எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 ஜூன், 2015

கிழக்குப் பறவைகள்.



3.4.86.

4.*அறியாமைதான்
நிரப்பப்படவேண்டும்
என்றிருந்தால்
என்னுடைய குடங்கள்
காலியாகவே இருக்கட்டும்.

*கிழக்குப் பறவைகள்
மேற்கு நோக்கிப்
பறப்பதிலும்
சிறகைச் சிதைத்துக்கொள்ளும்.

*நிகழ்வதைகள் பார்த்து
அடுப்பில் கரண்டியாய்
மனம்.

*கம்பீர யானைகள்
குழியுள்ளும் வீழ்வதில்லை
வலைகளுள்ளும் சிக்கிக்கொள்வதில்லை,
என்றும் சூரியன்
கிழக்கே உதிப்பதைப் போல.


8 கருத்துகள்:

  1. வரிகள் ஒவ்வொன்றும் அருமை.. அதோடு தலைப்பும்தான்.

    பதிலளிநீக்கு
  2. முதலாவதும் மூன்றாவதும் மிகவும் பிடித்துள்ளன. 1986லேயே எழுதியுள்ளது தனிச்சிறப்பு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அதீத சிந்தனையில் விளைந்த
    கவிதைகள் அத்தனையும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. முதலில் தலைப்பு கவித்துவமாக இருக்கின்றது சகோதரி!

    *நிகழ்வதைகள் பார்த்து
    அடுப்பில் கரண்டியாய்
    மனம்.

    *கம்பீர யானைகள்
    குழியுள்ளும் வீழ்வதில்லை
    வலைகளுள்ளும் சிக்கிக்கொள்வதில்லை,
    என்றும் சூரியன்
    கிழக்கே உதிப்பதைப் போல.// கலக்கிட்டீங்க போங்க!!!!!! எப்படி சகோதரி இப்படி எல்லாம் மிக மிக அழகாக கவிதை புனைகின்றீர்கள்! எங்களுக்கும் கவிதைக்கும் எட்டா கனி!!

    பதிலளிநீக்கு
  6. நன்றி செல்லபாண்டியன்

    நன்றி விஜிகே சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி ரமணி சார்

    நன்றி தளிர் சுரேஷ்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ் உங்க படைப்புகளில் குறும்படம் எனக்கு எட்டாக் கனி சகோஸ்:)

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...