மனச் சடைவு அடைந்திருந்தார்கள். இன்னும் பல நண்பர்களும் உறவினர்களும் நான் 26 வது இடத்தை அடைந்ததாகப் பாராட்டினர். 
அவர்களிடம் என் கவிதை வாசிக்கப்பட்டது 26 வது நாள்தானே அன்றி அது க்ரேடோ, ராங்கோ தகுதியோ அல்ல என்று கூறினேன். அதைப் போல இனி வரும் காலங்களிலும் இடம்பெறாத கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர்கள் தம் கவிதைகளை ஆன்லைனில் தேடினால் கிடைக்கும்படிச் செய்யவேண்டுமெனக் கூறினேன்.
ஆகக் கூடி பெரும்பாலோரின் கவனத்தையும் பெற்று பேரும் புகழும் பெற்று வருகிறது வாசகசாலை.
இலக்கியத்தின் பல்வேறு தளங்களையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாகப் பயணிக்கும் வாசகசாலையின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

///#வாசகசாலை யின் #கவிதைஇரவு
நிகழ்ச்சி இன்று 200 வது நாளை எட்டுகிறது ❤️ இதனை முன்னிட்டு இந்நிகழ்ச்சிக்கு இதுவரையில் எடுக்கப்பட்ட 195 கவிஞர்களின் பட்டியலை வாசகர்களின் பார்வைக்காக வெளியிடுகிறோம்.தமிழில் கவிதைகளை விரும்புகிற வாசகர்கள் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய கவிஞர்கள் இவர்கள்.இப்பட்டியலில் இடம்பெறாத நல்ல கவிஞர்கள் இன்னும் ஏராளம் உள்ளனர்.அவர்களது கவிதைகள் வரும் நாட்களில் எடுத்துக் கொள்ளப்படும்.❤️ நன்றி. மகிழ்ச்சி ❤️
கவிஞர்களின் பட்டியல் :
1. கல்யாண்ஜி
2. சக்தி ஜோதி
3. சாம்ராஜ்
4. விக்ரமாதித்யன்
5. உமா மகேஷ்வரி
6. யுகபாரதி
7. அனார்
8. முகுந்த் நாகராஜன்
9. சல்மா
10. மனுஷ்யபுத்திரன்
11. ஞானக்கூத்தன்
12. உமா மோகன்
13. ரவி சுப்ரமணியம்
14. தேவதேவன்
15. யாழன் ஆதி
16. தமிழச்சி தங்கபாண்டியன்
17. பூர்ணா ஏசுதாஸ்
18. பழனிபாரதி
19. வே.பாபு
20. கலாப்ரியா
21. உமாதேவி
22. இளம்பிறை
23. ஷங்கர்ராமசுப்ரமணியன்
24. ஶ்ரீஷங்கர்
25. நக்கீரன்
26. தேனம்மை லஷ்மணன்
27. நா.முத்துக்குமார்
28. சுகிர்த ராணி
29. தேவதச்சன்
30. சுஜாதா செல்வராஜ்
31. மனுஷி
32. குமரகுருபரன்
33. லாவண்யா சுந்தரராஜன்
34. நிலா ரசிகன்
35. சிவரமணி
36. தேவேந்திர பூபதி
37. அப்துல் ரகுமான்
38. கார்த்திக் நேத்தா
39. ஸ்வாதி முகில்
40. வைதீஸ்வரன்
41. ரகசியன்
42. பிருந்தா சாரதி
43. ஃபிரான்சிஸ் கிருபா
44. சே.பிருந்தா
45. நரன்
46. மகுடேசுவரன்
47. தீபச்செல்வன்
48. கனிமொழி ஜி
49. அ.வெண்ணிலா
50. தமிழ்நதி
51. கு.அ.தமிழ்மொழி
52. யூமா வாசுகி
53. கிருஷ்ணப்ரியா
54. கோ.சாமான்யன்
55. பொன்முகலி (தீபு ஹரி)
56. பா.ஜெய்கணேஷ்
57. பெருந்தேவி
58. சுரேஷ் பரதன்
59. கயல்
60. சாய் இந்து
61. ரேவா
62. எஸ்தர்
63. சசிகலா பாபு
64. தனசக்தி
65. கருவாச்சி
66. ச.துரை
67. இரா.தமிழரசி
68. ச.விஜயலட்சுமி
69. ஆத்மார்த்தி
70. பெரு விஷ்ணுகுமார்
71. இல்லோடு சிவா
72. ந.பெரியசாமி
73. ப.செல்வகுமார்
74. கரிகாலன்
75. பாலைவன லாந்தர்
76. வலங்கைமான் நூர்தீன்
77. மாலதி மைத்ரி
78. துவாரகா சாமிநாதன்
79. ப.கல்பனா
80. போகன் சங்கர்
