பின் சுழற்சி:-
***************
ஆட்டோக்காரர்
வண்டி விட்டிறங்கி
இளநி அருந்தி
களைப்புத்தீர்கிறார்.
இளநி வெட்டியவர்
அரிவாளைப் போட்டுவிட்டு
பக்கத்து மாவுக்கடை
பெஞ்சில் அமர்கிறார்.
மாவுக்கடைக்காரர்
ஆட்கள் இல்லாததால்
மல்லிகைப்பூக்காரரின்
ஸ்டூலில் அமர்கிறார்.
மல்லிகைப்பூக்காரர்
வாடிக்கையாளரற்ற
வெய்யில் நேரத்தில்
ஆட்டோவில் அமர்ந்து
ஹாரனை அமுக்குகிறார்..
நான்கு வெய்யில்கள்
ஒருசேரக் கடக்கும்போது
மருந்துக் கடைக்காரர்
ஆட்டோவில் சரக்கு
ஏற்றுகிறார்..
ஐந்தாவது வெய்யிலைச்
சுமந்தபடி ஆட்டோ
நகரும்போது
இருக்கைகளின்
பின் சுழற்சியில்
கசிந்து வெளியேறுகிறது
வெப்பமும் களைப்பும்.
டிஸ்கி:- இந்தக் கவிதை 2011, செப்டம்பர் முதல் வார உயிரோசையில் வெளிவந்தது.
***************
ஆட்டோக்காரர்
வண்டி விட்டிறங்கி
இளநி அருந்தி
களைப்புத்தீர்கிறார்.
இளநி வெட்டியவர்
அரிவாளைப் போட்டுவிட்டு
பக்கத்து மாவுக்கடை
பெஞ்சில் அமர்கிறார்.
மாவுக்கடைக்காரர்
ஆட்கள் இல்லாததால்
மல்லிகைப்பூக்காரரின்
ஸ்டூலில் அமர்கிறார்.
மல்லிகைப்பூக்காரர்
வாடிக்கையாளரற்ற
வெய்யில் நேரத்தில்
ஆட்டோவில் அமர்ந்து
ஹாரனை அமுக்குகிறார்..
நான்கு வெய்யில்கள்
ஒருசேரக் கடக்கும்போது
மருந்துக் கடைக்காரர்
ஆட்டோவில் சரக்கு
ஏற்றுகிறார்..
ஐந்தாவது வெய்யிலைச்
சுமந்தபடி ஆட்டோ
நகரும்போது
இருக்கைகளின்
பின் சுழற்சியில்
கசிந்து வெளியேறுகிறது
வெப்பமும் களைப்பும்.
டிஸ்கி:- இந்தக் கவிதை 2011, செப்டம்பர் முதல் வார உயிரோசையில் வெளிவந்தது.
உயிரோட்டமுள்ள பின் சுழற்சி:-
பதிலளிநீக்குபின் சுழற்சி சொன்ன விதம் பிடிச்சிருக்குங்க
பதிலளிநீக்குவாழ்க்கை சுழற்ச்சி ...!
பதிலளிநீக்குஇது நல்லாயிருக்கே!அருமை.கருத்துள்ள கவிதை..
பதிலளிநீக்குகவிதை அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அருமையான கவிதை...
பதிலளிநீக்குவாழ்க்கை ஒரு வட்டம்,..
பதிலளிநீக்குஅருமையான பின் சுழற்சி..
நன்றி ராஜி
பதிலளிநீக்குநன்றி மனசாட்சி
நன்றி வரலாற்று சுவடுகள்
நன்றி ஆசியா
நன்றி குமார்
நன்றி சாந்தி