எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 செப்டம்பர், 2016

கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.

1001.நீர் நிறைய மீனிருக்க
மனங்கொத்திப் பறக்கிறது
வலசைப் பறவை.

1002. கடைசி விருந்தைப் போல
மறக்காத ஓவியமாகிறது
கடைசி உரையாடலும்.

1003.நிலையற்ற சந்திரனையும்
நறுங்கும் சூரியனையும் தூரப் போட்டு
நட்சத்திரங்கள் சிதறும்
சொற்சித்திரங்களில்
லயிக்கிறது பூமி.

1004.விதையாய் முளைத்துப் பெருகும்
உன் ஞாபகங்களை
எப்படிப் புதைப்பது.

1005.கடலில் நீந்திய மீனுக்குத் தொட்டிச் சிறை.பெருநகரத்தில் உலவியவனின் தீபகற்பமாய்க் குடும்பம்.  தனித்தனித் தீவுகளாய் மனிதம். அலையில் மின்னும் சூரியனாய் நம்பிக்கை

1006.40 கேபிஎன் பஸ் எரிப்பாமே. நாங்க மடிவாலா & பிடிஎம் லே அவுட்ல இருந்தோம். அத சின்ன பாகிஸ்தான் என்பார்கள். பதறுது.. பெங்களூர் மக்காஸ் சேஃபா இருங்க.. :( ஈத் பண்டிகையும் ஓணம் பண்டிகையும் நல்லபடி நடக்க இறைவனை வேண்டுகிறேன்.

1007.கசியும் புன்னகைக் கீற்றொன்று போதும் மனிதர்களைப் ப்ரகாசமாக்க. ( இது ஐந்து வருடம் முன்னாள் உள்ள மீள் ஸ்டேடஸ் , மெமரீஸில் வந்ததை ஷேர் செய்த நட்பின் கருத்து இதோ :)

-- Minakshy Sundar உங்கள் அக்மார்க் புன்னகை போல honey அக்கா ... :−) :−)
-- அஹா நன்றி மீனாக்ஷி சுந்தர்

1008. Archana Deiva
September 13 at 11:47am ·

Last day collection from Madurai book exhibition...என் மாணவனின் பரிசு வைகறை மேகங்கள் .

-- THANKS TO THE AWESOME TUTOR & STUDENT. ( AT MADURAI BOOK FAIR)

1009. Khan A K கடவுள் நம்மை படைத்தது இந்த உலகத்தில் உள்ள அனைத்து சின்ன சின்ன விஷயங்களையும் ரசிக்க வேண்டும். அதில் நல்லதை மட்டும் நாம் எடுத்துக்கொண்டு, கெட்டதை நமக்கு ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல நீங்கள் சமையல், கவிதை, இ்லக்கியம், இயற்கை அழகு, கலாச்சாரம், பண்பாடு, நாகரீக வளர்ச்சி ஆகியவை பற்றி கருத்து சொல்வது மிகவும் அருமை..நன்றி..


-- THANKS KHAN SIR. !!!

1010.டெய்லி ஐஞ்சு போஸ்ட். ஐம்பது லைக், பத்து கமெண்ட், அரை மணி நேரம் அப்பிடின்னு முகநூல் டைமை ஒதுக்க யோசனை. வாங்கின புக்ஸ் எல்லாம் படிக்கணுமில்ல. :)ஓகே குட்நைட் மக்காஸ். :) நாளை பார்ப்போம்

1011.அஞ்சுவது அஞ்சாமை பேதமை

1012. ஓரளவு உடுத்திய புடவைகளை யாருக்கும் கொடுத்துவிடலாம் என நினைக்கும்போது ஞாபகத்தின் வாசனை அதில் அதிகமாகிவிடுகிறது.

1013.பணம் உண்மையின் வாயை அடைத்துவிடுகிறது.

1014.கைகளில் கடித்துத்
தப்பித்த ஒரு எறும்பை
உற்றுப் பார்த்துத்
தேடத் தொடங்கியதில்
தரையெங்கும்
கண்களுக்குள்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
ஊராத எறும்புகள்.

1015.என்னங்க கேஸ் தீர்ந்து போச்சு புக் பண்ணிடுங்க.

அது எதுக்கு.. சண்டே மட்டும்தானே சமைக்கிறே. ..பேசாம ஒவ்வொரு ஐட்டமா ஃப்ரிட்ஜிலேருந்து எடுத்து லாப்டாப் மேல வைச்சு சூடு பண்ணி சாப்பிடு..

“ஙே”


1016.போஸ்ட் புல்லட்டின் அப்பிடின்னு ஒரு நட்பு அவார்டு கொடுத்தாங்க. நல்ல வேலை போஸ்ட் கில்லட்டின்னு சொல்லல :)

1017.அடித்துப் பெய்கிறது மழை
பதைத்துக் கிடக்கிறது மனம்
நடுங்கி ஒன்றை ஒன்று
தழுவிக் கொண்டிருக்கும்
பால்கனிச் செடிகளை
அவற்றின் உலகத்தில் விட்டு
கதவைச் சாத்திக் கொண்டு வந்தேன்
எல்லாவற்றையும் எதிர்கொள்ளட்டுமென.

1018.கோல்டன் ஃபேஷியல் பண்றேன்னு சொல்லி மொசைக் பாலீஷ் பண்றா மாதிரி தேச்சுட்டாங்க. ஐயோ கொடுமை

1019;மதிப்பீடுகள் மரிப்பதுதான் உச்சபட்ச இறப்பு

1020. என் மனநிம்மதிக்கு எப்போதும் காரணமானவர்கள் பிள்ளையார்கள்தான். ! :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.



5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...