சந்தேகச் சுக்கான்கள்
கைப்பிடிக்குள் அடக்கி
காற்றுனக்கு சாதகமாக
பாய்மரப்படகு விரித்த
படுதாக்களைச் சுருட்டி
நினைத்த திசைக்கு
இழுத்துச் செல்கிறாய்
ஒற்றை வார்த்தை
துடுப்பா., தடுப்பா
அலமலங்க வைக்கிறது
எதிர்பாரா தத்தளிப்பில்.
லயமற்ற இசையில்.
ஆட்டத்தில் நீயும் நானும்
நமது வாழ்வும்..
புயலடிக்க., மழைபெய்ய
யாருமற்ற தீவு வீடு
எல்லைக் கோட்டைத்
தாண்டினேனோ
நானறியும் முன்னரே
எதிர்கொண்டு
சிதறடிக்கின்றன
வார்த்தை குண்டுகள்
சிதறிக் கிடக்கிறோம்
முழுதாகவே நானும்
எண்ணங்களும்.
வன்மமாய் இருக்கிறாய்
என் சுயத்தை
சுருளவைக்கும்
முயற்சியில் இன்னும்.
டிஸ்கி :- இந்தக் கவிதை. புதன் செப்டம்பர் 1 அதீதத்தில் வெளிவந்துள்ளது.
கைப்பிடிக்குள் அடக்கி
காற்றுனக்கு சாதகமாக
பாய்மரப்படகு விரித்த
படுதாக்களைச் சுருட்டி
நினைத்த திசைக்கு
இழுத்துச் செல்கிறாய்
ஒற்றை வார்த்தை
துடுப்பா., தடுப்பா
அலமலங்க வைக்கிறது
எதிர்பாரா தத்தளிப்பில்.
லயமற்ற இசையில்.
ஆட்டத்தில் நீயும் நானும்
நமது வாழ்வும்..
புயலடிக்க., மழைபெய்ய
யாருமற்ற தீவு வீடு
எல்லைக் கோட்டைத்
தாண்டினேனோ
நானறியும் முன்னரே
எதிர்கொண்டு
சிதறடிக்கின்றன
வார்த்தை குண்டுகள்
சிதறிக் கிடக்கிறோம்
முழுதாகவே நானும்
எண்ணங்களும்.
வன்மமாய் இருக்கிறாய்
என் சுயத்தை
சுருளவைக்கும்
முயற்சியில் இன்னும்.
டிஸ்கி :- இந்தக் கவிதை. புதன் செப்டம்பர் 1 அதீதத்தில் வெளிவந்துள்ளது.
//சிதறிக் கிடக்கிறோம்
பதிலளிநீக்குமுழுதாகவே நானும்
எண்ணங்களும்.
வன்மமாய் இருக்கிறாய்
என் சுயத்தை
சுருளவைக்கும்
முயற்சியில் இன்னும்.//
அசத்தல் தேனக்கா :-)
அக்கா...
பதிலளிநீக்குகவிதை அசத்தல்.
அதீதத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
ஆழமான உணர்வுகளுடனான கவிதை !
பதிலளிநீக்கு//ஒற்றை வார்த்தை
பதிலளிநீக்குதுடுப்பா., தடுப்பா
அலமலங்க வைக்கிறது
எதிர்பாரா தத்தளிப்பில்.
லயமற்ற இசையில்.
ஆட்டத்தில் நீயும் நானும்
நமது வாழ்வும்..//
அருமையான கவிதை.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள். vgk
சந்தேகச் சுக்கான்கள்|கைப்பிடிக்குள் அடக்கி|காற்றுனக்கு சாதகமாக|பாய் மரப்படகு|விரித்த|படுதாக்களைச் சுருட்டி|நினைத்த திசைக்கு|இழுத்துச் செல்கிறாய்
பதிலளிநீக்குஎன் மன வேதாளத்தைக் கட்டுக்குள் அடக்க சமயங்களில் பெரும்பாடு பட வேண்டியிருக்கும். அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் தேனக்கா...
ஆட்டி வக்கும் வேதளமாய் மனம்தானே தேனக்கா !
பதிலளிநீக்குசிதறிக் கிடக்கிறோம்
பதிலளிநீக்குமுழுதாகவே நானும்
எண்ணங்களும்.
வன்மமாய் இருக்கிறாய்
என் சுயத்தை
சுருளவைக்கும்
முயற்சியில் இன்னும்.//
கவிதை அசத்தல்.
அருமையான கவிதை.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.
//சிதறிக் கிடக்கிறோம்
பதிலளிநீக்குமுழுதாகவே நானும்
எண்ணங்களும்.
வன்மமாய் இருக்கிறாய்
என் சுயத்தை
சுருளவைக்கும்
முயற்சியில் இன்னும்.//
ARUMAIYAANA VARIKAL..VAALTHTHUKKAL
நன்றி சாந்தி
பதிலளிநீக்குநன்றி குமார்
நன்றி கௌசல்யா
நன்றி கோபால் சார்
நன்றி கணேஷ்
நன்றி ஹேமா
நன்றி மாலதி
நன்றி மாதவி
நன்றி சரவணன்