எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 மார்ச், 2026

ராஜநீதி விளக்கம்

1.ராஜநீதி விளக்கம்

 

முதல் அத்யாயம், முதல் ஸ்லோகம்

 

    ப்ரணம்ய சிரஸா விஷ்ணும்

த்ரைலோக்ய அதிபதிம் பிரபும் l

    நானா சாஸ்த்ர உத்ருதம் வக்ஷ்யே

ராஜ நீதி ஸமுச்சயம் ll

 

பொருள்:-

ப்ரணம்ய = வணங்குகிறேன்

சிரஸா = தலை வைத்து

விஷ்ணும் = மகா விஷ்ணுவை

த்ரைலோக்ய அதிபதிம் = மூவுலகங்களுக்கும் அதிபதியான

பிரபும் = மகாப்பிரபுவான

நானா சாஸ்த்ர = நான்குவித சாஸ்திரங்களிலும்

உத்ருதம் = வெளிப்படுத்தி இருப்பதன்படியே

வக்ஷ்யே = அதன்படியே கூறுகிறேன்.

ராஜ நீதி = அரசியல் நீதி

ஸமுச்சயம் = இந்த உலகுக்கு, சமூகத்துக்குச் சொல்ல விழைகிறேன்.

 

விளக்கம்:- பூலோகம் சுவர்க்கலோகம், பாதாள உலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் அதிபதியும் மகாப்பிரபுவுமான ஸ்ரீமன் மகாமகாவிஷ்ணுவை மனதில் தியானித்து அவரின் பாதாரவிந்தங்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். மிகச் சிறப்பாக அரசாட்சி நடத்திச் செல்வதற்கு அத்யாவசியத் தேவையான ராஜ நீதி சாஸ்த்திரம் பற்றி நானாவித சாஸ்திர நூல்களிலிலிருந்தும் நான் கற்றுத் தெளிந்தவற்றை அவை விவரித்திருப்பதின் படியே இந்த உலகுக்கு, மக்கள் சமூகத்துக்குப் பகிர விழைகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...