ஸ்ரீ லெக்ஷ்மியின் மூன்று நாவல்கள். ஒரு அறிமுகம்
ஸ்ரீ லெக்ஷ்மியின் மூன்று நாவல்கள் நோஷன் ப்ரஸ் மூலம் வெளியாகி உள்ளன. இவரது நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய் நாவல் பற்றி நான் எழுதிய விமர்சனம் படித்திருக்கலாம். மிக அழகான எழுத்துக்குச் சொந்தக்காரர்.
”கதாநாயகி அனு ஹெச் ஆராக ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவள். மிகப் புத்திசாலியான அவளுக்கும் அவளது கல்லூரித் தோழன் பிடிவாதக்காரன் அர்ஜுனுக்கும் ஏற்படும் மெல்லிய காதல் , தடைகள், திருமண ஏற்பாடுகள், நடுவில் சில நெருக்கடிகள் என்று மனம் செல்லும் பயணத்தைச் சொல்லிச் செல்கிறது கதை.
///ஆயா வடை சுட்ட கதையில் இருந்து முல்லா கதை வரை கேட்டு படித்து சிரித்து வளர்ந்த நான் எழுதுகிறேன். எனது சிறுவயது கிறுக்கல்களை, விளம்பரப்படுத்திய எனது முதல் தூதர் என் தாயாலும், கிறுக்கல் காயிதங்களை குப்பையாக்காமல், கையெழுத்துப் புத்தகங்களாகப் பொத்திப் பாதுகாத்த என் தந்தையாலும் இதோ, இன்று உங்கள் முன் நான் என் முதல் கதையுடன், தயக்கங்களைத் தாண்டி நிற்கிறேன்.//
என்று கலக்கலாக ஆரம்பித்திருக்கும் இதுதான் என்னை
மிகவும் வசீகரித்த முதல் பாரா. அப்புறம் இவர் அடுத்த நாவலும் எழுதி அதுவும்
ஆன்லைனில் பரபரப்பாக வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. :)
நோஷன் ப்ரஸ் மூலம் நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய், உன்னாலே அழகான வீடு, உறிமாட
பூக்கள் இவைகளையும் படிச்சு கருத்து சொல்லுங்க.
நம் தோழி ஸ்ரீ. லக்ஷ்மி பற்றி,
செட்டிநாட்டின் மகள் , வேலை மனித வளத்துறையில் !அதனால் கடந்து செல்லும் மனிதர்களை முடிந்த அளவு படிப்பார் போலும் ! ஒவ்வொரு கதை மாந்தர்களும் வெவ்வேறு தளங்களில் இருக்கிறார்கள்.
இயற்கை, இசை,இனம், இயல்பு,மனிதம் என எல்லாவற்றையும் ரசிக்க ஆரம்பித்தால் அடுத்து புனைவது கவிதையும் கதையுமே, இவரும் அப்படியே. இழுத்து பிடித்து வைக்கும் எதுவும் இயல்பை கெடுத்துவிடும். இவரது படைப்புகள் இயல்புகளோடு பயணித்து சற்று நேரம் படிப்பவர்களின் ஞாபகத்தில் இளைப்பாறி ,சிரித்த முகத்தோடு கடந்து சென்றுவிடும் !நிறைய சந்தோஷத்தை மிச்சமிட்டுவிட்டு !
தத்தி தத்தி நடைபழகி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பதிவுகள்,சிறுகதைகள், 5 இணைய புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார்.படிப்பாளர்களின் கருத்துகளே சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கும், உங்கள் கருத்துக்கள் இவரது படைப்புகள் இன்னும் மெருகேற உதவும். ஆகவே உங்கள் கருத்துக்களை படித்துவிட்டு பதிவு செய்யுங்க.
Notionpress
வலைதளத்திலும்,2019 நடக்கும் புத்தக கண்காட்சியிலும் Notionpress புத்தக
ஸ்டாலிலும் இவரது படைப்புகள் புத்தக பிரதிகளாக கிடைக்கும்.

வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅறிமுகத்திற்கு நன்றி. வாழ்த்துகளும்..
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
துளசிதரன், கீதா
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றி துளசி சகோ & கீத்ஸ்
நன்றி ஜெயக்குமார் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!