எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 7 மே, 2023

மூலிகை மருத்துவம்

மூலிகை மருத்துவம்


1.அரசு :- இலைக்கொழுந்து கசாயம் சுரம், தொண்டைப்புண் ஆற்றும். தளிரை அரைத்துப் பூசினால் கால் வெடிப்பு குணமாகும்.

2.அகத்தி:- அகத் + தீ அகற்றும். ( உடல் வெப்பம் ). குடல் புண், குடற்புழு, விட முறிப்பு, வாரம் இருமுறை சாப்பிடலாம். ( பொரியல் ).

வயிற்றுப் புண் :-இரவில் வெங்காயம், சீரகம், அரை உப்பு சேர்த்து வேகப்போட்டு காலை வெறும் வயிற்றில் 100 மிலி  சாப்பிட்டு வந்தால் கடுமையான வயிற்றுப் புண் குணமாகும். தோல் நோய் குணமாகும். அடிக்கடி உணவில் சேர்த்தால் குடல் பலவீனமாகி வயிற்றோட்டம் போகும். எலுமிச்சைச்சாறும் இச்சாறும் சம அளவில் நாளும் உச்சந்தலையில் தேய்த்து வர பைத்தியம் குணமாகும்.


 3. ஆல் :- ஆலங்கொழுந்து விடும் மொக்கைப் பசும்பாலில் அரைத்து 10 கிராம் சர்க்கரை சேர்த்துக் குடிக்க வயிற்றுப் புண் ஆறும். ஆலம் துளிரை அரைத்து 10 கிராம் காலை மாலை 3 நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். 5 துளி ஆலம்பால் + தேன் சேர்த்து அருந்தினாலும் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

 

4.ஆமணக்கு (விளக்கெண்ணெய்) :- பிள்ளை வளர்த்தி, வெப்பம் தந்து பின் குளிர்ச்சி தரும். சிற்றாமணக்குத் தளிரை அரைத்து 10 கிராம் அளவு தேங்காய்ப் பாலில் கொடுத்து அந்த நாளில் உப்பில்லாப் பத்தியம் இருக்க மஞ்சள்காமாலை, ஊது காமாலை இரண்டும் குணமாகும்.

சிற்றாமணக்கு இலை = மஞ்சள் கரிசலாங்கண்னி சம அளவு அரைத்து 10 – 15 கிராம் பாலில் சாப்பிட்டு அந்த நாளில் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். ஒரு வேளை மருந்தே குணமாக்கும். ஒரு மாதம் தயிர் நெய் புலால் கூடாது. திராக்ஷை இளநீர் 10 நாள் சாப்பிட வேண்டும். 

மூலம் :- சிற்றாமணக்கெண்ணெயில் பூம்பழத்தை நாளும் நண்பகல் தொட்டுச் சாப்பிட மூலம் போகும். 

சூடுபிடித்தல்:- அடிவயிறு, தொப்புள், கால் நகம் எண்ணெய் வைத்தால் சரியாகும்.

5. ஊமத்தம்பூ :- ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். மறுநாள் காலை தலைக்குத் தேய்த்துக் குளிக்க வைக்கவும். 5 – 7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் சித்தப் பிரமை, உன்மத்தம், பைத்தியம் குணமாகிவிடும்.

நாய்க்கடி :- நாய் கடித்தவுடன் நீர் விடாமல் இதன் இலையை அரைத்து எள் நெய் விட்டு இளஞ்சூடாக வதக்கி வைத்துக் கட்டவும். அதே சமயம் இதன் இலைச்சாறு 2 – 3 துளி வெல்லத்தில் கலந்து உண்ணக் கொடுக்கவும். இரவில் பாலும் , பகலில் தயிரும் தகுந்த உணவுதான். உப்பில்லாமல் கொடுக்கவும்.

 காதுவலி :- இரும்புக்கரண்டியில் இதன் சாறும், சம அளவில் எள் நெய்யும் விட்டுக் காய்ச்சி ஆற விட்டு 2 – 3 துளிகள் காதில் விட காதுவலி எழுச்சி குணமடையும்.

6. புகையிலை:- தேள்கடி :- உலர்ந்த புகையிலையில் நீர் விட்டு மந்தித்து 1 சொட்டு கண்ணில் விட தேள்கடி விடம் இறங்கும். வலப்பக்கம் கடித்தால் இடக்கண்ணிலும் இடப்பக்கம் கடித்தால் வலக்கண்ணிலும் விட வேண்டும்.

7..சந்தனமரம்.:- எலுமிச்சம்பழச்சாற்றில் அரைத்துப் பூசி வர வெண்குட்டம், தவளைச் சொறி, மேகப்படை, வெப்பக்கட்டிகள் குணமாகும்.

