எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 நவம்பர், 2010

அந்த முன்னிரவு...



ஐப்பசி அடைமழை..
கப்பல்விடத் தோதாய்.!
அடித்தடித்து வீசும் காற்று..
ஆடியது வாசலில் வேம்பு..
ஆடுபுலி ஆட்டம்
அண்ணா சொன்னான்..
வேரோடு கோரத்தலையசைத்த
பனை தென்னை பார்த்து..
திருமலை தரிசனம்
தேடிச் சென்ற தந்தை
வரவில்லை இன்னும்..
விடிந்தால் தீபாவளி..
வழக்கம் போலில்லை
இந்த முன்னிரவு..
ரயில் வெடியும் ., பூச்சட்டியும்
ஏரோப்ளேனும் இருந்தும்
அப்பா இல்லாமல்....
கூதலில் ஓடுகள் கூட
நடுங்கின சேர்ந்து..
சூறைக்காற்றில் சிதர்காய் போல்
பெயர்ந்து விழுந்தது வேம்பு
வீட்டின் எதிர்த்திசை பார்த்து.!
துணிகளில் மஞ்சள்
வெடிகளின் வாசம்..
மின்சார வெளிச்சம்..
அப்பாவின் பேச்சு இல்லாமல்..
மண்ணெண்ணெய் விளக்கில்
கசந்தன இனிப்புகள்..
வெடித்தது முறுக்கு..
வாட்டமுற்ற அம்மாவாய்..
பதட்டத்தில்., இருட்டில்.,
நிழலெல்லாம் பேய் போல் ஆடி
கெட்ட சொப்பனத்தில்
வேர்த்து விழித்து...
விடிந்தது ஒரு வழியாய்..
வெள்ளத்தில் நீந்தி
பெட்டியற்று வந்தார் அப்பா
வெள்ளைச் சிரிப்போடு..
ஓடிச் சென்று
ஆரத் தழுவினோம்..
அப்பா நீங்கள்தான்
எங்கள் தீப ஒளி....!!!
டிஸ்கி :- இந்தக் கவிதை நவம்பர் மாத தேவதை இதழில் வெளிவந்துள்ளது.. தேவதைக்கு நன்றி..

35 கருத்துகள்:

  1. அழுத்தமான உணர்வுகளை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.அப்பா
    இல்லாத தீபாவளி ஒரு ஆனந்தமா?
    வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  2. அக்கா கவிதை அருமைக்கா

    தங்கள் எழுத்துக்கள் மேல்மேலும் சிறக்க சகோதரனின் பனிவான வணக்கம்

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் இது ஒரு பூங்கொத்து தான்!

    ஆரண்ய நிவாஸ்
    ஆர்.ராமமூர்த்தி
    http://keerthananjali.blogspot.com/

    பதிலளிநீக்கு
  4. கடைசிவரை பதைபதைப்பு ஊட்டி, கடைசி
    வரியில் பரவசத்தின் வெளிப்பாட்டினை
    கா(கொ)ட்டிவிட்டீர்கள். பூங்கொத்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான கரு. நிறைவாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  6. நெகிழ்வான அருமையான கவிதை தேனம்மை. தேவதையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  7. கவிதை அருமையா இருக்கு அக்கா.
    தேவதைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்து சொல்லியே கை வலிக்குது

    பதிலளிநீக்கு
  9. கவிதை அருமை.. அப்பா இல்லாமலா?

    பதிலளிநீக்கு
  10. இலக்கியப் பாதையில் வளர்ந்துகொண்டே வருகிறீர்கள் தேனக்கா.வாழ்த்துகள்.கவிதை எப்பவும்போல அசத்தல் !

    பதிலளிநீக்கு
  11. சூப்பர் தேனக்கா :)

    பதிலளிநீக்கு
  12. //
    அப்பாவின் பேச்சு இல்லாமல்..
    மண்ணெண்ணெய் விளக்கில்
    கசந்தன இனிப்புகள்..
    வெடித்தது முறுக்கு..
    //
    அருமை...

