எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 27 மே, 2023

ஷென்ஜென் விசா - SCHENGEN VISA

ஷென்ஜென் விசா

ஜெர்மனிக்குச் செல்வதென்றால் யூரோப் முழுமைக்கும் செல்லுபடியாகக்கூடிய  ஷென்ஜென் விசாவை ( யூரோப் செல்வதற்காக) அப்ளை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். 

நாங்கள்  சென்ற முறை அப்ளை செய்தபோது ஒரு வருடத்துக்கு மட்டும் கொடுத்தார்கள், அதுவும் மூன்று மாதம் மட்டுமே இருக்க இயலும். இந்த முறை அப்ளை செய்தபோது நான்கு ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளார்கள். அதுவும் ஒரு வருடத்துக்கு ஒரு முறை சென்று மூன்று மாதங்கள் மட்டுமே இருந்துவர இயலும். மேலும் எந்த வெளிநாடு சென்றாலும் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். பத்து வருட பாஸ்போர்ட் நாம் சென்று வரும் வரை காலாவதியாகாமல் இருக்க வேண்டும்.

சென்றமுறை நாங்கள் ஷென்ஜென் விசாவுக்கு அப்ளை செய்தபோது ஓராண்டுக்கு மட்டுமே அதுவும் மூன்று மாதம் மட்டுமே கிடைத்தது. கொரோனாவுக்குப் பிறகு வெகு கெடுபிடி. அதன் பின் அடுத்தமுறை அப்ளை செய்தபோது நான்கு ஆண்டுகளுக்கு அதுவும் வருடத்துக்கு மூன்று மாதம் சென்று வர அனுமதி கிடைத்தது. ஜெர்மனிக்கு மட்டும் டிக்கெட் விலை போக வர 700 யூரோ வரலாம். இன்னும் மற்ற ஐரோப்பிய நாடுகள் என்றால் இந்திய மதிப்பில் தோராயமாக ஒரு லட்சம் வரும்.

ஜெர்மனி மற்றும் யூரோப் செல்ல ஷென்ஜென் விசாவுக்கு என்னென்ன தேவை என்பதைப் பார்ப்போம். கிட்டத்தட்ட 60 பக்கங்கள் தயார் செய்தோம். பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுக்க எல்லாம் ரூல்ஸ் உண்டு. மேலும் விசாவுக்கான ஜெராக்ஸ் காப்பிகளின் அளவையும் தேவையானவற்றையும் வீட்டில் செக் செய்தாலும் அங்கே வெளியே இருக்கும் ஜெராக்ஸ் கடைக்காரரிடம் கேட்டு ஒருமுறை செக் செய்து எடுத்துச் செல்வது நல்லது.

அவர் எங்கள் விசா இண்டர்வியூ லெட்டரைப் பார்த்துவிட்டு அதன் டயத்தைக் கூடச் சொன்னார். முன்பே எங்களுக்குத் தெரியும் என்றாலும் வியப்போடு கேட்டுக் கொண்டோம். உள்ளே ஜெராக்ஸ் எடுத்தால் கொள்ளைக் காசு. மேலும் புகைப்படத்தில் பின்புறம் முழுக்க வெள்ளை என்றாலும் ஏதோ எர்ரர் என்று அங்கேயே வேறு எடுக்கச் சொன்னார்கள். அதற்கு வேறு டயம் ஆனது. 

ஷென்ஜென் விசா எடுக்கத் தேவையானவை - ஜெர்மனி விசா ரிஸ்க் அசம்ஷன் லெட்டர் – ஜெர்மனியில் இருப்பவர், வசிப்பவர், நம்மை அழைப்பவர் கொடுக்க வேண்டியது. வருபவர்களை உணவு உறையுள் கொடுத்து நான் பார்த்துக் கொள்வேன் என்று. ஏர் டிக்கெட், டு & ஃப்ரோ, எப்போது சென்று எப்போது திரும்புவார்கள் என்ற விபரம்,  ட்ராவல் எக்ஸ்பென்ஸஸ் வித்தின் யூரோப், மெடிக்கல் இன்சூரன்ஸ், ஹவுஸிங் & ஃபுட் எக்ஸ்பென்ஸஸ். குறிப்பிட்ட கெடு முடிந்ததும் அவர்கள் திரும்பித் தங்கள் ஊருக்கு ஜெர்மனியிலிருந்து சென்றுவிடுவார்கள். எனவே ஷென்ஜென் விசா தருமாறு வேண்டுகிறேன்.என்றெல்லாம் எழுதிக் கொடுக்க வேண்டும் நம்மை அழைப்பவர்.