81. க.அம்சப்ரியா
82. வே.நி.சூர்யா
83. சோலைமாயவன்
84. முத்துராசா குமார்
85. புன்னகை செ.ரமேஷ்குமார்
86. ராணி திலக்
87. இரா.பூபாலன்
88. தூரன் குணா
89. யவனிகா ஶ்ரீராம்
90. மா. காளிதாஸ்
91. தேன்மொழி தாஸ்
92. அழகுநிலா
93. ஸர்மிளா ஸெய்யித்
94. ஜெ.நிஷாந்தினி
95. செ.கார்த்திகா
96. ஸ்டாலின் சரவணன்
97. கண்டராதித்தன்
98. வெ. மாதவன் அதிகன்
99. கட்டாரி தமிழ்
100. முருக தீட்சண்யா
101. ஆன்மன்
102. நா. விச்வநாதன்
103. ஶ்ரீதர் பாரதி
104. க.மோகனரங்கன்
105. இசைஞானி இளையராஜா
106. எஸ்.சண்முகம்
107. கூடல் தாரிக்
108. இரா.மீனாட்சி
109. இன்குலாப்
110. அகிலா கிருஷ்ணமூர்த்தி
111. பச்சோந்தி
112. திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
113. கோவை சசிகுமார்
114. க.சி.அம்பிகாவர்ஷினி
115. இசை
116. நிஷா மன்சூர்
117. சமயவேல்
118. கடங்கநேரியான்
119. கிருஷ்ண கோபால்
120. பரமேசுவரி
121. ஜி.எஸ்.தயாளன்
122. இளங்கோ கிருஷ்ணன்
123. ஷக்தி
124. சேரன்
125. கவிஜி
126. சித்துராஜ் பொன்ராஜ்
127. கு. இலக்கியன்
128. குட்டி ரேவதி
129. கதிர்பாரதி
130. ஶ்ரீபதி பத்மநாபா
131. றாம் சந்தோஷ்
132. பாவேந்தர் பாரதிதாசன்
133. ஆனந்த்
134. யாழி
135. பஹீமா ஜெகான்
136. லிபி ஆரண்யா
137. ஆழியாள்
138. கவின் மலர்
139. தர்மினி
140. தமிழ் உதயா
141. லீனா மணிமேகலை
142. ஜின்
143. விஷ்ணுபுரம் சரவணன்
144. சபரிநாதன்
145. ஶ்ரீநேசன்
146. நகுலன்
147. லதா அருணாச்சலம்
148. மாதுமை
149. முத்துவேல்
150. வெய்யில்
151. அகர முதல்வன்
152. சஹானா
153. வைரமுத்து
154. புதிய மாதவி
155. உமா சக்தி
156. எம்.யுவன்
157. ம.மதிவண்ணன்
158. அழகிய பெரியவன்
159. பெண்ணியம் செல்வகுமாரி
160. கவித்தா சபாபதி
161. கண்மணிராசா
162. ஆண்டன் பெனி
163. கனகா பாலன்
164. ரமேஷ் பிரேதன்
165. கணேச குமாரன்
166. ராஜா சந்திரசேகர்
167. பாவண்ணன்
168. நறுமுகை தேவி
169. விதுரன்
170. ப்ரியம்
171. க்ருஷி
172. கீதா ப்ரகாஷ்
173. ச.பிரியா
174. ஜீ.முருகன்
175. சுகுமாரன்
176. பாலா இளம்பிறை
177. நாச்சியாள் சுகந்தி
178. வேல் கண்ணன்
179. தமயந்தி
180. ஆத்மாநாம்
181. ஆதவன் தீட்சண்யா
182. நாஞ்சில் நாடன்
183. சுகந்தி சுப்ரமணியன்
184. ராஜமார்த்தாண்டன்
185. மீரா
186. அகிலா
187. ஜெம்சித் ஸமான்
188. கார்த்திகா முகுந்த்
189. பெருமாள் முருகன்
190. காலச்சித்தன்
191. தமிழ்மணவாளன்
192. குமார் அம்பாயிரம்
193. பூமா ஈஸ்வரமூர்த்தி
194. விநாயக முருகன்
195. ம.நர்மி///

டிஸ்கி :- வாசகசாலைக்கு நன்றி கூறும் அதே நேரம் எங்கள் ஊரில் வாசகசாலை வேரூன்றக் காரணமாக விளங்கும் எங்கள் அன்பு கற்பகவள்ளிக்கும் சிறுகதை விமர்சனங்கள் - இலக்கிய சந்திப்பு நிகழ்த்த உதவும் கார்த்திகேயன் பள்ளிக்கும் , தென்றல்சாய், லெக்ஷ்மி , ஸ்வேதா ஆகியோருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.  

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...