10.4.86.
12.
ஆவணியாய் இருக்கிறது
மனது.
காய்த்தலும்
கனித்தலும்
பூத்தலும்
இல்லாமல்.
தூவானமும்
இதவெய்யிலும்
ஒதுக்கி,
தவலை
மூடியின்
சூரியத்
தெறிப்பாய்
கொடுத்ததை
வெளிப்படுத்திக்கொண்டு
பாலைக்
கொடுத்துவிட்டு
தண்ணீரைப்
பருகும்
அன்னமாய்,
நிகழ்ச்சித்
துளிகளை
விழுங்கும்
சாதகமாய்
விடிகாலை
மரங்களைப் போலத்
தெளிவுடன்
பசுமையுடன்
சுத்தமாய்
இருக்கிறது மனது.
அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
---விடிகாலை மரங்களைப் போலத்
பதிலளிநீக்குதெளிவுடன் பசுமையுடன்
சுத்தமாய் இருக்கிறது மனது. ---
கொடுத்து வைத்தவர் தாங்கள்
Super Sako
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ :)
நன்றி நவாஸ் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!