எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 ஜூன், 2023

வூப்பர்டால், ஓபர்ஹௌஸன், டோர்ட்மெண்ட், ஹம், சுந்தர்ன் ரயில்வே ஸ்டேஷன்கள்

 ஜெர்மனி சென்றிருந்தபோது நான் மிகவும் ரசித்தவை ரயில் , மெட்ரோ ரயில், மோனோ ரயில், ட்ராம் போக்குவரத்துக்கள். 

இது ஓபர்ஹௌஸன் என நினைக்கிறேன். வூபர்டாலா எனவும் தெரியவில்லை.   

கட்டிடங்களை வித்யாசமாக வடிவமைப்பதில் வல்லவர்கள் ஜெர்மானியர்கள். 
இது வூபர்டாலில் உள்ள ப்ரைமார்க் ஸ்டோர். வித்யாசமான பில்டிங்க்.

இந்தக்கட்டிடத்தின் பக்கமாகத்தான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகணும். 
ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு விதம். 

கண்ணுக்கு டிலைட்.


எத்தனை விதமாகக் கட்ட முடியுமோ அத்தனை விதப் பரீட்சார்த்த முயற்சிகளையும் செய்திருப்பார்கள் ஜெர்மானியர்கள். 

இது வூபர்டால் சஸ்பென்ஷன் மோனோ ரயில் . மேலே தலைகீழாகத் தொங்கிக் கொண்டே செல்வது. 

ஹம் செல்லும் வழியில் மகனின் நண்பர் ஜோஹேனஸ் வீட்டுக்குச் சென்றோம். அந்த ஸ்டேஷன் இது. 

உள்ளே உணவுக் கூடங்கள் அதிகம். எல்லா இடமும் நீட் & க்ளீன். 

ஒவ்வொரு ஸ்டேஷனையும் அப்பிடிப் ப்ரமாதமா அலங்கரிச்சிருப்பாங்க.

மேலும் தரையில் சோறு போட்டுச் சாப்பிடும் அளவு சுத்தம்.

விதானங்களைப் பாருங்கள். எவ்வளவு கலைநயம். மண்டை முழுக்க மூளை என்பார்கள் அல்லவா அப்படிப்பட்ட மக்கள்.

பாஹனாஃப் என்பது ரயில்வே ஸ்டேஷன். டிக்கெட் வாங்கலாம். பயணம் செய்யலாம்.  சிறிய ஸ்டேஷன்கள் என்றும் சொல்லலாம். 

இந்த  ஹாப்ட்பேகனாஃப் என்பது செண்டரல் ரயில்வே ஸ்டேஷன். 

வெகு விமர்சையாக அழகாக இருக்கும். மொழி புரிந்தால் மட்டுமே இங்கே பயணம் செய்ய முடியும்.

இல்லாவிட்டால் வேறு ஊருக்கே போய்விடுவோம் !

இது சுந்தர்ன் செல்வதற்காக சென்ற ரயில் நிலையம் என நினைக்கிறேன்.  ஓபர் ஹௌஸனில் கந்தையா முருகதாசன் சார் அவர்களும், சுந்தர்னில் பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் அவர்களும் குடும்பத்துடன் இருக்கிறார்கள். 

கொலோனிலிருந்து ஹம் செல்வதற்காக வந்த ஸ்டேஷன் இது. 


எவ்வளவு பிரம்மாண்டம் பாருங்கள் ! கொலோன் கதீட்ரல் பின்புறம் காட்சி அளிக்கும் கொலோன் ரயில் நிலையம். 

இது ரைன் டவரைப் பார்க்க நாங்கள் சென்ற ரயில்வே ஸ்டேஷன்.

ரயில்கள் போகவும் வரவுமாக இருக்கும்.

முன்பே சொல்லி இருக்கிறேன். ஒரே ட்ராக்கிலேயே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும் ட்ராம்கள் நிற்கும் என்று. !

அதே போல் ட்ரெயின்களும் ஒவ்வொரு இடமாகப் பார்த்துச் சென்று ஏற வேண்டும். பாரிஸ் பரவாயில்லை. யூரோப் டூர் முடிந்ததும் தாலிஸ் ட்ரெயினில் பாரிஸிலிருந்து டுசில்டார்ஃப் வந்து சேர்ந்தோம். 


இது இன்னொரு ரயில்வே ஸ்டேஷன். டுசில்டார்ஃப் ஏர்போர்ட்டுக்கு செல்வது என நினைக்கிறேன். 

ஒவ்வொரு ஸ்டேஷனையும் பார்க்கவே இங்கே எல்லாம்பயணம் செய்யலாம்.
ட்ரெயின் டிக்கெட் இங்கே பாஸ் வாங்கலாம். ஆனால் வாரநாட்களில்  காலை 10 மணியிலிருந்து மாலை 7மணி வரையே அவை செல்லுபடி ஆகும்.
வார இறுதி நாட்களில் முழு நாளும் பயணிக்கலாம் பகல்பொழுதில். இருவர் சென்று வரலாம். 

ஓ! ஓ! எத்தனை அழகு !. 

இது ஏர்போர்ட்செல்லும் அன்று நாங்கள் சென்று ஏறிய மெட்ரோ ரயில் ஸ்டாப். 
விடுஜூட் இந்தியாவுக்கு என்று இரண்டு மாத ஜெர்மனிப் பயணம் முடிந்து வீட்டுக்குப் புறப்பட்ட ஒரு பொன்காலை நேரம். 
பாதை வெகு தூரம். 
இது ஒரு ரயில்வே ஸ்டேஷனில் உட்காருமிடம். 
ரயில்வே ஸ்டேஷனின் மேற்புறம் கண்காணிப்புக் கேமராக்கள் !
இது டூயிஸ் பர்க் செல்லும் மெட்ரோ நிலையத்தின் வெளிப்புறம் உள்ள பஸ் நிலையம். 

எவ்வளவு க்ளீன் & நீட் ரோடுகள். ரயில்வே ட்ராக்குகள். மிக அழகான ஊர் ஜெர்மனி. அங்கே அனைத்தும் ரசிக்கத்தக்கவையே. !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...