பர்சனல் கவரிங் லெட்டர் ஃபார் ஷென்ஜென்விசா வைக்க வேண்டும். இதைப் பயணம் செய்யும் நாம் கொடுக்க வேண்டும். ஷென்ஜென் விசா வேண்டும், தேனம்மையாகிய நான்.. இன்ன மாதம் இன்ன தேதியிலிருந்து  இன்ன தேதிவரை ஷென்ஜென் விசா தந்து என்னை ஜெர்மனிக்குள் ஜெர்மனியைப் பார்க்க தரிசிக்க J  அனுமதிக்குமாறு வேண்டுகிறேன்.

என் மகனையும் மருமகளையும் பேரனையும் பார்க்கவும் ஊர் சுற்றிப் பார்க்க, ( ஹிஸ்டாரிக்கல் ப்ளேஸஸ், முக்கிய இடங்கள் ) மேலும் இந்த விசிட் முழுவதும் என் மகன் வீட்டிலேயே தங்க முடிவெடுத்திருக்கிறேன் என உறுதி அளிக்கிறேன். அதில்

அப்ளிகேஷன் ஃபார்ம் வித் ஃபோட்டோ

ஃபார்மல் அப்ளிகேஷன் லெட்டர் ஃப்ரம் மை சன்

ப்ரூஃப் ஆஃப் லாண்ட் டைட்டில்

ப்ரூஃப் ஆஃப் அக்காமடேஷன்

ஃப்ளைட் இட்டினெரி

ட்ராவல் ஹெல்த் இன்சூரன்ஸ் ( இண்டர்நேஷனல் ட்ராவல் இன்சூரன்ஸ் )

இதை எல்லாம் வரிசைப்படித் தந்ததன் மூலம் நீங்கள் என் ஜெர்மனி விசிட்டை அனுமதித்து சீக்கிரத்தில் விசா கொடுத்துவிடுவீர்கள் என நினைக்கிறேன். 

செல்லுமுன் டு அண்ட் ஃப்ரோ டிக்கட் ப்ரிண்ட் அவுட் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கே வரிசையில் நின்று முதலில் அப்ளிகேஷனைக் கொடுக்க வேண்டும். அதன்பின் ஹெல்த் டெஸ்ட், அதன் பின் விசாவுக்கு மற்றும் இன்சூரன்ஸுக்கான பணம் கட்ட வேண்டும்.

பாஸ்போர்ட்டை முக்கியமாக எடுத்துச் செல்ல வேண்டும். அதை அங்கேயே கொடுத்துவிட்டு வரவேண்டும். விசா அப்ரூவல் அதில் ப்ரிண்ட் செய்தபின் நமக்குக் கூரியரில் அனுப்புவார்கள்.

இவ்வாறு ஷென்ஜென் விசா அப்ளை செய்து அதன் பயிற்சியிலேயே நீங்கள் யூரோப் செல்வதற்கு நன்கு தயாராகி விடுவீர்கள். மொழி தெரிந்தால் புரிந்தால் இன்னும் சௌகர்யம். ஏனேனில் அவர்கள் அனைவருமே தாய்மொழிப் பற்று மிக்கவர்கள். என்ன ஆனாலும் நாம் பேசுவது எவ்வளவு புரிந்தாலும் ஆங்கிலத்தில் பதில் அளிக்கவே மாட்டார்கள் மண்ணின் மைந்தர்கள். J

நாங்கள் இந்தியன் சிட்டிசனாக ஜெர்மனி செல்ல இங்கே விசா அப்ளை செய்து கொண்டிருக்கும்போது அங்கே எங்கள் மகன் குடும்பத்தார் ஜெர்மனி சிட்டிசன்களாக மாறி இங்கே வர இந்தியன் விசாவுக்கு அப்ளை செய்துள்ளார்கள். வாழ்க்கையே இப்படியான அபூர்வங்களால் ஆனதுதானே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...