விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை விளையாட்டுக்குரியதல்ல என்கிறார் மதிப்பிற்குரிய நண்பர் குமரன் கருப்பையா.
கரூர் மாரத்தான், கிரிக்கெட் பற்றி தமிழ்க் குஷி எஃப் எம்மில் கிரிக்கெட் ஃபீட்ஸ், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத் திறப்புவிழா என்று அதிரடியாக விளையாட்டிலும் விளையாட்டுச் செய்திகளைப் பேசுவதிலும் பகிர்வதிலும், கலந்து உரையாடுவதிலும் அதற்காகப் பாடுபடுவதிலும் முதலிடத்தில் இருப்பவர் நண்பர் குமரன் கருப்பையா.தமிழ்க் குஷி எஃப் எம்மில் ஆர் ஜேயாக பணிபுரிவது தனக்குப் பிடித்த ஹாபி என்பார் குமரன்.
இந்த வருட மகளிர் தினத்தன்று எங்களிடம் ( 8 முகநூல் தோழிகள் ) பேட்டி எடுத்து அதை சிறப்பாக எடிட் செய்து வெளியிட்டு எங்களைப் பெருமைப்படுத்தியவர். மிகப் பண்பானவர். எங்களைப் போன்ற மிகப்பலரின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நண்பர். குமார் கரு என்று முன்பு தனது பேரை வைத்திருந்தார். ஒரு வேளை கரூரோ என நினைத்தால் தனது தந்தையார் கருப்பையாவின் பேரை அப்படி வைத்ததாகக் கூறினார். அடுத்து உடனே குமரன் கருப்பையா என முழுமையாகப் பெயரை ப்ரொஃபைலில் வைத்துவிட்டார். :)
கால்பந்துக் கோப்பைக்கான போட்டிகள் என்றாலே எனக்கு அர்ஜெண்டினாவின் மாரடோனா ஒருவரைத்தான் தெரியும். அடுத்து குமரன் கருப்பையாவின் இண்ட்ரெஸ்டும் அதுதான் எனத் தெரிந்துகொண்டேன். ஆனாலும் க்ரிக்கெட், அரசியல், நட்பு, நாட்டு நடப்பு( அவ்வப்போது உப்மா, சட்னி ) எல்லாம் பேசி முகநூலைக் கலகலப்பாக்குவார் குமரன். சொல்வளமும் நயமும் ரசிக்க வைக்கும் :)
அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே போஸ்டுக்காக நேற்று இரவு. 8 மணிக்கு உங்களுக்கு விருப்பமான தலைப்பில் எழுதிக் கொடுங்கள் எனக் கேட்டதும் உடனே எழுதிப் புகைப்படமும் அனுப்பி விட்டார். அவரது விளையாட்டு பற்றிய ஆர்வம் மட்டுமல்ல ஆதங்கமும் மனதைத் தொட்டது. உரியவர்களுக்கு இது போய்ச்சேர்ந்து தேவையானது நடந்தால் நல்லது.
///இந்தியாவில் விளையாட்டு///
உலக வரைபடத்தில் உடனே தெரியாத அளவிற்கு மிகச்சிறிய நாடுகள் கூட ஒலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கங்கள் வாங்கிக்கொண்டு இருக்கையில், உலகத்தின் இரண்டாவது மக்கள்தொகை கொண்ட இந்தியா, ஒரே ஒரு தங்கப்பதக்கம் வாங்கவே போராடவேண்டியுள்ளது குறித்து நாம் எத்தனை பேர் உளமார கவலைப்பட்டுள்ளோம் ?!
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்ற வார்த்தைகள் தான் ஒவ்வொரு முறை ஒலிம்பிக் பதக்கபட்டியலில் நம் நாட்டைக் காணவில்லையே என நாம் தேடும் பொழுது மனதில் ஒலிக்கிறது.. நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்ட பொழுது இருந்த வசதிகள் தான் இன்னமும் இருக்கிறது என்று சொன்னால் நம்ப சற்று கடினமாகவே இருக்கும்.. ஆனால், உண்மை அது தான்.. சிறந்த / தற்கால சூழலுக்கு ஏற்ற மைதானங்கள் இல்லை, விளையாட்டு உபகரணங்கள் இல்லை, அதற்கு பயிற்சி கொடுக்கும் சிறந்த பயிற்றுனர்கள் இல்லை.. எல்லாவற்றையும் தாண்டி கிரிக்கெட், இறகுபந்து தவிர மற்ற விளையாட்டுகளுக்கு நமது நாட்டில் மதிப்பே இல்லை, நமது தேசிய விளையாட்டான ஹாக்கியும் சேர்த்தே இந்த அவமதிப்புக்குள்ளாகிறது.
