எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 டிசம்பர், 2012

மூளையும் நாவும்.

வார்த்தைகளைக் கோர்த்துச்
சித்திரங்கள் வரைவது
பிடித்தமானது அவளுக்கு.

வரையும்போதே வண்ணங்கள்
சிதறி விழுகின்றன
மண்ணாய் அங்குமிங்கும்.

மூளை மூடாமல் திறந்து கிடக்கிறது
மண்டையோட்டுக்கான
வண்ணம் போதாமல்.


கார்டெக்ஸும் மெடுல்லாக்களும்
பற்களாக மாறி துண்டாக்குகின்றன
பேசத்தெரியாத நாக்கை.

வரைந்து முடித்தபின்
மூளையும் நாவும் வெளியே கிடக்கின்றன
வாழ்வதன் தேவையை வலியுறுத்தி.

டிஸ்கி:- இந்தக் கவிதை 7, நவம்பர் , 2011 திண்ணையில் வெளியானது


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...