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் இந்த சிறுகதையாக எழுத முயற்ச்சிக்கலாம்.நன்றாக வருவதற்கான நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப நல்ல கவிதை...வாழ்த்துக்களும்..

    பதிலளிநீக்கு
  15. நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
    http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html

    உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
    சசிகுமார் (வந்தேமாதரம்)

    பதிலளிநீக்கு
  16. உங்கள் கவிதை அருமை.........
    என் பதிவு மலரில் வெளிவந்ததா..?

    பதிலளிநீக்கு
  17. நெகிழ்வான கவிதை.

    வாழ்த்துக்கள் தேனம்மை!

    பதிலளிநீக்கு
  18. அம்மா அம்மா எனும் உலகில்
    அப்பாவின் அருமையை அழுத்தமாக
    உணர்த்திய அம்மான் அத்தை மகள்
    தேனுவுக்கு அன்பான வாழ்த்துக்கள்
    வள்ளியப்பன்

    பதிலளிநீக்கு
  19. அப்பாவின் நினைவுகளை அழைத்து வந்தது கவிதை. என் 30 வயது வரையில் உயரோடிருந்த அப்பா நான்கு அல்லது ஐந்து தீபாவளிக்கு எங்களோடு இருந்திருக்கிறார். திரை கடலோடி திரவியம் தேடச் சென்றவர் அவர், அந்த நினைவுகளோடு தான் நானும் என் சகோதரர்களும் ஒவ்வொரு தீபாவளியையும் எதிர்கொள்கிறோம். நன்றி சகோதரி உங்கள் கவிதைக்கும், என் வலைப்பக்கம் வந்து ஆசிர்வதிததற்கும்

    பதிலளிநீக்கு
  20. அப்பாவின் நினைவுகளை அழைத்து வந்தது கவிதை. என் 30 வயது வரையில் உயரோடிருந்த அப்பா நான்கு அல்லது ஐந்து தீபாவளிக்கு எங்களோடு இருந்திருக்கிறார். திரை கடலோடி திரவியம் தேடச் சென்றவர் அவர், அந்த நினைவுகளோடு தான் நானும் என் சகோதரர்களும் ஒவ்வொரு தீபாவளியையும் எதிர்கொள்கிறோம். நன்றி சகோதரி உங்கள் கவிதைக்கும், என் வலைப்பக்கம் வந்து ஆசிர்வதிததற்கும்

    பதிலளிநீக்கு
  21. மிக அருமையான கவிதை தேவதையில் வெளிவந்தமைக்கும் சேர்த்து டபுள் வாழ்த்துக்கள் தேனக்கா..

    பதிலளிநீக்கு
  22. நன்றி அருணா., கார்த்திக்., அமைதிச்சாரல்., வல்லிசிம்ஹன்., தினேஷ்., மேனகா., ஆர்.ஆர்.ஆர்.,புவனேஷ்வரி., நிஜாம்., ரமேஷ்., ராமலெக்ஷ்மி., யாதவன்., குமார்., நசர்., வினோ., ஹேமா., பாலாஜி., யோகேஷ்., கீதா., ராஜா., பாலாசி., சசி., ஸ்ரீராம்., பத்மா., ஸாதிகா., குரு., கோமதி., வள்ளியப்ப அய்த்தான்., சிவகுமரன்., மலிக்கா..

    பதிலளிநீக்கு
  23. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  24. இயல்பான வரிகள் அக்கா
    அழுத்தமாக.....

    உங்கள் பாச ஒளி....

    பதிலளிநீக்கு
  25. கவிதை..கவிதை...பிரமாதம் அக்ஸ்
    (புகைப்படங்களில் ஒளி படர்ந்துள்ளது...FLASH இல்லாமல் எடுக்கவும்)

    பதிலளிநீக்கு
  26. நன்றி செந்தில் :)

    நன்றி ஆகாயமனிதன் :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...