எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 ஜூன், 2015

சகடை.



28.3.86


1.சகடை உருண்டது
விடியலின் வெளிப்பாடாய்.

காற்றின் இரத்தம்
இலைகளில் உறையும்.

( மனசு )
மாமரத்துக் காகங்கள்
திசைக்கொன்றாய்.

ஈக்கள் ஈக்கள்
கையிலும் காலிலும்
நெளிகின்ற நூலாய்
எறும்புகள்.

( வறுமை )
அவிந்த அடுப்புகள்
அலங்காரக்கொண்டைகளுடன்.

சூரியத்தறி
சரிகையாய் நெய்யும்.

தினம் நடந்து
பரிதிகள் களைக்கும்.

சகடை சகடையாகும்
சத்தம் நீக்கி.

7 கருத்துகள்:

  1. 23.03.1986 !!!!!

    எழுதிய கைப்பிரதி இன்னும் பத்திரமாக .... பொக்கிஷமாக ! :)

    நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. கவிதை தாங்கிய காகிதம்
    பழுப்பேறிப் போனாலும்
    கவிதை இன்னும் பளபளப்பாய் இருப்பதே
    கவிதையின் சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கடுகுகள் ஆனாலும்
    சுவையினில்
    இனிமையில்
    பிரமாண்டமாக

    பதிலளிநீக்கு
  4. அருமையாக இருக்கின்றது சகோதரி! சிறு வயது முதலே கலக்கல்தானோ....

    பதிலளிநீக்கு
  5. நன்றி விஜிகே சார்.

    டிடி சகோ இது கல்லூரிப் பருவத்தில் எழுதிய கவிதை. தற்போது வந்துள்ள சகடை திரைப்படம் பற்றி அல்ல :)

    நன்றி ரமணி சார்

    நன்றி முருகானந்தம் சார்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...