ஒரு சாதாரண வானொலி ஒலிபரப்பி உலகப் புகழ் பெற முடியுமா ? பெற்றிருக்கிறதே. பிரான்ஸின் பாரிஸில் உள்ள இந்த ஈஃபில் டவர்தான் அந்தப் புகழுக்கு உரியது. 1930 வரை உலகின் மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது இது.
யூ ரோப் டூரின் எட்டாம் நாள் மாலை நாங்கள் பாரீஸ் வந்தடைந்தோம். பொன்னிற வெய்யிலில் வெள்ளி நிறத்தில் தகதகத்து நின்றிருந்தது ஈஃபில் டவர். அதில் ஏறிப் பார்க்க 18 யூரோ கட்டணம் ஒரு நபருக்கு.
ஸ்டார் ட்ராவல்ஸின் டூரில் முன்பே பணம் செலுத்தி விட்டதால் அங்கே போய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் க்யூவில் நின்று மேலே மின் தூக்கி மூலம் சென்று வந்தோம். முதல் தளம் வரையே போக முடிந்தது. இரண்டாம் தளத்திற்குச் செல்ல அன்று அனுமதி கிடைக்கவில்லை. எனவே அதற்கான பணத்தை ஸ்டார் ட்ராவல்ஸார் திருப்பி அளித்தார்கள்.
கொஞ்சம் வித்யாசமான அனுபவம்தான். ஏறும்வரை லிஃப்டில் - ஓடிஸ் கம்பெனியின் எலிவேட்டரில் - விஞ்ச் போல் உள்ளது . இதில் அமர்ந்து பின்புறமாக மேலேறிச் சென்றோம்.பதினெட்டாம் நூற்றாண்டின் கட்டுமானங்களில் ஒன்று இந்த டவர். சொல்ல்போனால் ப்ரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதம் 1887 இல் கட்டப்பட்டு 1889 இல் திறப்பு விழா செய்யப்பட்டது.
தரைத்தளத்தில் அஸ்திவாரத்தில் இருந்து இதை நான்கு பக்கமும் க்ராஸாக பேஸ்மெண்ட் கட்டி அதன் பின் அதில் இரும்புத்தளவாடங்களை இரும்பு ஆணிகள் கொண்டு பொருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு வழியா வந்தாச்சு. மேலே ஏறிப் பயத்தோடே நடந்து பார்த்தாச்சு. தரை எல்லாம் கண்ணாடியா வார்ப்பிரும்பான்னுகூடத் தெரியல.
முதல் ஃப்ளோர் போறதுக்கே கண்ணைக் கட்டிடுச்சே.
தனியா ஒரு செல்ஃபி.. கோஸ்ட் இல்ல நாந்தான் :)
சுற்றிலும் ஸீன் நதி ஓட பசுமைப் புல்வெளிகள் அலங்கரிக்க உலகின் அதிசயங்களில் ஒன்றைக் கண்டு களித்து வந்தோம். ஆனா ஒண்ணுங்க. எல்லாமே பார்க்கும்வரைதான் பிரமிப்பு. அதன் பின் இதுதானா, இவ்வளவுதானா எனத் தோன்றும். இது எனக்கு மட்டும்தானா :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)