ஏன் இந்த குறைபாடு, அரசாங்கம் பணம் ஒதுக்கவில்லையா, அரசாங்கத்திற்கு அக்கறை இல்லையா, நமது மக்களுக்கு அக்கறை இல்லையா, யார் மீது தவறு என யோசித்துப் பார்த்தால் தெரியும் சில விடைகளில் முக்கியமானது.., எந்த விளையாட்டு வீரர்களுக்கும் முறையான அங்கீகாரம் இல்லை என்பது பிரதானமாக தெரிகிறது.. தானே தனது சொந்த உழைப்பில் மாநில அளவில் முதலிடம் பெறும் விளையாட்டு வீரனுக்கு அரசு என்ன கவுரவம் செய்கிறது என்று பார்த்தால், எதுவுமே இல்லை.. அவனது வாழ்க்கை அதோடு முடிந்தே போகிறது.. விளையாட்டு வீரர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்புகளை தமிழக அரசு நிறுத்தி வைத்து 20 ஆண்டுகள் ஆகப்போகிறது என்றால் நாம் உணரலாம் நிலைமையை. அதற்கு பிறகு வரும் வீரர்கள், தனது ஆர்வத்தை குறைத்து, படிப்பு மட்டுமே வாழ்க்கை என்ற முடிவிற்கு வரும் காரணமே இன்று விளையாட்டு வீரர்களின் சாதனைகளுக்கு ஒரு தேக்கநிலையாக உள்ளது.
பாடப்புத்தக அரசியல் போக்கு திசை திரும்பி இன்று பள்ளிகளில் மைதானம் என்பதே இல்லை என்றாகிவிட்டது.. விளையாட்டுக்கு மாணவர்கள் வருவதும் இல்லை, அப்படியே வந்தாலும் அதெல்லாம் பத்தாம் வகுப்போடு சரி என்று ஆகிவிட்டது.. விளையாட்டுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து, விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு அங்கீகாரம் அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் ஏற்படுத்தித்தந்தால் தான் இந்த நிலை மாறும்..
இந்தியா முழுதும் விளையாட்டுக்கு உரிய மதிப்பு வந்தாகவேண்டும்.. கண்டிப்பாக இந்தியா ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கோலோச்சி வெற்றி கொடி நாட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..
க. குமரன், செயலாளர், கரூர் மாவட்ட கால்பந்து செயலளார், கரூர்.
டிஸ்கி :-மிகச் சரியாகச் சொன்னீர்கள் குமரன். படித்து மிக வருத்தத்தில் ஆழ்ந்துவிட்டேன். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதற்கேற்ற சலுகைகள், வேலைகள் கிடைப்பதில்லை., மேலும் முக்கியமாக இன்றையப் பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லை என்பதும் வருந்தத்தக்க அதிர்ச்சியூட்டும் செய்திதான். அதேபோல் குறிப்பிட்ட விளையாட்டுகள்தான் பெரிதளவில் விளம்பரப்படுத்தப்பட்டு மக்களைச் சென்றடைகின்றன. இதை ஊடகங்கள் ( தொலைக்காட்சி, பத்ரிக்கைகள் ) கவனத்தில் கொள்வது நலம் பயக்கும்.
///இந்தியன் என்ற உணர்வு உலகிலேயே உன்னதமானது !. கிண்டல்களுக்கு அப்பாற்பட்டு வொண்டர்கள் செய்கிறான் இந்தியன் !! . இந்தியன் என்ற உணர்வு உலகிலேயே உன்னதமானது !!! . /// என்று சொல்லி இருக்கிறார் குமரன் தன் முகநூல் பக்கத்தில் ஒரு கவர் பிக்சரில்.
உண்மைதான் குமரன். இந்தியன் என்ற உணர்வு உன்னதமானதுதான். ! அதே சமயம் நீங்க சொல்லி இருப்பது போல ‘ INDIAN BY HEART & CHENNAI BY BLOOD " என்பது அதி உன்னதமானது.
நிச்சயமாக நீங்கள் சொல்லியுள்ளபடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விளையாட்டு வீரர்களின் வாழ்வு விளையாட்டுக்குரியதல்ல என்பது உணரப்பட்டு அரசாங்கம் வழி காட்ட வேண்டும். படிப்பு மட்டுமே முக்கியமல்ல . விளையாட்டு போன்றவையும் வாழ்க்கையை ஆரோக்கியமாக வைக்கிறது உலக அரங்கில் நம் மதிப்பை உயர்த்துகிறது என்பதை மக்களும் உணரவேண்டும்.

சாட்டர்டே போஸ்டுக்காக அரிய தகவல்களைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி குமரன். :)
குமரன் கருப்பையா அவர்களைப் பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி...
பதிலளிநீக்குபுதிய அறிமுகம்....குமரங்கருப்பையா ! அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
பதிலளிநீக்குநன்றி துளசி சகோ & கீத்ஸ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!