உடல் ஊட்டம் :- பால் விட்டு அரைத்து 2 – 3 கிராம் அளவு காலை வெறும் வயிற்றில் சாப்பிட உடல் ஊக்கம் பெறும். குளிர்ச்சி அடையும்.

8. பனை :- வெப்பம் தணித்து குளிர்ச்சி தருவது.

பனைமரத்துப் பாலை விடிகாலை 100 – 200 மிலி அருந்தி வந்தால் உடல் குளிர்ச்சி பெறும். வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆறும்.

நுங்கு நீர் வேர்க்குருவிற்கு தடவ குணமாகும்.

9. புங்க மரம் :- இதன் இலையை அரைத்துப் பற்றிட எந்தப் புண்ணும் ஆறும்.

10. மஞ்சள் :- தலைவலி :- ஆமணக்கெண்ணெய் விளக்கில் விட்டு விரலி மஞ்சளைச் சுட்டு அதன் புகையை மூக்கில் உறிஞ்ச தலைவலி உடன் நிற்கும். 3, 5 முறை பிடிக்கவும். சளி, ஜலதோஷம் பீனிசம், மண்டையிடி உடன் தீரும்.

 வயிற்றுப்புண் , இருமல் மஞ்சளை மென்மையாகப் பொடி செய்து பாலில் போட்டு சுடவைத்து அருந்த எவ்வகை வயிற்றுப் புண்ணும் ஆறும்.

 கால் ஆணி :- மஞ்சள் வசம்பு மருதாணி இலை கற்பூரம் சம அளவில் சேர்த்து அரைத்து வைத்துக் கட்டி வந்தால் கால் ஆணி மறையும். இரவில் 10 நாள் கட்டி வரவும். கட்டிகளும் கரையும்.

சேற்றுப் புண் :- மஞ்சள் + வேப்பந்தளிர். 

அம்மை :- மஞ்சள் + வேப்பந்தளிர் + கொட்டை முத்துப் பருப்பு. ஆகியவற்றை அரைத்துப் பற்றிடுக. இதற்குப் பத்தினி என்று பெயர்.

காமாலை :- மஞ்சள் பொடியை 5 கிராம் வெந்நீரில் கொடுத்துவர காமாலை 6 நாளில் குணமாகும். புளி காரம் நீக்குக. கிருமி நீக்கம். திருஷ்டி நீக்கம்.

11.. புளியமரம் :- சொறி + புண். வேப்பிலை + புளியம் இலை போட்டுக் காய்ச்சிய கசாயத்தில் கழுவ குணமாகும். அதிகம் பழம் உணவில் சேர்த்தால் நரம்பு வலி சுரம் சோம்பல் உண்டாகும்.

12. வன்னிமரம் :- இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைக்கவும். காய்ச்சலும், சன்னியும் உடன் தோன்றினால் இந்த சூரணத்தில் 5 – 10 கிராம் வெந்நீரில் காலை மாலை 3 – 6 நாள் கொடுக்க குணமாகும். குடற்புண்ணும் ஆறும்.

13. வேம்பு :- ரத்தம் தூய்மையாக்கும். பாம்புக்கடி விஷம் போக்கும். அம்மைக்கும் இதன் இலையுடன் மஞ்சள் அரைத்துப் பூச குணமாகும். இதன் கொழுந்துடன் வெல்லம் வைத்து அரைத்து வாரம் 2 முறையாக 3 வாரம் கொடுத்தால் நாக்குப் பூச்சி, கொக்கிப் புழு வெளியேறும். இலை அரைத்துப் பூச ஆறாத புண் குணமாகும். நீரிழிவு குட்டம் உள்புண் குணமாகும். வேப்பிலை மஞ்சள் நகச்சுத்தி பித்தவெடிப்பு பாத எரிச்சல் குணமாகும்.

 வேம்பின் பூ :- துவையல் ரசம் குமட்டல் வாந்தி மயக்கம் பித்தம் தீரும். பசி உண்டாக்கும்.

 காய் :- உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காய்ச்சல், மண்டையிடி குணமாகும்.

எண்ணெய் :- பாரிச வாயு வாதவலிக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

 புற்றுநோயைத் தடுக்கும் உணவுகள் :-

 காரட், தக்காளி, மாம்பழம், பலாப்பழம், கொய்யா, ஆரஞ்சு, ஆப்பிள், திராக்ஷை, எலுமிச்சை, நெல்லிக்காய், முட்டைக்கோஸ், பீட்ரூட்.

 நார்ப்பொருள் பெருங்குடல் தொடர்பான புற்றுநோய் குறைகிறது.

கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, தேங்காய், நிலக்கடலை, அவரை, கத்திரிக்காய், வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பட்டாணி, வெங்காயம், பேரிச்சம்பழம், வாழைப்பழம். மஞ்சள் , சீரகம்,  கசகசா, வெள்ளைப்பூண்டு, ஏலக்காய் ஆகியவையும் நலம் பயக்கின்றன.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...